பாக்கியலட்சுமி: கோபிக்கு செருப்படி கொடுத்த பாக்யா.. ராதிகா கேட்ட கேள்வி.. சப்போர்ட் செய்யும் ஜெனி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி பற்றிய உண்மைகளை ராதிகா முன்பு பாக்யா போட்டுடைக்கிறார். அதோடு கோபியை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நேருக்கு நேராக சவால் விடுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான காட்சிகள் இன்றைய எபிசோடில் நடந்தது. நேற்றைய எபிசோடில் கோபி தான் பிரியாணி சமைக்கும் போது கெட்டுப்போன இறைச்சியை கலக்க சொன்னது என்ற உண்மை செஃப் மூலமாக எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் பாக்கியா ரெஸ்டாரண்டில் நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு நேராக கோபி வீட்டிற்கு போகிறார்.

மறுபக்கத்தில் எழில் பாக்கியா வீட்டிற்கு வர அங்கு பாக்கியா இல்லை. செழியனும் இனியாவும் எங்களை விட அம்மாவுக்கு ரெஸ்டாரண்ட்தான் முக்கியம். நேற்றிலிருந்து போன் எடுக்கலை. எழில் பங்க்ஷனுக்கு கூட வரல என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ஜெனி எழிலின் பட பூஜைக்கு அம்மா வரல என்றால் அங்கு ஏதோ நடந்திருக்கு என்று பாக்யாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.

அப்போது எழில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக கண்கலங்கியபடி இருக்கிறார். ஆனாலும் செழியனும் இனியாவும் எத்தனை முறை பட்டாலும் திருந்தாமல் பாக்யாவிற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்டத்தில் கோபி ஃபோனையே பார்த்துக் கொண்டே இருக்கிறார். பாக்யாவின் நியூஸ் எப்ப வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது தன்னுடைய நண்பரை பார்த்து ரெஸ்டாரண்டை இழுத்து மூட வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் உன்னை பார்க்கவே எனக்கு பயமா இருக்கு நீ இப்போ ரொம்பவும் மாறிட்ட என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோபி தன்னுடைய மாமியாரிடம் இன்னைக்கு ஸ்பெஷலா சமைக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பாக்கியா கதவை தட்டுகிறார்.













Click it and Unblock the Notifications