வக்கிர புத்தியை காட்டிய கோபிக்கு விழுந்த அடி.. ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா பல போராட்டத்திற்கு பிறகு கவர்மெண்ட் காண்ட்ராக்ட் ஆர்டரை பெற்று விடுகிறார். ஆனாலும் கோபி அபசகுனமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதுபோல பாக்கியாவும், ராதிகாவும் மீண்டும் ஒன்றாக சேருகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த பாக்கியா அனைவரிடமும் தனக்கு கவர்மெண்ட் காண்ட்ராக்ட் கிடைத்து விட்டதாக சொல்லி சந்தோஷப்படுகிறார். அப்போது தோபியும், ஈஸ்வரியும் மட்டும் பாக்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அது எப்படி உனக்கு தவறி போன காண்ட்ராக்ட் மீண்டும் கிடைக்கும் என்று இருவரும் கேட்டுக் கொண்டிருக்க அப்போது நடந்த கதை எல்லாவற்றையும் பாக்கியா சொல்கிறார்.
அதோடு இன்னும் 50,000 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல, உடனே கோபமான ஈஸ்வரி இதுல எனக்கு உடன்பாடு இல்ல என்று சொல்கிறார். கூடவே கோபியும் ஏத்தி விடுகிறார்.. நீ கை வச்ச காரியம் எது நல்லா வந்து இருக்கு? என்று பாக்யாவை கோபி அவமானப்படுத்துகிறார். அதற்கு எழிலும் ராமமூர்த்தியும் பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் பேங்கிற்கு போய் ஐம்பதாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து ராமமூர்த்தி கொடுக்கிறார். ஆனாலும் மீண்டும் பாக்கியாவை இந்த விஷயத்தில் ஈஸ்வரி திட்டிக்கொண்டே இருக்கிறார். அதோடு காண்ட்ராக்ட் விஷயத்தில் மட்டும் ஏதாவது தலைகீழா நடந்தால் நான் உன்கூட பேசவே மாட்டேன் என்று சென்டிமென்டாக மிரட்டவும் செய்கிறார். மறுபக்கத்தில் காண்ட்ராக்ட்டை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பாக்யா எழில் பழனிசாமி ஆகியோர் காத்திருக்கின்றனர்.
அப்போது காண்ட்ராக்ட் கொடுக்க வந்தவரிடம் அதை செக் பண்ணி கடைசியில் வாங்குகின்றனர். ஒரு வழியாக பாக்யா கைக்கு காண்ட்ராக்ட் வந்ததும் பாக்யா சந்தோஷப்படுகிறார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் பாக்கியா எழில், செல்வி, அமிர்தவோடு தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். அப்போது செல்வியிடம் பாக்கியா நம்ம கிட்ட வேலை பார்க்கிறவங்க எல்லாரையும் நாளைக்கு வர சொல்லிரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ராதிகா சமையலறைக்கு தண்ணீர் பிடிக்க வருகிறார். அப்போது ராதிகாவை பார்த்ததும் செல்வி அக்கா இனிமேல் நாங்க சந்தோஷமா வேலை செய்யலாம் யாரும் குறை சொல்ல முடியாது என்று சொல்ல, அதைக் கேட்ட ராதிகா பாக்யா பக்கத்தில் வந்து நின்று கை கொடுத்து வாழ்த்துக்கள் என சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications