பாக்கியலட்சுமி: பாக்யா குடும்பத்திடம் நறுக்குன்னு கேட்ட கமலா.. கோபியின் மனமாற்றம்.. பாவம் ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவின் வீட்டிற்கு சென்ற ராதிகாவின் அம்மா கமலா, மொத்த குடும்பத்தினரையும் திட்டுகிறார். அதே நேரத்தில் கோபி செய்த செயலால் ராதிகா கடும் கோபத்தில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா வீட்டில் வந்து திட்டிட்டு போனதை நினைத்து ராதிகா அழுது கொண்டிருக்கிறார். அப்போது இனியா மற்றும் ஜெனியை கமலாவும் சேர்ந்து திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி அங்கு வருகிறார். கோபியிடம் இனியா வீட்டிற்கு வந்து ராதிகாவை திட்டியது பற்றி சொல்கிறார்.

ராதிகாவை கல்யாணம் செய்ததால்தான் குடும்பத்தின் நிம்மதி எல்லாம் போய்விட்டது என்று திட்டிட்டு போறா என்று சொன்னதும் கோபி இனியா அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டாளே.. அவள் ஏதோ வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவளிடம் பேசிட்டு வரேன் என்று கிளம்பி போகிறார். இதனால் கமலா ராதிகாவிடம் உனக்கு ஆறுதல் சொல்லாமல் அங்கு போகிறாரே என்று சொல்கிறார். இதை தொடர்ந்து பாக்யா வீட்டிற்கு போன கோபி இனியா உடன் பேச வேண்டும் என்று அமைதியாக கேட்கிறார்.
ஈஸ்வரியிடமும் பாக்யாவிடமும் சொல்லிவிட்டு இனியாவை காரில் ஏற்றி செல்கிறார். கமலா நேராக பாக்கியா வீட்டிற்கு சென்று இனியா வீட்டிற்கு வந்து சொன்ன விஷயங்களை பற்றி சொல்கிறார். இனியா கோபி வீட்டிற்கு போனது பாக்யாவிற்கு எதுவும் தெரியாததால் பாக்யா முதலில் அதிர்ச்சி அடைகிறார். அதற்கு ஈஸ்வரி, இனியா சொன்னதில் எந்த தப்பும் இல்லை.

உன் பொண்ணை என் பையன் கல்யாணம் பண்ணுன பிறகு தான் எங்க குடும்பத்தோட நிம்மதியே போயிடுச்சு என்று திட்டுகிறார். அதற்கு கமலா நீங்க ஒரு பச்சோந்தி, அப்போ மகனே இல்லை என்று சொல்லிட்டு இப்போ உங்களுடைய மகன் என்று கொண்டாடுறீங்களா? என்று திட்டுகிறார். இதனால் ஈஸ்வரி நான் உன்னை கழுத்தை புடிச்சு வெளியில தள்ளுறதுக்கு முன்னாடி வெளியே போயிடு என்று கோபப்பட்டு திட்டுகிறார்.
அப்போது பாக்யாவும் பிரச்சனை பண்ணாமல் வெளியே போங்க என்று சொல்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த கமலாவிடம் ராதிகா கோபியை நான் கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது, முதலில் கல்யாணம் பண்ணி இருந்த ராஜேஷ் குடிச்சிட்டு தான் பிரச்சனை பண்ணுனான் ஆனால் இப்போ கோபியால எனக்கு தினம் தினம் பிரச்சனை தான். என்னால மயூவும் பாதிக்கப்படுறா... இனி நான் எதிலும் தலையிட போறது இல்லை என்று எழுந்து செல்கிறார்.
கடைசியாக கோபி இனியாவை காரில் கூட்டிக்கொண்டு செல்கிறார். அப்போது காலேஜில் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்ட வீடியோ என்று எல்லோரும் என்னை கிண்டல் பண்றாங்க என்று இனியா அழுகிறார். அதற்கு கோபி நானும் அந்த நேரத்தில் அப்படி சண்டை போட்டிருக்கக் கூடாது என்று மன்னிப்பு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications