பாக்கியலட்சுமி: கோபியை வீட்டை விட்டு துரத்திய ராதிகா.. பாக்யா கேட்ட கேள்வி.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேட்ட கேள்விகளை நினைத்து கோபி வருத்தத்தில் இருக்கும்போது, ராதிகாவோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா, கோபியிடம் மனம் விட்டு பேசுகிறார். பிறகு லேட்டாகிவிட்டது என்று வீட்டிற்கு செல்ல அங்கு வாசலில் பாக்கியா காத்துக் கண்டிருக்கிறார். அப்போது கோபி பாக்யாவை கூப்பிட்டு நம்ம பிள்ளைகளை பார்த்துக் கொள் என்று சொல்கிறார்.

இதைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற கோபியிடம் உங்களுக்காக தான் நான் இவ்வளவு நேரம் தூங்காம வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு கோபி நேரமாச்சு நீ போய் தூங்கு என்று சொல்கிறார். அதனால் கமலா உங்க அப்பாவுக்கு உன்னை விட நிறைய விஷயம் இருக்கு என்று குத்தி காட்டுகிறார்.
நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் காதலி, அவரை விட இத்தனை வயது பெரியவரா?
அதோடு ராதிகாவும் உங்க பொண்ணு என்ன பார்த்து என்னெல்லாம் பேசிட்டு போனா... அதை பத்தி உங்களுக்கு ஒரு கவலை கூட இல்ல... நான் வருத்தத்தில் இருப்பேன் என்று எனக்கு ஆறுதல் சொல்ல கூட நீங்க இல்லையே என்று சண்டை போட அதற்கு கோபி என்னால இப்போதைக்கு பேசுற அளவுக்கு தெம்பு இல்ல என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா பொண்டாட்டிக்கு ஒன்னுன்னா கேட்பதற்கு முடியலன்னா நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணுனீங்க என்று கேட்க, அதற்கு கோபி இன்னைக்கு தான் இனியா மனம் விட்டு பேசினா நான் அவங்கள சந்தோஷமா வச்சுக்கிட்டேன் என்று நினைச்சேன். ஆனா எவ்வளவு ஹர்ட் பண்ணி இருக்கிறேன்.. நான் அவங்க கூட இருக்கும்போது தான் சந்தோஷமா இருந்தேன் என்று இனியா சொன்னது உண்மைதான்.
உன்ன கல்யாணம் பண்ணதுல இருந்து எல்லாமே நாசமா போச்சு... பிசினஸ் போச்சு, என் சந்தோஷம் போச்சு என்று ராதிகாவுக்கு பதில் அடி கொடுக்கிறார். அதற்கு ராதிகாவும் நானும் உங்களை கல்யாணம் பண்ணி அவமானப்பட்டேன் என்று சொல்கிறார்

பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கும் போது உங்களை இங்கே யாரும் இழுத்து பிடிச்சு வைக்கல.. நீங்க இங்க இருக்க விருப்பம் இல்லன்னா வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று ராதிகா கோபியிடம் கோபமாக சொல்கிறார் இதனால் கோபி கோவப்பட்டு நான் ஒரேடியா வீட்டை விட்டு போகிறேன் என்று வெளியே கிளம்பி செல்கிறார்.
மறுபக்கத்தில் இனியா அப்பாவிடம் எங்களுடைய மனதில் இருப்பதை எல்லாம் பேசினேன் என்று கடற்கரையில் என்ன நடந்தது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா நீ ராதிகா வீட்டுக்கு இனி சண்டை போட போக கூடாது என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications