வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட பாக்கியா.. சபதம் போட்ட மாலினி.. ஜெனி கேட்ட கேள்வி.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் மூன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் செழியன் போனிற்கு மாலினி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்களை பாக்கியா கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

அதே நேரத்தில் மாலினிக்கு அட்வைஸ் பண்ணுவதற்காக போன பாக்கியாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியாவிற்கு காய்ச்சலாக இருப்பதால் பாக்கியா சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அதற்கு இனியா நான் உன் கூட பேசவே மாட்டேன். நீ என்னுடைய அம்மாவே இல்லை. நீ கெஸ்ட் மாதிரி வந்துட்டு போயிட்டு இருக்க. எனக்கு உடம்பு சரியில்லாத போது கூட உன்னால என்கூட இருந்து பார்க்க முடியலையா என்று திட்ட, அதற்கு பாக்கியா வழக்கம் போல சமாதானம் பண்ணுகிறார்.
அப்போது கோபி அங்கு வர இனியா, அப்பா நீங்களாவது என் கூட இருங்க என்று கேட்க அதற்கு கோபி நான் உன் கூடவே தான் டா இருப்பேன் செல்லம் என்று ஐஸ் வைக்கிறார். அதை தொடர்ந்து ஜெனி பாக்கியாவிடம் நீங்க எதுக்காக செழியனிடம் போன் வாங்கினீங்கன்னு தெரியல. ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு. இப்போ அவர் நல்லபடியா இருக்கிறார் என்று சொல்ல, பாக்கியா எல்லாம் சீக்கிரமா சரியாயிடும். இதுவே உனக்கு பழகிடும் என்று சொல்கிறார்.
அடுத்ததாக செழியன் பாக்யாவிடம் அம்மா மாலினி எதுவும் போன் பண்ணுனாளா என்று கேட்க, அதனால் கோபமான பாக்கியா, ஏன் போன் பண்ணனுமா? பாக்கணும் போல இருக்கா? போய் பாத்துட்டு வரியா? என்று உள்குத்தோடு கோபமாக கேட்க அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் செழியன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

அதை தொடர்ந்து போனை ஆன் செய்து பாக்கியா பார்க்க அங்கு மாலினி நிறைய வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதை எல்லாம் பாக்கியா கேட்டு கோபப்படுகிறார். அதில் செழியன் உன்னை பார்க்கணும் போல இருக்கு. உடனே வீட்டுக்கு வா நீ வீட்டுக்கு வரலைன்னா நான் உன் வீட்டுக்கு வந்து எல்லா உண்மையும் சொல்லிடுவேன்.
நம்ம சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோ எல்லாம் காமிப்பேன். உன் போட்டோவை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல, அதைக் கேட்டதும் பாக்கியா செழியன் எந்த தப்பும் பண்ணலன்னு சொன்னான். ஆனா இப்படி போட்டோஸ் இருக்கே என்று அதிர்ச்சி அடைகிறார். அதைத் தொடர்ந்து ஒன்பது மணிக்கு கோவிலுக்கு வா என்று செழியன் அனுப்பியது போலவே மெசேஜை பாக்கியா அனுப்ப அதை நம்பிய மாலினி கோயிலுக்கு வருகிறார்.
அப்போது அங்கு பாக்கியாவும் வந்து நான் தான் செழியன் போனிலிருந்து உன்னை வரச் சொன்னது என்று சொல்லி, நீ ஏன் செழியனை டார்ச்சர் பண்றா, அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கு, குழந்தை இருக்கு. அவனை விட்டுட்டு என்று கேட்கிறார். அதற்கு மாலினி எனக்கு ஆரம்பத்துல செழியனுக்கு கல்யாணம் ஆனது தெரியாது. கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியும்.
இருந்தாலும் செழியனும் நானும் லவ் பண்ணனும். என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருந்தாரு. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்தோம் என்று சொல்ல, அதை எல்லாம் கேட்டு பாக்யா அதிர்ச்சி அடைந்து என் பையன் பன்னுனது தப்பு தான். ஆனா இனிமே உன் பக்கம் வராத அளவிற்கு நான் பார்த்துக்கிறேன்.

அவனை விட்டுடு என்று கெஞ்சி கேட்க, அதற்கு மாலினி நான் இன்னொரு பெண்ணுடைய வாழ்க்கையை பறிக்கிற ஆள் கிடையாது. ஆனால் செழியனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பி போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications