வீட்டிற்கே வந்த மாலினி.. செழியனுக்கு விழுந்த அடி.. ராதிகா செய்த குழப்பம்.. கோபத்தில் ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 4ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் செழியன் தன்னிடம் எந்த தப்பும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு மாலினியோடு புகைப்படம் எடுத்ததை பார்த்ததும் அது பற்றி பாக்கியா செழியனை போட்டு அடிக்கிறார்.

அதே நேரத்தில் மாலினி வீட்டிற்கு செழியனை தேடி வந்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial November 4th 2023 promo and episode full episode

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா காய்ச்சலால் தனியாக அமர்ந்திருக்கிறார். அப்போது ஈஸ்வரி பாக்யா எங்கு போய்விட்டார். ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்ல அதைக்கூட அவளுக்கு கவனிக்க டைம் இல்லையா? என்று வழக்கம்போல திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அமிர்தா மாத்திரை போடாமல் இருந்தால் எப்படி காய்ச்சல் குறையும் என்று சொல்லி மாத்திரையை கொண்டு வந்து கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்யா கோவிலில் இருந்து வீட்டிற்குள் வருகிறார். அப்போது இனியா உனக்கு தான் என்னை பற்றி கவலையே இல்லையே என்று எப்போதும் போலவே இந்த முறையும் திட்ட அதற்கு பாக்கியா சமாதானம் செய்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு இருக்கும் செழியனை அழைத்து நீ வா கொஞ்சம் உன் கூட தனியா பேசணும் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார்.

அதற்கு நான் செழியனிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு ரூமிற்கு தனியாக கூட்டிட்டு போய் இப்பதான் மாலினியை பார்த்துட்டு வந்தேன் என்று பாக்கியா சொல்ல, அதற்கு செழியன் எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் பண்ணலமா என்று பச்சப்பிள்ளையட்டும் பேசுகிறார். இதனால் கோபமான பாக்கியா போட்டோவை எடுத்துக்காட்டி செழியனை போட்டு அடிக்கிறார்.

உனக்கு தெரியாம தான் அப்ப இந்த போட்டோ எடுத்திருந்தா, நீ இவ்வளவு நெருக்கமாய் இருக்க, அப்பாவுக்கு புள்ளை அப்படியே தப்பாமல் பிறந்திருக்க, மரியாதையா இந்த விஷயத்தை ஜெனி கிட்ட சொல்லி மன்னிப்பு கேளு என்று மிரட்டி விடுகிறார். இதனால் செழியன் அதிர்ச்சியில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா கிச்சனில் செல்வியோடு பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு வரும் ராதிகா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்து ஒவ்வொரு டப்பாக்குள்ளும் போடுகிறார்.

Baakiyalakshmi Serial November 4th 2023 promo and episode full episode

அதோடு பாதி பொருட்கள் காலியான மாதிரி இருக்கு. அதான் வாங்கிட்டு வந்தேன் நானும் சமைக்கிறேன். எனக்கும் இடையில் கொஞ்சம் டைம் தந்தால் கோபிக்கும் எனக்கும் சமச்சிடுவேன் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் எழில் பாக்யாவுக்கு பணம் கொடுக்கிறார். அதற்கு பாக்கியா அதெல்லாம் வேணாம் நீயே வச்சுக்கோ உன்னை நிலா தேடுதா, நீ போ என்று எழிலை அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கத்தில் செழியன் மாலினி விஷயத்தை பற்றி ஜெனியிடம் சொல்லப் போகிறார். ஆனால் சொன்னால் என்ன நடக்கும் என்று மனதிற்குள்ளேயே போராடி மனதிற்குள்ளேயே மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார். அதை தொடர்ந்து பாக்கியா ஈஸ்வரிக்கு மட்டும் காபி கொண்டு வந்து கொடுக்க, அதனால் ஈஸ்வரி எனக்கு காபி வேண்டாம் என்று சொல்ல அங்கிருக்கும் கோபி தனக்கு ராதிகா போட்டு தந்த காபி குடித்து விட்டதாக சொல்கிறார். இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது அன்று வீட்டிற்குள் கோபமாக மாலினி வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+