பாக்கியலட்சுமி: கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த எழில்.. அப்போ எல்லாமே பிளான் தானா? பாக்யாவுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவை எழிலின் பட பூஜையில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்ன கோபிக்கு எழில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மகனை நினைத்து பாக்கியா கண்ணீர் சிந்தி இருக்கிறார். என்ன நடந்தது பாக்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். அங்கு வந்ததும் உன் எழிலிடம் நான் உனக்காக கோயிலுக்கு போயிட்டு வந்தேன் என்று திறுநீரு வைத்துவிட்டு வா உள்ளே போகலாம் என்று கூப்பிட, எழில் நீ நான் என்ன சொன்னாலும் கேட்பதானே அம்மா என்று கேட்க, அதற்கு பாக்கியா ஆமா எனக்கு எப்போதும் உன்னுடைய சந்தோசம் தான் முக்கியம்.

சொல்லு எழில் என்ன செய்யணும் என்று கேட்க, நான் சந்தோஷமா இருக்கணும் என்றால் நீ இந்த ஃபங்ஷனில் கலந்து கொள்ள வேண்டாம் வெளியே போயிருமா.. என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகி இருக்கிறார். அதோடு நீ உள்ளே வந்தால் பங்க்ஷன் நடக்காது நீ வெளியே போயிருமா என்று சொல்ல பாக்கியா எதுவும் சொல்லாமல் வெளியே போகப் போகிறார்.
அப்போது அமிர்தா ஓடி வந்து அம்மா எங்க போறீங்க உள்ள வாங்க என்று கூப்பிட போகிறார். ஆனால் எழில் அமிர்தாவை கையை பிடித்து தடுத்து விடுகிறார். அம்மா போகட்டும் விட்டுவிடு என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் உள்ளிருந்து ஒரு நபர் வந்து உங்களை பங்க்ஷனில் கூப்பிட்டாங்க என்று கூப்பிடுகிறார். எழில் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு வருகிறார்.

அப்போது புரொடியூசர் எல்லாரும் வந்தாச்சா? பங்ஷனை தொடங்கிடலாமா? என்று கேட்க, எல்லாரும் வந்தாச்சு என்று எழில் சொல்கிறார். அப்போது செழியன், ஜெனி, இனியா எல்லோரும் அம்மா இன்னும் வரலையே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு எழில் அவங்க வர மாட்டாங்க என்று சொல்கிறார். ஆனாலும் செழியன், அமிர்தா என எல்லோரும் பாக்யாவுக்கு போன் செய்து கொண்டிருக்கின்றனர்.
பாக்யா போனை எடுக்கவில்லை. அழுது கொண்டே ஹோட்டலை விட்டு வெளியே போகிறார். அப்போது இதையெல்லாம் பார்த்து கோபி சந்தோஷப்படுகிறார். பிறகு பங்க்ஷன் தொடங்கப்படுகிறது. அப்போது திரைப்படத்திற்கான டைட்டில் சொல்லிவிடலாம் என்று ஒரு ஸ்கிரீனை இழுக்க அங்கு படத்தின் டைட்டில் தெரிகிறது. அதில் பாக்கியலட்சுமி என்ற படத்தின் பெயர் இருப்பதை பார்த்து கோபி அதிர்ச்சி ஆகிறார்.

அதுபோல வாசலில் வந்த பாக்கியா அங்கு ஒட்டப்பட்டு இருக்கும் பேனரில் பாக்கியலட்சுமி என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஹோட்டலுக்குள் எழில் மைக்கில் பேசுகிறார். அப்போது என்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய அம்மா தான். ஒவ்வொரு இடத்திலும் நான் சோர்ந்து போகும்போதெல்லாம் உன்னால் முடியும் என்று எனக்கு தன்னம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தாங்க.

நான் இந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் என்னுடைய அம்மா மட்டும்தான் அதற்குக் காரணம் என்று சொல்ல, இதை எல்லாம் பார்த்து கோபி கோபத்தில் இருக்கிறார். குடும்பத்தினர் எல்லோரும் எழில் பேசுவதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications