பாக்கியலட்சுமி: கோபி கொடுத்த பிரச்சனை.. பாக்யாவுக்காக சப்போர்ட்டுக்கு வரும் ராதிகா! கதறி அழுத ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் சாப்பாடு தரம் இல்லை என்று சொல்லி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதால் போலீஸ் சீல் வைத்து விட்டு சென்று விட்டனர். அதே நேரத்தில் பாக்யாவிற்க்கு சப்போர்ட்டாக ராதிகா கோபி இடம் வாக்குவாதம் செய்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியாவின் ஈஸ்வரி ரெஸ்டாரண்ட்க்கு மூன்று நாட்கள் சீல் வைக்கின்றனர். இதனால் சாப்பாடு எல்லாவற்றையும் வெளியே எடுத்து விட்டு துப்புரவு செய்துவிட்டு மூன்று நாள் கழித்து வருமாறு சொல்கின்றனர். இதைக் கேட்டு பாக்யா அழுது கொண்டிருக்கிறார். அங்கிருக்கும் சமைத்து சாப்பாடுகளை எல்லாம் எடுத்து பார்த்து நல்லா தானே இருக்கு நான் வேண்டுமென்றால் சாப்பிட்டு பார்க்கிறேன் என்று பாக்யா சாப்பிட போகும்போது எழில் அவரை தடுத்து நிறுத்துகிறார்.

baakiyalakshmi serial vijay tv

பின்பு சாப்பாடு எல்லாவற்றையும் ஒரு வண்டி பிடித்து ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் பாக்யா நியூஸில் பேசுவதை பார்த்து கோபி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். ஆனாலும் மூன்று நாள் தான் சீல் வைத்திருக்கிறார்களா? என்று கோபத்தில் கத்த அப்போது அதைக் கேட்டு ராதிகா என்ன நடந்தது என்று விசாரிக்கிறார்.

அதற்கு கோபி உனக்கு விசயமே தெரியாதா என்று பாக்யா ரெஸ்டாரண்டில் சாப்பாடு கெட்டுப் போய்விட்டது என்று வாடிக்கையாளர்கள் வந்து பிரச்சனை செய்தது, பிறகு அங்கு போலீஸ், உணவு பாதுகாப்புத்துறையினர் எல்லோரும் வந்து அங்கு விசாரணை செய்தது என எல்லா விஷயத்தையும் கோபி சொல்ல அதற்கு ராதிகா பாக்கியா அப்படி பண்றவங்க கிடையாது. இந்த விஷயத்துல உங்களுக்கு எதுவும் சம்பந்தம் இருக்கா என்று சந்தேகப்பட்டு கோபி இடம் கேட்கிறார்.

அதற்கு கோபி எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஏமாற்றி விடுகிறார். அதற்கு ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் இந்த விஷயத்தை வச்சு நீ இன்னும் கோபியிடம் கொஞ்சம் தூண்டிவிடு என்று சொல்ல அதற்கு ராதிகா நீ பேசாம இரு என்று அவருடைய அம்மாவை திட்டி விட்டு செல்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி பாக்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுகிறார்.

என்னால்தான் இப்படி எல்லாம் நடக்குது. நான் ராசி இல்லாதவலா ஆகிட்டேன். நான் இந்த வேலைக்கு முதலில் விளக்கு ஏற்றி வைத்திருக்கக் கூடாது என்று அழுது கொண்டிருக்க அதற்கு பாக்கியா அப்படியெல்லாம் இல்லை என்று ஈஸ்வரிக்கு சமாதானம் சொல்கிறார். பிறகு ஆர்டர் எடுத்தது பதினோரு லட்சம் மீதம் உள்ளது மூன்று லட்சம் இன்னும் 8 லட்சம் வேணும் என்று கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் 8 லட்சம் தேவைப்படுவதால் அதற்கு என்ன செய்யலாம் என்று பாக்கியா யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+