பாக்யாவின் வீட்டை விட்டு வெளியேறும் இனியா, ஈஸ்வரி.. ராதிகாவால் புது சிக்கல்.. கோபத்தில் எழில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் கோபி தனக்கு நெஞ்சு வலி வந்து விட்டதாக நாடகமாட அதை நம்பி ஈஸ்வரி வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

Baakiyalakshmi Serial October 19th 2023 promo and episode full update

அதைத் தொடர்ந்து வீட்டில் உள்ளவர்களின் பேச்சையும் கேட்காமல் கோபியை பார்க்க வேண்டும் என்று இனியாவும் ஈஸ்வரியும் வீட்டை விட்டு கிளம்புகின்றனர்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா, கோபி, மயூ என மூவரும் நகை கடைக்கு வர கோபி சிம்பிளாக ஏதாவது நகை எடுக்கலாம் என்று சொல்ல, அதற்கு ராதிகா முடியாது கிராண்டாக எடுக்க வேண்டும் என்று சொல்லி நகையை தேர்வு செய்ய விலையை கேட்டதும் கோபி அப்படியே நெஞ்சை பிடித்து சரிந்து விழுகிறார்.

Baakiyalakshmi Serial October 19th 2023 promo and episode full update

பிறகு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய கோபிக்கு டாக்டர்கள் அவசரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து டாக்டர் ராதிகாவிடம் வீட்ல ஏதாவது பிரச்சனையா?இவருக்கு மைண்ட அட்டாக் வந்து இருக்கு. எதையோ மனசுக்குள் போட்டு கஷ்டத்தில் இருக்கிறார். இனி இவர் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். அதை கேட்டு ராதிகா பதறி இருக்க, அதே நேரத்தில் வீட்டில் ஈஸ்வரி கோபிக்கு ஏதோ ஆனது போல கனவு கண்டு பயந்து போய் கோபிக்கு போன் செய்கிறார்.

Baakiyalakshmi Serial October 19th 2023 promo and episode full update

அப்போது கோபி மயக்கம் தெளிந்து இருக்க அந்த நேரத்தில் போன் வந்ததும் அங்கிருக்கும் நர்ஸ் போனை எடுத்து பேச சொல்கிறார். அப்போது கோபி கடைக்கு போன இடத்தில் மயங்கி விழுந்து விட்டேன் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி என்ன ஆச்சு நெஞ்சுவலியா என்று கேட்ட கதறி அழுகிறார்.

அதற்கு எல்லோரும் ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல ஈஸ்வரி நான் கோபியை பார்த்தே ஆக வேண்டும் என்று அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது எழில் அவருக்கு ரொம்ப முடியாமல் இருந்தா எப்படி போனை எடுத்து பேச முடியும்? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அதுவெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் நான் இப்போ என் பையனை பாக்கணும் என்று ஈஸ்வரி பிடிவாதம் பிடிக்கிறார்.

Baakiyalakshmi Serial October 19th 2023 promo and episode full update

அப்போது செழியன் கோபிக்கு போன் செய்ய அந்த நேரத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்து கோபியும் ராதிகாவும் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது போனை ராதிகா எடுத்து அவருக்கு ஒன்னும் இல்ல வீட்டுக்கு கூட்டிட்டு வர போகிறோம் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நான் இப்பவே அவனை பார்க்க வேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார்.

இதனால் வீட்டில் எல்லோரும் ஈஸ்வரியிடம் அட்வைஸ் செய்கின்றனர். ஆனால் ஈஸ்வரி எதையும் கேட்காமல் நான் என்னுடைய மகனை பார்த்தே ஆக வேண்டும் என்று பதறி கொண்டு இருக்க இனிவாவும் நானும் இப்பவே அப்பாவை பார்க்கணும் என்று சொல்லி அடம்பிடிக்கிறார். பிறகு செழியன் இருவரையும் கூட்டிக்கொண்டு ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+