செழியன் வாழ்க்கையையும் சீரழிக்கும் கோபி.. பாக்கியா எடுத்த முடிவால் அதிர்ச்சியில் ஜெனி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 26ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் குழந்தையை மறைத்து வைத்து விளையாடியதற்காக மாலினியை இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று பாக்கியா திட்டி அனுப்புகிறார்.

ஆனால் பாக்யா செய்தது தப்பு என்று கோபி சொல்ல மீண்டும் சண்டை தொடங்குகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் மாலினி ஜெனியின் குழந்தையை ஒளித்து வைத்து விளையாட எல்லோரும் பதற்றத்தோடு அங்கேயும் இங்கேயும் தேடிக் கொண்டிருக்கின்றனர். கடைசியில் ஒரு நிமிஷம் என்று சொல்லி மாலினி குழந்தை எடுத்து வந்து கொடுத்து பிராங் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதனால் ஆளாளுக்கு மாலினியை திட்ட உன் நடவடிக்கை எதுவும் சரியா இல்லை இனிமேல் இந்த வீட்டுக்கு வரக்கூடாது. ஆபீஸ் வேலையை ஆபீஸோட வச்சுக்க என்று பாக்கியா மாலினியை திட்டி அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து பழனிச்சாமி கோவிலுக்கு வந்திருக்க அங்கு கேட்டரிங் பற்றி அங்கு பேசிக் கொண்டிருக்க அப்போது பாக்யாவுக்கு கொடுக்குமாறு அவர் ரெக்கமண்ட் செய்கிறார்.
அந்த நேரத்தில் வீட்டில் கோபி பாக்கியா பேசியது தப்பு இதனால செழியனுடைய வேலை பாதிக்கும் என்று சொல்ல அதற்கு ஜெனி மாலினி மேல எனக்கும் பயங்கர கோபம் வந்துச்சு. ஆன்ட்டி செஞ்சதுல எந்த தப்பும் கிடையாது என்று ஜெனி சொல்ல, அதற்கு கோபி மனுசங்க மேல கொஞ்சமாவது நம்பிக்கை வைக்கணும் என்று சொல்ல அதற்கு பாக்கியா நம்பிக்கை வைத்து ஏமாந்ததெல்லாம் போதும்.

இங்கு யாரும் நம்பிக்கை வைக்கின்ற அளவுக்கு யோக்கியம் கிடையாது என திட்டி விட்டு கிளம்பி செல்கிறார். அதைத் தொடர்ந்து செழியன் மாலினி வீட்டிற்கு வந்து மாலினியிடம் சண்டை போட அப்போது மாலினி நீ என்னை விட்டு தள்ளி போனா இப்படித்தான் பண்ணுவேன் என்று போட்டோவை காட்டி மிரட்டுகிறார்.
கூடவே நீ என்கிட்ட பேசாம இருந்தா இந்த போட்டோக்களை ஜெனிக்கும் உங்க அம்மாவுக்கும் அனுப்பி வைத்து உங்க தெருவில் போஸ்டர் அடித்து ஒட்டிடுவேன் என்று மிரட்டியப்படியே செழியனை கட்டி பிடித்துக் கொள்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications