பாக்கியலட்சுமியில் நாளை: இனியாவை வைத்து ஆட்டத்தை தொடங்கிய சுதாகர்.. பாக்யா பிடித்த பாயிண்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவிடம் கையெழுத்து வாங்கிய பத்திரத்தில் சுதாகர் ரெஸ்டாரண்டை முழுமையாக தன்னுடைய பெயருக்கு மாற்றி எழுதி வைத்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட பாக்கியா என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர் பார்க்காத வகையில் கதையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சீரியல் கடந்த மாதத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென சுதாகர் என்ற புது வில்லன் வந்திருக்கிறார். பாக்கியாவின் ரெஸ்டாரண்டை சுதாகர் கேட்டபோது பாக்கியா அதற்கு முடியாது என்றார். அதனால் அவருடைய மகனுக்கு இனியாவை பெண் கேட்டு வந்திருந்தனர்.

சூழ்ச்சிகள்
அப்போது கூட இந்த திருமணம் நடைபெறாது என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தி செல்வியின் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார் பாக்கியா என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கும் வகையில் நேற்று இனியா மற்றும் நிதிஷ் திருமணம் நடந்துவிட்டது. அதுபோல பாக்கியா என்னதான் குடும்பத்திற்காக பல தியாகம் செய்தாலும் அதை புரிந்து கொள்ளாத கோபி ஈஸ்வரி போன்றோர் பாக்யாவிற்கு எதிராகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈஸ்வரி செய்த செயல்
இனியாவை திருமணம் செய்து கொள்வதற்காக ரெஸ்டாரண்டை எங்களுடைய கம்பெனியின் பெயரில் மாற்ற வேண்டும் என்று சுதாகர் பேசும் போது கூட பல வருடங்களாக பிசினஸை செய்து கொண்டிருக்கும் கோபி இது சரிப்பட்டு வராது என்று சொல்லவில்லை. அதுபோல கடைசி நேரத்தில் வெற்று பத்திரத்தில் பாக்கியா கையெழுத்து போட்டு தந்து விட வேண்டும் என்று சுதாகர் அழுத்தம் கொடுத்த போதும் ஈஸ்வரி உனக்கு ரெஸ்டாரண்ட் தான் முக்கியமா? உன் பொண்ணு வாழ்க்கை முக்கியம் இல்லையா என்று சென்டிமென்டாக முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருந்தார்.

ஏமாந்த பாக்யா
இவங்களுக்கு எப்போது தான் அறிவு வரும் என்று பார்க்கும் ரசிகர்கள் நொந்து கொள்கிற மாதிரி தான் பாக்யாவின் குடும்பத்தினர் நடந்து கொண்டனர். இதுவரைக்கும் பாக்கியா பல இடங்களில் தைரியமாக பேசுவார். ஆனால் இப்போது பாக்கியாகவும் சுதாகர் சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டார். இந்த நிலையில் இனியா மற்றும் நிதிஷ் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது.

அதிர்ச்சியில் பாக்கியா
அதை தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் பாக்யாவின் ரெஸ்டாரண்ட்க்கு சுதாகர் தன்னுடைய ஆட்களோடு வருகிறார். அப்போது பாக்கியாவிடம் ஒரு பத்திரத்தை கொடுக்க அதை படித்து பார்த்ததும் பாக்கியா அதிர்ச்சி ஆகி இதுல தப்பா இருக்கு சார் என்று சொல்ல, அதற்கு சுதாகர் சிரித்தபடி எழுந்து நிற்க, பாக்கியா இதில் ரெஸ்டாரண்ட் பெயர் மட்டுமல்ல மொத்தமாக மாறி இருக்கு என்று கத்தி பேச அதற்கு சுதாகர் நான் இப்போ உங்ககிட்ட வாக்குவாதம் செய்ய வரவில்லை.
இனியா எடுக்க போகும் முடிவு
நீங்க உங்களுடைய மகள் இனியாவிற்கு இந்த ரெஸ்டாரண்டை கிப்ட் ஆக கொடுத்துட்டீங்க. இந்த ரெஸ்டாரன்ட் இனி முழுக்க முழுக்க எங்களுடைய கம்பெனியின் கீழ்தான் இயங்கி வரும் என்று சொல்ல, அதை எதிர்பார்க்காத பாக்யா நோ என்று கத்துகிறார். இனி பாக்யாவிற்கு எதிராக இனியாவை நிற்க வைக்கப் போகிறாரா சுதாகர் என்ற கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே பலமுறை பாக்யா செய்த நல்லதை எல்லாம் மறந்துவிட்டு இனியா முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருப்பார். ஆனால் இனிமேலாவது மெச்சூரிட்டியாக அம்மாவிற்கு சப்போர்ட் செய்யப் போகிறாரா? அல்லது மாமனார் குடும்பத்திற்காக சொந்த அம்மாவை எதிர்த்து நிற்க போகிறாரா என்று பார்க்கிறது பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications