பாக்கியாவுடன் பழனிசாமி.. சண்டையிட்ட கோபி.. அவ்வளவு பொசசிவ்னஸா?.. ராதிகாவுக்கு தெரிஞ்சா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் பழனிசாமியிடம் கோபி சண்டைக்கு நிற்கிறார். அவரிடம் நீ ஹீரோ நான் வில்லனா என கேட்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கோபியும் ராதிகாவும் பாக்கியாவின் வீட்டில் தங்கியுள்ள நிலையில் அங்கு ராதிகாவுக்கும் கோபியின் தாய் ஈஸ்வரிக்கும் அவ்வப்போது நடக்கும் மோதல்களுக்கு இடையே கோபி மாட்டிக் கொண்டு விழிக்கிறார்.

ஒரு பக்கம் கோபியின் நடத்தையை கண்டிக்கும் தாய், மறுபக்கம் தனது மகளை திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி இருக்கும் வீட்டிற்கு செல்வதா என சண்டையிடும் ராதிகாவின் தாய், இப்படி தாய்க்கும் மாமியாருக்கும் இடையே கோபி மாட்டிக் கொண்டு சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த பிரச்சினைகளை மறக்க கோபியும் ராதிகாவும் ஒரு 3நாட்களுக்கு பாண்டிச்சேரியில் ரிசார்ட்டில் தங்கலாம் என நினைத்து கிளம்புகிறார்கள். பாண்டிச்சேரியில் பாக்கியலட்சுமியின் சமையல் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. அப்போது ராதிகாவுடன் ஜாலியாக இருக்கும் கோபி திடீரென பழனிசாமியை பார்த்துவிடுகிறார்.
உடனே இவன் எங்க இங்க வந்திருக்கான், எதுக்காக இருக்கும் என மண்டையை போட்டு பிய்த்து கொள்கிறார். அப்போது பாக்கியாவின் சமையல் வாசத்தால் ஈர்க்கப்பட்டு பழனிசாமி அங்கு செல்கிறார். பாக்கியாவிடம் நான் வெளியேதான் நின்னுகிட்டு இருந்தேன். ஆனால் உங்கள் சமையல் வாசம் என்னை இழுத்து கொண்டு வந்துவிட்டுவிட்டது என்கிறார்.
உடனே பாக்கியா, பழனிசாமியிடம் நான் ஒரு ஸ்வீட் செய்திருக்கேன். அதை சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்றீங்களா என கேட்கிறார். பழனிசாமி என்ன மேடம் கேட்டுட்டு இருக்கீங்க, கொண்டு வந்து தாங்க என சொல்கிறார். உடனே ஸ்வீட்டை சாப்பிட்டு பழனிசாமி புகழ்கிறார். அப்போது மயூவிடம் ராதிகா போனில் பேசிக் கொண்டிருந்த போது செல்வியை பார்த்துவிடுகிறார்.
செல்வியும் ராதிகாவை பார்த்துவிட்டு இந்தம்மா எதுக்கு இங்க வந்திருக்கு என யோசித்தபடியே பாக்கியாவிடம் போய் சொல்கிறார். உடனே ராதிகாவும் கோபத்துடன் உள்ளே போய் கோபியிடம் , உங்கள் வீட்டு வேலைக்காரியை பார்த்தேன் என்கிறார். உடனே அவ எதுக்கு இங்க வந்தாள் என கோபி கேட்க அதற்கு ராதிகாவோ வேற எதுக்கு பாக்கியாதான் நம்மை வேவு பார்க்க அனுப்பியிருப்பார் என்கிறார்.
கோபியும் இனியாவிடம் போன் செய்து பாக்கியா குறித்து விசாரிக்கிறார். அப்போது அவரும், அம்மா ஒரு வேளையா பாண்டிச்சேரி போயிருக்காங்க என சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறார். பாக்கியாவுக்கு இந்த கல்யாண ஆர்டரே பழனிசாமியின் பரிந்துரையின்படிதான் வந்தது.
பாக்யா மீது அதிக நம்பிக்கை வைத்து அனைத்து விஷயங்களிலும் பழனிசாமி தான் அங்கு உதவிகளை செய்கிறார். பாக்கியாவும் பழனிசாமியும் பேசிக் கொண்டிருப்பதை கோபி பார்த்துவிடுகிறார். உடனே பழனிசாமியிடம் கோபி சண்டை இடுகிறார். பாக்கியா பின்னாடியே நீங்க எதுக்கு இங்க வரணும், பிளான் பண்ணி 2 பேரும் வந்திருக்கீங்களா என கேட்டுவிட்டு நீங்க ஹீரோ நான் வில்லனா என கேட்டு சண்டை இடுகிறார்.












Click it and Unblock the Notifications