பாக்கியலட்சுமி: ஜெனி குடும்பத்தால் பாக்கியா வீட்டில் வெடித்த பூகம்பம்.. மகனாக கோபி செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 10ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராமமூர்த்தியை நினைத்து மொத்த குடும்பத்தினரும் அழுது கொண்டிருக்கின்றனர். கோபி தன்னுடைய அப்பா அஸ்தி விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்திலேயே எல்லோரும் அழுது கொண்டே தான் இருக்கிறார்கள். ஹாலில் எல்லோரும் படுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ராமமூர்த்தியை நினைத்து அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் அழுது கொண்டிருக்கும் அமிர்தா போய் படு என்று சொல்ல முதலில் மறுத்தாலும் பிறகு அமிர்தாவும் படுத்துக் கொள்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அந்த நேரத்தில் ராமமூர்த்தி வழக்கமாக இருக்கும் சேரில் உட்கார்ந்து இருப்பது போன்று எழில் கண்களுக்கு தெரிகிறது. நீ போய் படு எழில் என்று அவர் சொன்னதும் சரி என்று எழில் படுத்து கொள்கிறார். பிறகு பாக்கியா ரூமில் இருந்து வெளியே வந்து பார்க்கும்போது ஹாலில் எல்லோரும் படுத்துக் கொண்டிருக்கும் போது ராமமூர்த்தி சேரில் உட்கார்ந்து இருப்பது போன்று தெரிகிறது. அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைய ராமமூர்த்தி இங்கே வா என்று பாக்கியவை கூப்பிட்டது போல தெரிய பாக்கியா அந்த சேர் பக்கத்தில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் வரும் செல்வி இதை பார்த்து பீல் பண்ணுகிறார். பிறகு மறுநாள் காலையில் ஜெனியின் அப்பா எல்லோருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். வீட்டில் இத்தனை நாட்களாக அவருடைய நிழலில் உங்கள் எல்லாரையும் பத்திரமாக பார்த்துக் கொண்டார். அவர் இல்லை என்பது கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சொல்லிக்கொண்டு ஜெனி இப்போ கர்ப்பமாக இருக்கிறா. இந்த நேரத்தில் இப்படி அழுது கொண்டு இருப்பது சரியா இருக்காது.

television baakiyalakshmi serial vijay tv

பெரியவர் இறந்த அடுத்த நாளே நாங்க ஜெனியை கூட்டிட்டு போறது வருத்தமா இருக்கு. ஆனாலும் எல்லாருடைய கஷ்டங்களை பார்க்கும்போது அவளுக்கு சுமை கூடிக்கொண்டே போகும் என்று சொல்ல, அதற்கு செழியன் ஜெனியை அனுப்ப முடியாது என்று சொல்ல வரும்போது பாக்கியா இல்ல அவங்க சொல்றது சரிதான். ஜெனி கொஞ்ச நாள் அவங்க வீட்டில் இருந்துட்டு வரலாம் என்று சொல்கிறார்.

பிறகு ஜெனியிடமும் நீ கொஞ்ச நாள் உங்க அம்மா வீட்டில் இருந்துட்டு வா என்று சொல்ல ஜெனி ஈஸ்வரி இடம் சென்று அம்மா வீட்டுக்கு போறேன் என்று சொல்லப் போகும்போது ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். ஈஸ்வரி அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் ஈஸ்வரியிடம் சொல்லாமல் அம்மாவை கூட்டிக்கொண்டு வெளியே வந்து விடுகிறார். பிறகு பாக்யாவிடம் நான் எங்கேயும் போகவில்லை.

television baakiyalakshmi serial vijay tv

நான் அம்மா வீட்டுக்கு போனாலும் என்னுடைய சிந்தனை எல்லாம் இங்கே தான் இருக்கும். எல்லாரும் இங்கு என்ன பண்ணிட்டு இருக்காங்கனு நான் யோசிச்சிட்டே இருப்பேன் என்று கிளம்பி வர முடியாது என்று மறுத்து விடுகிறார். மறுபக்கத்தில் கோபி தூங்கிக் கொண்டிருக்க ராதிகா காபி கொண்டு வந்து பார்க்கிறார். பிறகு கோபியை எழுப்ப வேண்டாம் என்று விட்டு விடுகிறார்.

அதை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் கோபி எழுந்து வந்து ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பா நம்மை விட்டு போய் இரண்டு நாளாயிடுச்சு என்னால ஏத்துக்கவே முடியல என்று சொல்லிக் கொண்டு இருக்க ராதிகா ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் சுடுகாட்டில் எழிலும் செழியனும் ராமமூர்த்தியின் அஸ்தியை வாங்கிக்கொண்டு ஒரு குளத்தில் கரைக்க எடுத்து செல்கின்றபோது கோபியும் ராதிகாவும் வந்து ராமமூர்த்தி அஸ்தியை கேட்கிறார்கள்.

அதற்கு சுடுகாட்டில் இருந்தவர்கள் இப்போது தானே கொடுத்துவிட்டோம் என்று சொல்ல, எங்களுக்கும் அஸ்தி வேண்டும் என்று கேட்டதும் அவர்களுக்கும் கொடுத்து அனுப்புகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+