பாக்கியலட்சுமி: கோபியை வெளுத்து வாங்கிய நண்பர்.. பாக்யா கேட்ட சரியான கேள்வி.. மாறிய கதைக்களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடில் ஒரு வழியாக ராமமூர்த்தி இறப்பிற்கு பிறகு அடுத்த சவால்கள் இன்று தொடங்கி இருக்கிறது. இத்தனை நாட்களாக அழுது கொண்டிருந்த பாக்கியா குடும்பம் இப்போது மீண்டும் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ராமமூர்த்தியை பற்றி பேசுகிறார். அப்போது நான் என்னுடைய அப்பாவின் விருப்பத்திற்காக தான் பிறந்ததிலிருந்து இருந்தேன். ஆனால் அவர் என்னுடைய சந்தோஷத்துக்காக எதுவும் பண்ணல. நான் என்னுடைய வாழ்க்கையில் கல்யாணத்தை என்னுடைய விருப்பப்படி பண்ணுனது வீட்ல பெரிய தப்பா போயிடுச்சு. அதனால எனக்கு மிஸ்டர் ராமமூர்த்தி பெரிய தண்டனை ஒன்று கொடுத்துட்டார்.

television baakiyalakshmi serial vijay tv

எந்த அப்பாவும் பிள்ளைகளுக்கு கொடுக்காத தண்டனையை எனக்கு கொடுத்துட்டு போயிட்டார். அவருடைய இறுதி சடங்கு நான் செய்யக்கூடாது என்று குடும்பத்தினர் என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள். நான் என்னுடைய பசங்களுக்கு நல்ல அப்பாவா இருந்திருக்கேன். ஆனா அவர் எனக்கு ஒரு நல்ல அப்பாவா இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே வர பின்னாடியே வந்த பாக்கியா கோபியை நிறுத்தி வைத்து கோபி பேசியது பற்றி கேள்வி கேட்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்கு கோபி என்னுடைய அப்பாவை பற்றி நான் பேசுனதுக்கு நீ வந்து எப்படி பேசணும்னு சொல்லுறியா? என்று கேட்க அதற்கு பாக்கியா, நான் உங்க அப்பா பத்தி பேசுனதுக்கு எந்த கருத்தும் சொல்ல போறது கிடையாது. ஆனால் நீங்க ஒரு நல்ல அப்பாவா இருந்தேன்னு சொன்னீங்கல்ல அதை என்னால ஏத்துக்க முடியாது. நீங்க ஒரு நல்ல அப்பா கிடையாது. குழந்தைகளை நல்லா படிக்க வச்சேன்னு சொல்றீங்க உலகத்துல இருக்குற எல்லா அப்பாவும் செய்ய வேண்டிய கடமையை தான் நீங்க செஞ்சீங்க.

அவங்க வாழ்க்கையில நீங்க என்ன பண்ணுனீங்க என்று கேள்வி கேட்கிறார். அதோடு செழியன் ஜெனியை விரும்பிய போது நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன். எழில் அமிர்தாவை விரும்பிய போது நான் தான் திருமணம் செய்து வைத்தேன். கடைசி காலத்துல உங்க அப்பாவுக்கு உங்களால் சந்தோசம் கிடைச்சுச்சா? அதுவும் இல்ல.. என்று சொல்ல கோபி உன் வேஷத்தை நம்பி இந்த குடும்பம் பின்னாடி இருக்கு. ஆனா எனக்கு ஒரு காலம் வரும் அப்ப நான் பாத்துக்குறேன் என்று திட்டி விட்டு அங்கிருந்து ரெஸ்டாரண்டுக்கு வந்து அங்கு உட்கார்ந்து இருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது அங்கு வேலை செய்பவர்கள் பெரிய கேரியரில் சாப்பாடு எடுத்துக்கொண்டு டெலிவரிக்கு போக கோபி எங்கே போறீங்க என்று விசாரிக்க ராதிகா மேடம் ஆபீசுக்கு என்று சொல்கிறார்கள். அதற்கு கோபி ஒரு மணி ஆயிடுச்சு.. இப்பதான் எடுத்துட்டு போறீங்களா? எப்பவுமே இப்படித்தான் லேட்டா எடுத்துட்டு போயிட்டு இருக்கீங்களா? என்று கேட்க, அவர்கள் சாரி கேட்டுவிட்டு அங்கிருந்து எடுத்து செல்கின்றனர்.

அந்த நேரத்தில் கோபியின் நண்பர் செந்தில் வர அவருடன் கோபி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி நீ குடிச்சிட்டு பண்ணுன வேலையால ராதிகாவுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இனிமே அப்படி பண்ணாதே என்று செந்தில் சொல்ல அதற்கு கோபி நான் குடிக்கிறதுக்கு ராதிகா காரணம் கிடையாது. என்னுடைய குடும்பமும் அந்த பாக்கியாவால் தான் குடிக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு போன விஷயத்தை சொல்ல, நீ எதுக்கு அங்க போன என்று செந்தில் கேட்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதற்கு எங்க அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தி போட்டோ ஒன்னு ஓபன் பண்ணுனாங்க அதுக்காகத்தான் நான் அங்க போனேன். என்னென்ன நாடகம் நடத்துறாங்கன்னு பாக்க போனேன் என்று சொல்ல, அப்போ சரி ஆனா நீ பேசாம வந்திருக்க வேண்டியதுதானே என்று கேட்க, நான் என் வாழ்க்கையில ரொம்ப வருஷம் அமைதியா இருந்துட்டேன். ஆனா இன்னைக்கு எல்லாத்தையும் பேசிட்டேன் என்று சொல்ல, எதுக்குடா உனக்கு இந்த வேலை என்று செந்தில் திட்டுகிறார்.

பிறகு யாராவது அங்க உன்னை எதுவும் சொன்னாங்களா என்று கேட்க வேற யாரும் எதுவும் சொல்லல பாக்கியா தான் வந்து நீங்க நல்ல அப்பா கிடையாதுன்னு சொன்னா. நான் நல்ல அப்பாவா இல்லைன்னு பசங்களுக்கு தெரியும் என்று சொன்னேன் என்று சொல்ல, எதுக்குடா இந்த தேவையில்லாத வேலை பாக்குற என்று செந்தில் திட்ட அதற்கு கோபி இதெல்லாம் தேவையில்லாத வேலை கிடையாது என்று கோபமாக பேசுகிறார்.

அதோடு நான் எப்படி இப்போ குடும்பத்தை விட்டுட்டு இருக்கிறேனா அது போல பாக்யாவை தனிமரமா நிற்க வைப்பேன் என்று வன்மத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்யாவை தேடி எழில் வருகிறார். எழிலோடு நிலா வந்ததும் நிலாவை தூக்கி வைத்து கொண்டிருக்கிறார். பிறகு எழில் தான் புது வீடு ஒன்று வாடகைக்கு பார்த்து விட்டதாகவும் அந்த வீட்டிற்கு குடிபோகப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். பாக்யாவிற்கு மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+