பாக்கியலட்சுமி: எங்க அப்பா இறக்கல.. கோபி சொன்ன வார்த்தை.. ராதிகா கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் ராமமூர்த்தி இறப்பு செய்தி கோபிக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் கோபி வீட்டில் வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இன்று முழுக்க ராமமூர்த்தி உடலை பார்த்து எல்லோரும் அழுது கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் டாக்டர் பெரியவர் தவறிட்டாரு என்று சொல்ல, அதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். ஈஸ்வரி எதுவும் பேசாமல் பித்து பிடித்தது போல நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் இன்னொருவாட்டி செக் பண்ணி பாருங்க நேற்று கூட நல்லா பேசினாரு என்று கதறி அழுது கொண்டிருக்க, டாக்டர் நான் செக் பண்ணிட்டேன். அவர் இறந்து அஞ்சு மணி நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிவிடுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அந்த நேரத்தில் கோபி வாக்கிங் போயிட்டு வீட்டு பக்கமாக வந்து கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா வீட்டு முன்பு அதிகமான மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அப்பாவுக்கு பிறந்தநாள் நேற்று தானே? இவங்க எல்லாரும் இன்னைக்கு வந்து நிற்கிறாங்க... என்று பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அப்போது வாசலில் நின்றவர்கள் இவர்தான் ஐயாவின் அப்பா என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். அதோடு கோபியிடம் உங்க அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு நீங்க வாக்கிங் போயிட்டு வரீங்களே என்று கோபியிடம் சொல்கின்றனர்.

கோபி எதுவும் புரியாமல் வீட்டிற்குள் வர அங்கு செல்வி சார் ஐயா நம்மள விட்டுட்டு போயிட்டாரு என்று சொல்ல எதுவும் புரியாமல் கோபி நிற்க இனியா பாக்யாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறார். இனியாவிடம் என்ன ஆச்சு என்று கேட்க தாத்தா இறந்து போயிட்டாரு என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாகி அப்படியெல்லாம் நடந்திருக்காது. நான் போய் பார்க்கிறேன் என்று சொல்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

ரூமிற்குள் செழியன் கோபியை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுது தாத்தா போயிட்டாரு என்று சொல்ல, அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்பா மயக்கத்திலே இருப்பாரு. நான் தண்ணீர் தெளித்து எழுப்புகிறேன் என்று தண்ணீர் தெளிக்க ராமமூர்த்தி அசைவு எதுவும் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி கோபி அழுகிறார். டாக்டர் வந்து செக் பண்ணி விட்டு சொன்ன விஷயத்தை செழியன் சொல்ல, கோபி அழுது கொண்டே அங்கிருந்து வெளியே வந்து விடுகிறார்.

செல்வி எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போயிட்டாரு. நேற்று கூட எவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருந்தாரு... நான் வீட்டுக்கு போகிறேன் சொன்ன போது கூட என்னை நிற்க வச்சு பேசினாரு. இனியாவின் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசைப்பட்டாரு ஆனால் இப்படி ஆயிடுச்சு என்று அழுது கொண்டு இருக்க, கோபி அப்பா.. அப்பா.. என்று புலம்பியப்படியே ராதிகா வீட்டிற்கு வந்து விடுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

ராதிகா மயூவிற்க்கு தலை சீவிக் கொண்டிருக்கும்போது கோபி பித்து பிடித்தது போல அப்பா அப்பா என்று சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு அப்பா இறந்து போயிட்டாரு என்று சொன்னதும் ராதிகா ஷாக் ஆகுகிறார். நேற்று கூட பார்த்தோமே நல்லா தானே இருந்தாரு என்று ராதிகாவும் அழுது கொண்டிருக்க கோபி நான் நம்பல, எங்க அப்பா இறந்து போகல.. ஆனா அவரு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

எல்லாரும் அவங்க இறந்து போயிட்டாங்கன்னு சொல்றாங்க. வா நாம போய் பார்க்கலாம் என்று ராதிகா, கோபி, மயூ என எல்லோரும் ராமமூர்த்தியை பாக்யா வீட்டிற்கு வந்து பார்க்கின்றனர். ராதிகாவும், கோபியும் ராமமூர்த்தியின் உடல் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க ஈஸ்வரி எதுவும் சொல்லாமல் பித்து பிடித்தது போல அப்படியே இருக்கிறார். அப்போதும் கோபி எங்க அப்பா இறந்து போகல... நான் இதை நம்ப மாட்டேன்.. என்று கதறி கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+