பாக்கியலட்சுமி: கடைசியாக கோபி சொன்ன வார்த்தை.. மயங்கி விழுந்த பாக்யா.. கதறி துடித்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இராமமூர்த்தியின் உடலுக்கு பாக்கியா கொள்ளி வைத்திருக்கிறார். அதை பார்த்து மொத்த குடும்பத்தினரும் கதறுகின்றனர். கோபி தன்னுடைய அப்பாவிற்கு இறுதி காரியம் செய்ய முடியாமல் அழுது கொண்டிருக்கிறார்.

ராமமூர்த்தி இறப்பதற்கு முன்பு நான் செத்தா கூட கோபி வந்து எனக்கு கொள்ளி வைக்க கூடாது... என் முகத்தையே அவன் பார்க்க கூடாது என்று சொல்லி இருந்ததால் ஈஸ்வரி ராமமூர்த்திக்கு பாக்கியா தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று மொத்த குடும்பத்தையும் எதிர்த்து பிரச்சினை செய்திருந்தார். இறுதியாக இன்று ராமமூர்த்தி உடலுக்கு இறுதி காரியங்கள் செய்து முடித்து இருக்கிறார்கள்.

Television Baakiyalakshmi Serial vijay TV

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராமமூர்த்திக்கு செய்யும் இறுதி சடங்குகள் எல்லாம் ஒவ்வொன்றாக செய்ய ஈஸ்வரி ராமமூர்த்தியின் துண்டை இனியாவிடம் எடுத்துட்டு வர சொல்லி இராமமூர்த்தி மேலே போடுகிறார். அதோடு எழில் வாங்கிட்டு வந்த வாட்ச்சை பார்த்து நல்லா இருக்கு நான் போட்டுட்டு வெளியே எல்லாம் போவேன்னு சொல்லி சந்தோஷப்பட்டார் என்று அந்த வாட்ச்சையும் அவர் மீது வைத்து அழுகிறார்.

அப்போது சொந்தக்காரர்கள் இப்பவும் ஒன்னும் தப்பு இல்ல கோபியை இறுதி சடங்கு செய்யவிடலாம். நம்ம பழக்கத்துல பொம்பளைங்க யாரும் கொள்ளி போட்டதில்லை என்று ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி பாக்கியா தான் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பிறகு பழனிச்சாமி டைம் ஆயிடுச்சு அப்பாவை எடுத்துட்டு போகலாம் என்று சொல்ல நான் ரெண்டு நிமிஷம் பாத்துக்கிறேன். இதுக்கு அப்புறம் எப்ப பாப்பேன்னு தெரியல என்று ராமமூர்த்தியின் மேலே சாய்ந்து அழுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

ராமமூர்த்தி உடலை எல்லோரும் வெளியே எடுத்துக் கொண்டு போக குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். கடைசியாக ராமமூர்த்தியின் உடலை ஏற்றி வண்டியில் செல்லும்போது பாக்கியா கையில் கொள்ளி குடத்தை கொடுக்க கோபி இது நான் செய்ய வேண்டியது என்று புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு இறுதி சடங்கு செய்யும் இடத்திற்கு வந்து கடைசியாக முகத்தை பார்க்கிறவர்கள் பார்த்துக்கோங்க என்று சொல்கிறார்கள்.

அப்போது பாக்யா இதுவரைக்கும் நான் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து நீங்க என்னோட பொண்ணு பொண்ணுன்னு தான் சொல்லிக் கூப்பிடுவீங்க. நான் இதுவரைக்கும் உங்கள அப்பான்னு கூப்பிட்டது கிடையாது ஒருமுறை அப்பான்னு சொல்லிக் கொள்ளவா என்று ராமமூர்த்தி மேலே விழுந்து அப்பா அப்பா என்று சொல்லி அப்பா எழுந்திருங்கப்பா என்று கட்டிப்பிடித்து அழுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அப்போது எழில் மற்றும் செழியன் பாக்கியாவை அந்த இடத்தை விட்டு இழுத்து வருகின்றனர். பிறகு பாக்யாவை கொள்ளி வைக்க சொல்ல அதை பார்த்து கோபி இது எல்லாம் நான் செய்ய வேண்டியது என்னுடைய அப்பாக்கு கடைசியா நான் செய்ய வேண்டியதை செய்யவிடாம பண்ணிட்டாங்களே என்று பாக்கியா மீது கொலை வெறியில் இருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

ராமமூர்த்திக்கு கொள்ளி வைத்ததும் பாக்கியா மயக்கம் போட்டு விழுந்து விட பிறகு எல்லோரும் தண்ணீர் தெளித்து எழுப்புகின்றனர். இறுதியாக ராமமூர்த்தியின் உடல் எறிந்து கொண்டிருக்கும் போது பாக்கியாவை அந்த இடத்தை விட்டு செழியன் மற்றும் எழில் கூட்டிக்கொண்டு போகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+