பாக்கியலட்சுமி: ராதிகாவிடம் கோபி சொன்ன வார்த்தை.. ஈஸ்வரி கண்கலங்கி பாக்கியாவிடம் கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் ராமமூர்த்தியின் இறுதி சடங்கு முடிந்ததால் கோபி பாக்யா மீது கோபத்தில் இருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியாவிடம் ஈஸ்வரி கண்கலங்க பேசிக் கொண்டிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தில் எல்லாரையும் பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி செழியனிடம் உங்க தாத்தா போயிட்டாருடா என்று சொல்லி அழுகிறார். அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு ஆனா எனக்கு தான் தெரியல அவர் போய்விடுவார் என்று தெரிந்திருந்தால் நான் எப்படியாவது அவரை காப்பாத்தி இருப்பேன் என்று அழுது கொண்டிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த கோபியும் ராதிகாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி ராதிகாவிடம் வருத்தப்பட்டு பேச ராதிகா ஆறுதல் சொல்கிறார். எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துட்டாங்க நான் சாகுற வரைக்கும் இதை நினைச்சு தான் சாகப் போறேன் என்று வருத்தமாக கண்கலங்கி பேசுகிறார். அதோடு நான் பாக்கியாவை சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

இனி பாக்கியா தான் என்னோட எதிரி என்று கோபமாக பேசுகிறார். அடுத்த கட்டத்தில் ஈஸ்வரி அவருக்கு கல்யாணம் நடந்தபோது ராமமூர்த்தி பேசிய விஷயங்களை பாக்கியாவிடம் சொல்லி அழுது கொண்டிருக்கிறார். பாக்கியா மடியில் ஈஸ்வரி படுத்து அழுது கொண்டிருக்கிறார். பாக்கியா ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு செல்வி நேரமாகிவிட்டது நீ வீட்டுக்கு போயிட்டு வா என்று சொல்ல செல்வி இல்ல இன்னைக்கு நான் வீட்டுக்கு போகல. நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது ஈஸ்வரி ராமமூர்த்தி பற்றி மீண்டும் பேசுகிறார். அவருக்கு குழந்தை மனசு யார் என்ன சொன்னாலும் எதுவும் நினைக்காத நான் உன் கூடவே இருப்பேன் என்று சொல்லுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் எனக்கு உடம்புக்கு முடியாமல் போயிடுச்சு ஆனா அவர் தான் என்ன நல்லா பாத்துக்கிட்டாரு.

ஒரு நல்ல புருஷனா, நல்ல அப்பாவா, நல்ல மாமனாரா, நல்லா தாத்தாவாகவும் வாழ்ந்துட்டு மாமா போயிட்டாரு என்று பாக்யா வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் இனியா தாத்தாவை நினைத்து அழுது கொண்டிருக்க எழில் உட்பட எல்லோரும் இனியாவை சமாதானப்படுத்துகின்றனர். பிறகு இன்னைக்கு எல்லோரும் ஒன்றாக தூங்குவோம் என்று ஹாலில் தூங்குவதற்கு ரெடி ஆகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+