பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரியாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. இனிதான் பிரச்சனையே இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவர் இன்றைய எபிசோடில் அறிமுகமாகி இருக்கிறார். இதனால் இனி பாக்கியாவிற்கு பிரச்சனை வருவது போன்று கதை நகர போகிறது என்று தெரிகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே இனியா வீட்டுக்கு தெரியாமல் பப்புக்கு போய் அங்கு போலீஸ் இடம் சிக்கியதால் பெரிய பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அப்போது ராதிகா மூலமாக இனியா காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

அதனால் பாக்கியா கோபத்தில் திட்டியதால், இனியா தான் வீட்டை விட்டு போகப்போவதாக கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில் அது பாக்யாவின் கையில் சிக்கி இருக்கிறது. அதை பார்த்து பதறி போன பாக்கியா மீண்டும் தன்னுடைய நிலைமையை எடுத்து சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு இனியா இனி இதுபோல தப்பான முடிவு எடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் ராதிகாவை கல்யாணம் செய்ததால் தான் என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியே போய்விட்டது என்று கோபி ராதிகாவிடமே சொன்னதால் ராதிகா என்னை விவாகரத்து செய்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் இப்போது மொத்த பழியையும் பாக்கியம் மீது வழக்கம் போல போட்டுக் கொண்டிருக்கிறார். பாக்கியாவால் தான் என்னுடைய நிம்மதி போய்விட்டது என்று இப்போது பாக்யா மீது கோபத்தில் இருக்கும் கோபி பாக்யாவை பழி வாங்குவதற்காக தான் சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர்தான் பாக்யாவின் ரெஸ்டாரண்டின் ஓனர் என்று கூறியிருக்கிறார். அவரிடம் கோபி நீங்க உங்க ரெஸ்டாரண்டை நீங்களே நடத்துங்க பாக்யாவிடம் நடத்த கொடுக்காதீங்க. நீங்க பிசினஸை ஆரம்பித்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று சொல்ல அதற்கு இன்று அந்த நபர் எனக்கு அதில் இஷ்டம் இல்லை அந்த பெண் சரியாக பிசினஸை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன் என்று சொல்லி இருக்கும் நிலையில் பாக்யாவின் பிசினஸை கெடுப்பதற்காக அந்த நபரின் போன் நம்பரை கோபி வாங்கி வைத்திருக்கிறார். இனி அடுத்து என்ன பிளான் போட்டு பிரச்சனையை உருவாக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்ருதியின் அப்பா இனி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது ஒரு சில எபிசோடுகளுக்கு மட்டும் தான் வரப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications