வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் ஈஸ்வரி.. எழில் கொடுத்த பதிலடி.. கோபிக்கு கிடைக்கும் அதிர்ச்சி
எழில் அமிர்தாவை திருமணம் செய்ததால் ஈஸ்வரி வீட்டை விட்டு அனைவரையும் வெளியே போக கூறி இருக்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுடைய எதிர்பாராத திருமணத்தால் ஈஸ்வரி அனைவரையும் வீட்டை விட்டு போக கூறுகிறார்.
பாக்கியா தன்னை அவமானப்படுத்துவதற்காக தான் இந்த திருமணத்தை செய்தார் என்று ஈஸ்வரி குற்றம் சாட்டுகிறார்.
திருமணம் செலவு முழுக்க என்னுடைய பணத்தால் தான் செய்தது என்று எழில் கூறுகிறார்.
பாக்கியாவின் முடிவு சரியானது என்று ராதிகா கூறுகிறார்.

மயூவின் சந்தேகம்
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் மண்டபத்திலிருந்து கிளம்பிய கோபி வீட்டிற்கு வந்ததும் மயூ எழில் அண்ணாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்கிறார். அதற்கு ராதிகா ஆமாம் கல்யாணம் முடிஞ்சிடுச்சு என சொல்ல, எழில் அண்ணாவுக்கு இரண்டு கல்யாணமா? இரண்டு பொண்ணு இருந்தாங்க என்று கேட்க அதற்கு இல்லை ஒரு கல்யாணம்தான் என்று ராதிகா கூறுகிறார்.

கல்யாணம்னாலே இப்படி தானா
அடுத்ததாக இனியா முதல்ல வந்த பொண்ணு அண்ணனுக்கு பிடிக்கவில்லை. இரண்டாவது வந்த பொண்ணு தான் அண்ணனுக்கு பிடிச்சது என்று விளக்கம் கொடுக்கிறார். அதற்கு மயூ கல்யாணம்னாளே சண்டே தானா? என்று கேள்வி கேட்க ராதிகா கோபியை முறைக்கிறார். பிறகு கோபி பாக்யா செய்தது தப்பு வர்ஷினியின் அப்பா ரொம்பவே நல்ல மனிதராக இருக்கிறார். வர்ஷினியை எழில் திருமணம் செய்து இருந்தால் அவனுடைய வாழ்க்கை செட்டில் ஆகி இருக்கும் பாக்கியா எல்லாத்தையும் கெடுத்துட்ட என்று அவர் மீது தப்பு சொல்ல, இனியா அம்மா செய்தது சரி என்று கூறுகிறார். அண்ணனுக்கு பிடித்த திருமணத்தை தானே செய்ய முடியும் என்று இனியா சப்போர்ட் செய்கிறார்.

ராதிகாவின் சப்போர்ட்
ராதிகாவும் பாக்கியா செய்தது சரிதான். பிடிக்காத வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வரும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று சொல்ல, அதற்கு கோபி தலையை ஆட்டிக்கொண்டே முழித்துக் கொண்டிருக்கிறார். பின்பு உங்களால் அங்க ஒரு வார்த்தை கூட பேச முடியல உங்க வாயெல்லாம் என்கிட்ட மட்டும்தான் என்று திட்டிவிட்டு உள்ளே செல்கிறார். அதே நேரத்தில் பாக்யாவின் வீட்டில் ஈஸ்வரி கோபத்தோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது எழில் மண்டபத்தில் இருந்து குடும்பத்தோடு வீட்டிற்கு வருகிறார்.

எழில் கொடுத்த பதில்
அப்போது ஈஸ்வரி யாரும் வீட்டிற்குள் வரக்கூடாது பாக்யாவும் எழிலும் திட்டம் போட்டுக் கொண்டுதான் கல்யாணம் மேடை வரைக்கும் கொண்டு சென்று என்னை அவமானத்தை படுத்தி விட்டார்கள் என்று திட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் கல்யாண பண விஷயத்தையும் பற்றி பேச, எழில் இந்த கல்யாணம் என்னுடைய பணத்தில் தான் நடந்தது. முதல் படம் வெற்றி அடைந்ததும் எனக்கு ப்ரொடியூசர் அதிகமான பணம் தருகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் அப்போது தரவில்லை பிறகு தருகிறேன் என்று கூறியிருந்தார். அப்பா என்கிட்ட பணம் கேட்கும் போது கூட நான் அந்த பணத்தை தான் கேட்டேன். அப்போது கூட அவர் திருமணம் முடிந்து தருகிறேன் என்று கூறினார். பிறகு திருமண செலவு அந்த படத்தில் தான் செய்தது என்று எனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார் என்று கூறுகிறார்.

வீட்டை விட்டு விரட்டும் ஈஸ்வரி
அதற்கு ஈஸ்வரி அதுவெல்லாம் போகட்டும் ஆனால் எனக்கு இந்த அமிர்தாவை பிடிக்கவில்லை. அமிர்தாவை எதுக்கு கல்யாணம் பண்ணனும், பொண்டாட்டி செத்துப்போன எவனாவது இருப்பான் அவனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று மோசமாக பேசுகிறார் .இதை பாக்கியா தடுக்க இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. ஈஸ்வரி கடும் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு நீ தானே கல்யாணம் பண்ண கூட்டிட்டு போனா? அதனால இவங்கள இங்கிருந்து கூட்டிட்டு போய் நடுத்தெருவில் நில்லுங்க என்று திட்டுகிறார். அதற்கு எழில் வாமா நாம போகலாம் என பாக்கியவை கூப்பிட, ஈஸ்வரி போய்க்கிட்டே இருடா என திட்டுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications