ராதிகா முன்பு அவமானப்பட்ட கோபி.. அமிர்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி... செழியன் செய்த செயல்
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்கு காபி கொடுக்க சென்ற அமிர்தாவை அவமானப்படுத்தி ஈஸ்வரி திட்டி இருக்கிறார்.
சென்னை: நிலா பாப்பாவை கோபியின் வீட்டிற்கு தூக்கி சென்று கோபி தான் தாத்தா என்று அறிமுகப்படுத்த கோபி அதிர்ச்சி ஆகி அப்படியெல்லாம் இல்லை என்று கூறுகிறார்.
நிலா பாப்பா வளர்ந்த பிறகு என்னை எப்படி கூப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்படியே கூப்பிடலாம் என ராதிகா கூறியிருக்கிறார்.
எழிலிடம் பேச பிடிக்கவில்லை என கோபத்தோடு பேசிய செழியன் காபி கொடுக்க அதை மறுக்க முடியாமல் வாங்கி குடிக்கிறார்.

தாத்தா ஆகிட்டீங்க கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் இனியா, நிலா பாப்பாவை எழிலிடமிருந்து வாங்கிக் கொண்டு கோபி வீட்டிற்கு வருகிறார். அங்கே கோபிக்கு ஹாய் சொல்ல சொல்லி, நிலா பாப்பாவுக்கு இனியா சொல்ல ராதிகா முறைத்து பார்க்கிறார். பிறகு நான் இனியாவுக்கு அத்தையாகிட்டேன் அப்போ அப்பா இனியாவுக்கு யார் என்று கேட்க அதற்கு ராமமூர்த்தி அவன் பையனுக்கு பொண்ணு என்றால் அவன் தாத்தா தானே என்று சொல்ல, நான் தாத்தாவா அப்படி எல்லாம் கிடையாது. அப்படி எல்லாம் கூப்பிட வேண்டாம் என்று சொல்கிறார். இதை பார்த்த ராதிகா அதிர்ச்சியாகி முறைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ராதிகா கூறிய பதில்
பிறகு மையூ ராதிகாவிடம் அப்போ அம்மா நீங்க நிலா பாப்பாவுக்கு யாரு என்று கேட்க, அவள் வளர்ந்த பிறகு அவளுக்கு எப்படி கூப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்படியே கூப்பிடட்டும் என்று சொல்கிறார். அது எப்படி முடியும் உறவு முறை என்று ஒன்று இருக்கில்ல என தாத்தா சொல்ல, அதற்கு இனியா நான் என்ன அத்தை மாதிரியா இருக்கேன் என்று சொல்ல, கோபி அக்கா என்று சொல்லட்டும் என்று சொல்கிறார். இப்படி சொன்னால் ஊர்ல எல்லாரும் சிரிப்பாங்க என்று தாத்தா நக்கல் செய்ய, ஊர்ல உள்ளவங்க என்னவோ சொல்லிட்டு போகட்டும். ஆனா நம்ம புடிச்ச மாதிரி கூப்பிட்டு விட்டு போகட்டுமே என்று சொல்ல பிறகு இனியா மற்றும் மயூ உடன் நிலா பாப்பா விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கண்கலங்கிய அமிர்தா
அடுத்து வீட்டில் அமிர்தா, எழில், பாக்யா, ஜெனி, செல்வி என அனைவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது தாத்தா குழந்தையை தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு சந்தோஷமாக விளையாடிய படியே வர இதை பார்த்த அமிர்தா கண்கலங்கி சந்தோஷப்படுகிறார். அதற்கு எழில் ஏன் என கேட்க, நிலாவை இப்படி எல்லோரும் பார்த்திபீங்க என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல, அதான் எனுக்கு சந்தோஷமாக இருக்கு என சொல்ல, தாத்தா பெரியவங்ககுள்ளே 1008 பிரச்சனை இருக்கும். ஆனா குழந்தைகள் கிட்ட அதை காட்டக்கூடாது என்று சொல்கிறார்.

செழியனின் மாற்றம்
பிறகு செழியன் வாக்கிங் சென்று வர எழில் எங்க வாக்கிங்கா போயிட்டு வர என்று கேட்கிறார். அதற்கு செழியன் என்கிட்ட பேசாத நான் எங்க போயிட்டு வந்தா, உனக்கு என்ன? என்று கோபப்படுகிறார். எழில் பிறகு வீட்டை விட்டு கிளம்ப அமிர்தா செழியனுக்கு காபி போட்டு வந்து கொடுக்க, அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வாங்கி குடிக்கிறார். பிறகு ஆபீஸ் போறீங்களா? வீட்டில் இருந்து வேலை பார்க்க போறீங்களா? என அமிர்தா செழியனோடு பேசிக்கொண்டு இருக்க அப்போது வரும் எழில் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார பிறகு எழில் பார்த்ததை பார்த்த செழியன் ஒன்றுமே சொல்லாமல் பேப்பர் படிப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார்.

கோபத்தில் ஈஸ்வரி
அடுத்ததாக ஈஸ்வரி தலைவலியில் உட்கார்ந்து இருக்க அமிர்தா காபி போட்டு ஜெனி இடம் கொடுக்கிறார். அதற்கு ஜெனி நீங்களே போய் கொடுக்க, பாட்டி தனியா இருக்கும்போது கோவப்பட மாட்டாங்க. அப்படியே கோபம் வந்தா ஒன்னும் வேண்டாம்னு சொல்லுவாங்க இல்லனா வாங்கி குடிப்பாங்க அவ்வளவுதான். நீங்க அவங்களோட மிங்கிலாக இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்ல, அமிர்தா தயக்கத்தோடு காபியை கொடுக்க ஈஸ்வரி, பாக்கியா எங்கே என அதட்டுகிறார்..அதற்கு பாக்கியா ஆபீஸ்க்கு சென்று விட்டார் என சொல்ல, கோபத்தோடு காபி கப்பை தட்டி விட்டு உடைக்கிறார். சத்தம் கேட்டு எழில் ஓடி வர, எனக்கு உன்னை புடிக்கல இந்த கல்யாணத்தையும் நான் ஒருபோதும் ஏத்துக்க மாட்டேன் என்று அமிர்தாவிடம் கத்துகிறார். அதற்கு எழில் பாட்டி என்று கூற, நீயும் என்னிடம் பேசாதே என்று கோபத்தோடு கூறுகிறார். இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications