கோபிக்கு தெரிய வரும் எழில் திருமண விஷயம்.. ராதிகாவின் எதிர்பாராத பதில்.. நடக்கப்போவது இது தானா?
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமண விஷயம் கோபிக்கு தெரிந்ததும் எழிலுக்கு ஆதரவாக கோபி பேச ராமமூர்த்தி கோபியை திட்டுகிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமண விஷயத்தை அமிர்தாவிடம் கூறாமல் மறைத்து வந்து விடுகிறார்.
எழிலுக்கு நாளைக்கு திருமணம் என்ற செய்தியை கேட்டு கோபி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
எழிலின் காதல் மற்றும் பிடிக்காத திருமண செய்தியை கேட்டு ராதிகா மனதிற்குள்ளே யோசித்துக் கொண்டிருக்கிறார்.

திருமணத்தை மறைக்கும் எழில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எழில் அமிர்தாவை பார்க்க போன இடத்தில் என்னை மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்கிறார். அமிர்தா எழில் அழுவதை பார்த்து பாட்டி என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொன்னாங்களா? என்று கேட்க எழில் என்ன பதில் சொல்ல என தெரியாமல் யோசித்தபடி நிற்கிறார். பிறகு அமிர்தா பரவாயில்லை நான் வெயிட் பண்ணுகிறேன், எவ்வளவு நாள் ஆனாலும் நான் காத்துகிட்டு இருக்கேன் என்று கூறுகிறார். நான் என்னென்னமோ பேசணும்னு வந்தேன் ஆனால் என்னால எதுவும் பேச முடியல மன்னிச்சிடுங்க, நீங்க வீட்டுக்கு போங்க என்னை பத்தி எந்த செய்தி வந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லி எழில் அங்கிருந்து கிளம்ப அமிர்தா எதுவும் புரியாமல் நிற்கிறார்.

ஜெனியிடம் எழில் கோரிக்கை
பிறகு வீட்டிற்கு வந்த எழிலிடம் பாக்கியா உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா என்று கேட்க, இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்காதீங்க, பாட்டி சொன்னா எல்லாம் நல்லதா தான் இருக்கும் என சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பி மேலே சென்று விடுகிறார். பிறகு அங்கு வரும் ஜெனி ரொம்ப கஷ்டமா இருக்கு என இந்த குடும்பத்துக்காக நீங்க உங்க வாழ்க்கையை எதற்கு இப்படி தொலைக்கணும். இந்த வீட்டுக்காக ஏன் நீங்க இப்படி கஷ்டப்படணும் என எழிலிடம் கேட்க? என்னோட கல்யாணத்தால இந்த வீடு சந்தோஷமா இருக்கும்னு அது நடந்துட்டு போகட்டும் தயவுசெய்து இதை அம்மாகிட்ட சொல்லிடாதீங்க எப்பவுமே அவங்களுக்கு தெரிய கூடாது என்று கூறுகிறார்.

அவசர திருமணம்
அடுத்ததாக கோபி வீட்டிற்கு செழியன் வருகிறார். அங்கே கோபி, இனியா, ராதிகா, ராமமூர்த்தி என அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது எழிலுக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்து இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்னைக்கு சாயங்காலம் நிச்சயதார்த்தம் நாளைக்கு கல்யாணம் என்று சொன்னதும் இன்னும் அதிர்ச்சி அடைகிறார்கள். கோபி எழிலுக்கு வேலை இல்லாமல் இருக்கான் அதுக்குள்ள எதுக்கு கல்யாணம் என கேட்கிறார்.

செழியனின் விளக்கம்
அதற்குச் செழியன் அந்த ப்ரொடியூசர் பொண்ணு எழிலை விரும்புறாங்க, இந்த திருமணம் நடந்தால் வீட்டில் இருக்கும் பணப்பிரச்சனையும் தீர்ந்து விடும். பணத்துக்காக மட்டும் எழிலுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இவனும் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று சொல்கிறார். அது பாட்டிக்கு பிடிக்கல. அதனால அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து இந்த கல்யாணத்தை உடனே நடத்த முடிவெடுத்து இருக்காங்க என்று சொல்ல கோபியும் ராதிகாவும் அதிர்ச்சி ஆகின்றனர்.

கோபியின் கேள்வி
பிறகு கோபி அவனுக்கு பிடிக்காத திருமணத்தை எதற்கு செஞ்சு வைக்கணும் இவ்வளவு அவசரமா என்று கேட்க? அதற்கு ராமமூர்த்தி அவன் மேல ரொம்ப பாசம் இருக்கிற மாதிரி நீ நடிக்காத என்று திட்டுகிறார். பிறகு என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்று கோபி சொல்ல , ராதிகா எனக்கு என்னமோ சரின்னு தோணல என்று சொல்ல வர, அதை சொல்லாமல் ஒன்னும் இல்லை என்று மறைத்து விடுகிறார். பின்பு செழியன் கோபி மற்றும் ராதிகாவை நிச்சயதார்த்தத்துக்கு வந்து விடுங்கள் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications