பாய் பிரண்ட் உடன் போனில் சாட் செய்யும் இனியா... ராதிகா கேட்ட கேள்வி.. பதிலடி கொடுத்த பாக்கியா
இனியா பாய் பிரண்டுடன் போனில் சேட் செய்து கொண்டு இருப்பதை பார்த்து ராதிகா கேள்வி கேட்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவும் எழிலும் அனைவர் முன்னாடியும் சாப்பிட வந்தால் நான் சாப்பிட மாட்டேன் என்று ஈஸ்வரி பிடிவாதம் பிடிக்கிறார்.
புதியதாக டியூஷன் வந்த சரணுடன் இனியா ரகசியமாக போனில் சேட் செய்து கொண்டிருக்கிறார்.
படிக்காமல் இனியா போனில் சேட் செய்வதை பார்த்து ராதிகா திட்டுகிறார்.
என்னைப் பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார் என இனியா ராதிகாவிடம் கோபப்படுகிறார்.

ஜெனியின் வேண்டுகோள்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்யா அடுத்தடுத்து ஏழு நாட்களும் கல்யாணம் ஆர்டர் இருக்கிறது என்று சொன்னதற்கு, அமிதா நானும் உங்களோடு வருகிறேன் என்று சொல்கிறார். உடனே ஜெனியும் நானும் அப்போது வருகிறேன் என்று சொல்ல, பாக்கியா இப்போ உனக்கு அஞ்சு மாசத்துக்கு மேல ஆயிடுச்சி அதனால நீ வர வேண்டாம். நீ தான் இந்த கம்பெனியின் மேனேஜர் அது உனக்கு நினைவு இருக்கிறதா? நீ வீட்டில் இருந்தே வேலையை பார்க்கணும். உனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று சொல்ல, அப்போ இனி நிலா பாப்பாவை என்னோடு விட்டுவிட்டு போங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.

சரண் அறிமுகம்
வேண்டாம் நிலாவை நாங்க வேலை பாக்குற இடத்துக்கு கூட்டிட்டு போகிறேன் என்று அமிர்தா சொல்ல, முடியாது என்று ஜெனி கூறிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் பாசத்தை பார்த்து செல்வி பொதுவா மருமகள்களால் மாமியாருக்கு தலைவலித்தான் வரும் ஆனா இங்க வித்தியாசமாக இருக்கிறது என்று பாராட்டுகிறார். அடுத்ததாக இனியா டியூசனில் இருக்கும் போது அங்கு சரண் என்ற பையன் கையில் ரோஸுடன் உள்ளே என்ட்ரி கொடுக்கிறார். பிறகு ரோஸை ஆசிரியரிடம் கொடுத்து அறிமுகம் ஆகி கொள்கிறார். வேறு எங்கும் இடம் இல்லாததால் இனியா பக்கத்தில் சரண் அமர்ந்திருக்கிறார். இனியாவிடம் சரண் பேனா இருக்கா என கேட்க இனியா பேனாவை எடுத்து கொடுக்க, சும்மா ஃபன் பண்ண கேட்டேன் என்கிட்ட இருக்கிறது என்று கலாய்க்கிறார்.

பாக்யாவின் பதிலடி
பாக்யாவின் வீட்டில் அனைவரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருக்க அப்போது ஜெனி நான் போய் அமிர்தாவையும் எழிலையும் கூட்டிட்டு வரேன் என எழுவதற்கு தயாராக ஈஸ்வரி அவங்க வந்தா நான் சாப்பிட மாட்டேன் என்று கூறுகிறார். பிறகு பாக்யா அவங்க வரமாட்டாங்க நீங்க சாப்பிடுங்க என்று சொல்ல, ராமமூர்த்தி இந்த டைனிங் டேபிள் எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக உட்கார்ந்து சாப்பிடுவோம் என்று சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு செழியன், எல்லாத்துக்கும் காரணம் எழில்தான் என்று சொல்ல, ஏன் உங்க அப்பா ஒண்ணுமே பண்ணலையா? சும்மா அவனையே நோண்டிக்கிட்டு இருக்காத அவர் பண்ணுனதெல்லாம் உனக்கு மறந்து போச்சா? என்று பாக்கியா கோபப்படுகிறார்.

சாட் செய்யும் இனியா
பிறகு டியூசன் முடிந்து போகும்போது சரண் இனியாவை பார்த்து பாய் சொல்ல, பக்கத்தில் இருந்த இனியாவின் பிரண்ட் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். உடனே இனியாகவும் கையை கொடுத்து ஹாய் சொல்லி அறிமுகம் ஆகி கொள்ள, இனியாவின் பிரண்ட் இருவரையும் முறைத்து பார்க்கிறார். பிறகு கோபி வீட்டில் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது இனியா படிப்பது போல போனை வைத்துக் கொண்டு சரணுடன் சாட் செய்து கொண்டிருக்கிறார். இதை கவனிக்காமல் கோபி தன்னுடைய வேலையை கவனத்தை வைத்திருக்கிறார்.

கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி
இனியா படிக்காமல் போன் யூஸ் பண்ணி கொண்டு இருப்பதை பார்த்து ராதிகா படிக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க, முக்கால் மணி நேரமா நீ படிக்காமல் போனில் தான் உன்னுடைய கவனம் முழுக்க இருக்கிறது என்று திட்ட, கோபி அவ படிச்சுக்கிட்டு தான் இருக்கா என்று சொல்கிறார். பிறகு நீங்க பாருங்க என்று சொல்ல, அப்போதும் இனியா போனில் தான் சாட் செய்து கொண்டிருக்கிறார். இதனால் கோபமான ராதிகா ஃபோனை கீழே வைத்து விட்டு புக்கை எடுத்து படி இனியா, அப்படி இவ்வளவு நேரமா நீ யார்கிட்ட தான் சேட் பண்ணிக்கிட்டு இருக்க? என்ன என்று கேட்க, இதையெல்லாம் நீங்க எதுக்கு கேக்குறீங்க என்று இனியா கோபப்படுகிறார். இதை பார்த்த கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications