Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனியாவுக்கு போட்டியாக மயூ செய்த செயல்.. பாக்யாவை அவமானப்படுத்திய ராதிகாவிற்கு கிடைத்த அதிர்ச்சி

ராதிகாவின் ஆபீசுக்கு வந்த பாக்கியாவை ராதிகா அவமானம் செய்தாலும் கடைசியில் பாக்யாவுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா டியூஷனுக்கு செல்வதற்காக தனக்கு சைக்கிள் வேண்டும் என்று கோபியிடம் கேட்க அதை ராதிகா முதலில் மறுக்கிறார்.

இனியா சைக்கிள் கேட்டதால் மயூவும் எனக்கும் வேண்டும் என்று கேட்க, கோபி மறுப்பு தெரிவிக்க முடியாமல் சரி என்று சொல்கிறார்.

ராதிகாவின் ஆபிசுக்கு பாக்கியா வந்திருப்பதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

சைக்கிள் கேட்ட இனியா

சைக்கிள் கேட்ட இனியா

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் கோபி மயூவிற்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் இனியா டாடி எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும் டியூசன்ல படிக்கிற எல்லோரும் சைக்கிள்ல தான் வராங்க. நான் மட்டும்தான் நடந்து போறேன். எனக்கும் ஒரு சைக்கிள் வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு தாத்தா ராமமூர்த்தி நான்தான் உன்னை தினமும் கூட்டிக்கிட்டு போயிட்டு கூட்டிட்டு வரேன் இல்ல, அதேபோல போகலாம் சைக்கிள் எதுக்கு என்று சொல்கிறார். அதுபோல ராதிகாவும் இன்னும் ஒரு வருஷத்துல டூவீலர் ஓட்டலாம் இப்ப எதுக்கு சைக்கிள் என்று கேட்கிறார். அதற்கு இனியா நான் இப்போ டியூஷன் போவதற்கு தான் சைக்கிள் வேணும் அடுத்த வருடம் டூவீலர் வாங்கின பிறகு நான் இந்த வருஷம் டியூஷன் படிக்க முடியாது என்று சொல்ல, கோபி சரி வாங்கி தருகிறேன் என்று சமாதானம் செய்கிறார்.

பயப்படும் ராதிகா

பயப்படும் ராதிகா

கோபி சொன்ன பதிலை கேட்டு மயூ, டாடி அப்போ எனக்கும் ஒரு சைக்கிள் வேண்டும் என்று கேட்கிறார். கோபி மறுப்பு எதுவும் சொல்ல முடியாமல் சரி வாங்கி தருகிறேன். சைக்கிள் தானே ரெண்டு சைக்கிள் வாங்கிடுவோம். எல்லோரும் சைக்கிள்லே போகலாம் என்று சொல்ல, இனியா தேங்க்ஸ் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்த நாள் காலையில் கோபி ஆபீசுக்கு கிளம்பி இருக்கும்போது ராதிகா என்னை ஆபீஸ்ல ட்ராப் பண்ணிருங்க, இன்னைக்கு கேண்டீன் டெண்டர் வொர்க் இருக்கு என்று சொல்கிறார். திரும்பவும் இந்த டெண்டர்காக பாக்கியலட்சுமி வந்துருவாங்களோனு பயமா இருக்கு என்று பாக்கியா சொல்ல, அவளுக்கு டெண்டர்னா என்னன்னு தெரியாது. அவ வரமாட்டா, என்று கோபி ராதிகாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

பாக்யாவின் பதிலடி

பாக்யாவின் பதிலடி

மறுபக்கம் பாக்யா ராதிகா ஆபீசுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது அமிர்தாவிடம் நீ அத்தை முன்னாடி போய் நிற்காத அவங்க கோவப்படுவாங்க என்று கூறிவிட்டு, நான் போயிட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார். பாக்யா சென்றதைப் பார்த்து ஜெனி எழிலிடம் அத்தை சமாளிச்சுருவாங்களா? என்று கேட்க, பாருங்க அம்மா தூள் கிளப்பிட்டு வருவாங்க என்று எழில் கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஆபீஸில் ராதிகா பாக்யாவை பார்த்து தடுத்து நிறுத்துகிறார். எங்க வந்தீங்க என்று கேட்க? இது ஆபீஸ் தானே ஆபீஸ்க்கு தான் வந்தோம் என்று பாக்யா பதிலடி கொடுக்கிறார்.

அவமானப்படுத்தும் ராதிகா

அவமானப்படுத்தும் ராதிகா

இங்கு என்ன வேலையா வந்தீங்க என்று ராதிகா கேட்க? டெண்டர் எடுக்க வந்தோம் என்று பாக்யா சொல்கின்றார். அதற்கு பேப்பர்ல பாத்துட்டு சும்மா வந்தா எல்லாம் டெண்டர் கிடைக்காது. அதுக்கு நீங்க அப்ளை பண்ணி இருக்கணும் என்று ராதிகா சொல்ல, அதெல்லாம் பண்ணிட்டு நீ உங்க ஆபீஸிலிருந்து போன் பண்ணியதால் தான் நாங்கள் வந்தோம் என்று பாக்யா சொல்ல, ராதிகா மேலும் அதிர்ச்சி ஆகிறார். பிறகு டெண்டர் தொடங்குகிறது. அங்கே பலர் அமர்ந்திருக்கும் இடத்தில் பாக்யா மட்டும் தனி பெண்ணாக அமர்ந்து இருக்கிறார். அனைவரும் ஒரு பெண்ணால் எப்படி இங்கு இதை மேனேஜ் செய்ய முடியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ராதிகாவின் எம்டி ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து கொள்ள சொல்ல, அப்போது பாக்யா தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார். முதலில் மசாலா பிசினஸ் ஆரம்பித்து என்று பாக்யா சொல்லும்போது ராதிகா தடுத்து நிறுத்தி உங்க ஆரம்பக் கதைக்களம் எல்லாம் கேட்கல, இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லுங்க என சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர்.

பாக்கியா ஜெயிச்சுட்டீங்க

பாக்கியா ஜெயிச்சுட்டீங்க

பிறகு பாக்கியா தான் செய்து கொண்டிருக்கும் வேலையை சொல்லி விட்டு உட்கார, பிறகு எல்லோரும் கொடுத்திருந்த தொகையை விட ஈஸ்வரி கேட்டரிங் குறைவான தொகையில் தரமான உணவு சப்ளை செய்வதாக தெரிவித்துள்ளனர் என ராதிகாவின் எம்டி சொல்ல, பாக்யா சந்தோஷப்படுகிறார். பிறகு எல்லோரையும் பத்து நிமிஷம் வெளியே காத்திருக்க சொல்கின்றனர். ராதிகா வெளியே வரும்போது டெண்டர் நமக்குத்தான் கிடைக்கும் என்று நினைப்பதாக பாக்கியா செல்வியிடம் சொல்கிறார். அதற்கு ராதிகா நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு உள்ளே செல்கிறார். மீண்டும் மீட்டிங் தொடங்க இந்த டெண்டரை நாங்கள் ஈஸ்வரி கேட்டரிங்கிற்க்கு கொடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறோம் என்று ராதிகாவின் எம் டி சொல்கிறார். பாக்யா எம்டிக்கு நன்றி கூறிவிட்டு, அதிர்ச்சியாக இருக்கும் நிற்கும் ராதிகாவை பார்த்து சிரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+