பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பார்க்காத சொதப்பல்.. இத்தனை வருடம் ஆகியும் இது நினைவு இல்லையா?
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட்டின் டப்பிங் சில குளறுபடிகள் நடந்திருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த மூன்று வருடங்களாகவே ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் டப்பிங்கில் செல்வியாக நடிக்கும் கம்பம் மீனா சில தவறுகளை செய்திருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
ராதிகா என்கிற பெயருக்கு பதிலாக கம்பம் மீனா பேசிய வார்த்தையை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பெண்ணின் துணிச்சல்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைகளத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. தன்னை வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே ஒதுக்கி வந்த கணவர் தன்னை விட்டு விலகி சென்று தனக்கு பிடித்த காதலியை திருமணம் செய்து கொண்டு விட்டாலும், தன்னால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று ஒவ்வொரு இடத்திலும் பாக்கியா நிரூபித்து வருகிறார். ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்ப பெண்ணின் கதையை மையமாகக் கொண்ட இந்த கதை தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

எழில் அமிர்தாவின் திருமணம்
ஏற்கனவே சில வாரங்களாகவே பரபரப்போடு எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் இருந்த நிலையில் கடைசியில் பாக்கியாவால் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கடைசி வரைக்கும் எழில் யாரை திருமணம் செய்வார் என்று பெருத்த எதிர்பார்ப்போடு வைத்து முடிவில் பாக்கியாவின் முயற்சியால் எழிலுக்கு அவருக்கு மனதிற்கு பிடித்த அமிர்தாவே மனைவியாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்ததாக பாக்யாவுக்கு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது.

தொடரும் பிரச்சனைகள்
வீட்டில் ஒரு பக்கம் மாமியார் ஈஸ்வரி மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார். தனக்கு பிடிக்காத திருமணத்தை எழிலுக்கு செய்து வைத்து விட்டதால் அமிர்தாவை எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கும் ஈஸ்வரியையும் சமாளித்துக் கொண்டு கோபி தனக்கு இன்னும் 20 லட்சம் தந்தால் தான் இந்த வீட்டை என்னுடைய அம்மா அல்லது அப்பா பெயருக்கு எழுதி வைப்பேன். இல்லை என்றால் எல்லோரும் வீட்டை காலி செய்து கிளம்ப வேண்டியதுதான் என்று கூறிய நிலையில், அந்த சவாலிலும் நானே ஜெயிப்பேன் என்று கூறி தொடர்ந்து எட்டு நாட்கள் சமையல் செய்து அதில் 2 லட்சம் ரூபாயை முதல் தவணையாக கோபி இடம் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

என்னது காவியாவா
இந்த நிலையில் அடுத்ததாக ஏற்கனவே ராதிகாவின் ஆபீஸில் கேட்டரிங் ஆர்டருக்காக முயற்சி செய்து பின்பு ராதிகாவின் சூழ்ச்சியால் அது பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு ராதிகா ஆபீஸில் பாக்யாவிற்க்கு கேட்டரிங் ஆர்டர் என்று பைனல் செய்யப்பட்டு நிலையில், தொடர்ந்து ராதிகா பல கொடைச்சல்களை கொடுத்து வருகிறார். பல பேர் முன்பு பாக்யாவை அவமானம் செய்தும் நோக்கில் பாக்யாவிடம் இங்கிலீஷில் கேள்வி கேட்டு அவமானம் செய்த ராதிகாவை எல்லாம் முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது கம்பம் மீனா அதாவது செல்வி, பாக்கியவிடம் திட்டிக்கொண்டே வருகிறார். அப்போது இந்த ராதிகாவுக்கு வேற வேலையே இல்லை என்று சொல்வதற்கு பதிலாக, இந்த காவியாவிற்கு வேலையே இல்லை என்று கூறுகிறார். இதை தற்போது ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள். அதிலும் யார் அந்த காவியா ஈரமான ரோஜாவே காவியாவா? அங்கே தான் அவர் அழுது கொண்டே இருக்கிறார் என்றால் அவரை எங்கேயுமா இழுப்பீங்க என்று கேள்வி எழுப்புகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications