அடுத்தடுத்து அவமானம் செய்த ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த பாக்யா..திட்டிய ஈஸ்வரி..இனி அமிர்தா முடிவு?
ஆபீஸில் ராதிகா பாக்யாவிடம் இங்கிலீஷில் கேள்வி கேட்டு மிரட்டி கொண்டிருக்க அதற்கு பாக்யா பதிலடி கொடுத்து கொண்டு இருக்கிறார்.
சென்னை:பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் ஆபீசில் பாக்யாவிற்கு கேட்டரிங் ஆர்டர் கிடைத்துவிட்டது.
ஆர்டரை எப்படியாவது கேன்சல் செய்ய வேண்டும் என்று ராதிகா பாக்யாவிடம் இங்கிலீஷில் கேள்வி கேட்டு குழப்பி கொண்டு இருக்க, எம்டி பாக்யாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
ஈஸ்வரிக்கு அமிர்தா மாத்திரை எடுத்துக் கொடுக்க அதை தட்டி விட்டு ஈஸ்வரி திட்டி இருக்கிறார்.. அதனால் அமிர்தா சோகத்தில் இருக்கிறார்.

கேள்வி கேட்கும் ராதிகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி கேட்டரிங் காண்ட்ராக்ட் கொடுக்க முடிவெடுத்து இருப்பதாக ராதிகாவின் எம் டி சொல்கிறார். இதை கேட்ட ராதிகா அதிர்ச்சி அடைகிறார். சந்தோஷத்தில் எம்பிக்கு நன்றி கூறிவிட்டு ராதிகாவை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார். பிறகு பாக்கியா, செல்வி, ராதிகா மற்றும் பாஸ் நால்வரும் மட்டும் ஒரே ரூமில் இருக்கும்போது ராதிகாவிடம் இவங்க கிட்ட உங்களுக்கு ஏதாவது கேட்கணும் என்றால் கேட்டுக்கோங்க என்று சொல்ல, ராதிகா ஆமாம் இருக்கு என்று சொல்லி இங்கிலீஷில் அடுத்தடுத்து கேள்விகளை கேட்கிறார் அதற்கு பாக்கியா பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

பாக்யாவிற்கு கிடைத்த சப்போர்ட்
பாக்யாவை அவமானம் செய்ய வேண்டும் என்று ராதிகா செய்து கொண்டிருக்கும் வேலையை பார்த்து அவருடைய எம்டி கேள்வி கேட்க சொன்னா என்ன மிரட்டிட்டு இருக்கீங்களா? பாவம் அவங்க பயந்துட்டாங்க. அவங்க தான் அவர்களுடைய கேட்டரிங் சர்வீஸ் பற்றி தெளிவா சொல்லி இருக்காங்களே! அது மட்டும் இல்லாமல் என்னுடைய நண்பன் ராஜசேகர் அவ்வளவு நம்பிக்கையா சொல்லி இருக்கான், கண்டிப்பா அவங்க நல்லா சமைப்பாங்க, சமைப்பீங்களா? என்று பாக்யாவிடம் கேட்க அதற்கு கண்டிப்பாக செய்வேன் என்று பாக்கியா கூறுகிறார்.

எல்லாம் தெரிஞ்சவங்க கிடையாது
அதற்கு ராதிகா அப்படி இல்லை சார் இங்க எல்லோரும் வேற வேற இடத்துல இருந்து வந்து வேலை பாக்குறாங்க இங்கிலீஷ் தெரியாம எப்படி சார் இவங்க சமாளிப்பாங்க என்று கேட்க? அதற்கு வாய் திறந்து பேசணும்னு தேவையில்லை கை காட்டினால் கொடுத்து விட போறோம் என்று பாக்கியா சொல்ல, அதற்கு எம்டி அவ்வளவுதான் விட்டு விடுங்கள் அதெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க என்று சொல்ல, ராதிகா பல்பு வாங்குகிறார். பிறகு எம்டி எழுந்து வெளியே சென்றதும் எல்லாத்தையும் பிறக்கும் போதே கத்துகிட்டு பிறக்கிறது கிடையாது. தேவைப்படும் போது தான் தெரிஞ்சுக்கிறோம். நானும் அப்படி தேவையானதை தெரிந்து கொள்வேன் என்று பாக்கியா ராதிகாவிடம் கூறுகிறார்.

நல்ல சாப்பாடு கிடைக்கும்
அதற்கு ராதிகா உங்களுக்கு ஆர்டர் கிடைத்து விட்டது என்று ரொம்ப சந்தோஷப்படுறீங்களா? நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்ல, எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க இங்கேதான் இருப்பீங்க.இங்கே இருந்து எங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே தான் இருப்பீங்க என்று செல்வி ராதிகாவை பற்றி பேசுகிறார். எங்க அக்கா தான் உங்ககிட்ட எந்த பிரச்சனையும் வச்சுக்காம விலகி தானே போறாங்க? நீங்க எதற்கு இப்படி பண்றீங்க? என்று கேட்க, உங்க அக்கா தான் நான் எங்க சென்றாலும் அங்கேயே வந்து நிற்கிறாங்க என்று ராதிகாவும் கூறுகிறார். பிறகு பாக்யா இனி நீங்க தினமும் வந்து சுவையா சாப்பிட்டு போங்க. நான் இங்க வேலை பார்க்கிறதால உங்களுக்கு தினமும் இனி நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

ஸ்வீட்டோடு கொண்டாட்டம்
அதே நேரத்தில் ஈஸ்வரிக்கு மருந்து கொடுக்கணும் என அமிர்தா ஜெனி தூங்கிக் கொண்டிருப்பதால் தானே சென்று கொடுக்க, ஈஸ்வரி கோபப்பட்டு அதை தட்டி விட்டு அமிர்தாவை திட்டுகிறார். பிறகு சத்தம் கேட்டு ஜெனி வந்து ஈஸ்வரியை சமாதானம் செய்ய, ஈஸ்வரி பேசியதை எல்லாம் அமிர்தா யோசித்துக் கொண்டே நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா வீட்டிற்கு வந்து ஸ்வீட் கொடுத்து எல்லோருக்கும் காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை கூறிக் கொண்டிருக்க, அங்கே பாக்யா உடன் வேலை செய்யும் பெண்களும் வர அவர்களுக்கும் ஸ்வீட் கொடுத்து விஷயத்தை சொல்லி மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications