செழியன் செய்யும் சூழ்ச்சி.. எழிலுக்கு எதிராக வர்ஷினி போடும் திட்டம்.. ஈஸ்வரிக்கு கிடைத்த அதிர்ச்சி!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் திருமண விஷயத்தில் வர்ஷினியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஈஸ்வரி உறுதியாக இருக்கிறார்.

எழில் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருப்பதை செழியன் பார்த்து தெரிந்து கொண்டு ஈஸ்வரியிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார்.

எழிலுக்கு எதிராக வர்ஷினி புதிய திட்டத்தை போடுகிறார். அதனால் இனி எழில் அடுத்த பிரச்சனையில் மாட்ட இருக்கிறார்.

ஜெனிக்கு வரும் சந்தேகம்

ஜெனிக்கு வரும் சந்தேகம்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ஜெனி வீட்டில் அமர்ந்திருக்கிறார். அப்போது வர்ஷினி அங்கே வர அவரை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறார். வந்ததும் பாட்டி இல்லையா? என கேட்க அதற்குள் ஈஸ்வரி வெளியே வந்து விடுகிறார். பிறகு செழியனை கூப்பிடு என கூறுகிறார். அடுத்து எல்லோரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க, ஈஸ்வரி ஜெனியை எப்படியாவது மேலே அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பிறகு செழியனை வைத்து ஜெனியை மேலே போகச் சொல்ல ஜெனிக்கு சந்தேகம் வருகிறது.

வர்ஷினியின் புது பிளான்

வர்ஷினியின் புது பிளான்

அடுத்து வர்ஷினி எழிலை கல்யாணம் பண்ணிக்க ஒரு வழி இருக்கு என சொல்ல, ஈஸ்வரி என்னவென்று கேட்கிறார். அதற்கு எழிலுக்கு இப்போது அதிகமான பணம் தேவைப்படுகிறது. தேவையான மொத்த பணத்தையும் அப்பாவை கொடுக்க சொல்கிறேன். அவர் என்னை கல்யாணம் பண்ணிக்குவாரா? என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி பணத்துக்காக தான் உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று நினைக்கிறாயா? என கேட்க, ஐயோ அப்படி எல்லாம் இல்லை பாட்டி எனக்கு எப்படியாவது எழிலை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வரணும் என சொல்ல, செழியனும் இது நல்ல ஐடியா தான் என்று கூறுகிறார்.

எழிலின் முடிவு

எழிலின் முடிவு

அடுத்து இரவு எழில் அமிர்தாவிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் அதை ஒட்டு கேட்கிறார். அடுத்ததாக அமிர்தாவை விட்டுட்டு நீ நினைக்கிறது கண்டிப்பாக நடக்காது. வீட்டில் யாருக்கும் அமிர்தாவை பிடிக்கலை என சொல்கிறார். நான் பேசுவதை நீ எதற்கு ஒட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறாய் என்று எழில் செழியனை திட்ட, செழியன் நீ சுயநலமாக யோசிக்காதே வீட்டில் நடக்கிற பிரச்சனையில் இது இப்போ தேவையா? என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு எழில் எனக்கு அமிர்தாவை பிடித்திருக்கிறது. என்னைக்கு இருந்தாலும் அமிர்தாவை தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று கூறுகிறார்.

செழியனுக்கு பதிலடி

செழியனுக்கு பதிலடி

பிறகு செழியன் நான் மட்டும் உன்னுடைய இடத்தில் இருந்திருந்தால் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பணத்தை வாங்கிட்டு வந்து வீட்டு பிரச்சனையை சால்வ் பண்ணி இருப்பேன் என சொல்ல, பணத்தை வாங்கிட்டு வந்து இருப்பேன்னு சொல்லு, ஆனா வீட்டு பிரச்சனையை தீர்த்து இருப்பேன் மட்டும் சொல்லாத, அதை நான் நம்ப மாட்டேன் என்று செழியனுக்கு எழில் பதில் கொடுக்கிறார். எழிலின் திடீர் பதிலால் அதிர்ச்சியான செழியன் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

எழிலுக்கு எதிராக சதி

எழிலுக்கு எதிராக சதி

அடுத்த நாள் காலையில் செழியன் எழில் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருப்பதை ஈஸ்வரி இடம் சொல்ல, அவர் அதிர்ச்சி அடைகிறார். நாம் ஏன் இந்த வீட்டு பிரச்சனையை வைத்து எழிலுக்கும் வர்ஷினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது என்று சொல்கிறார். இந்த வாய்ப்பை விட்டு விட்டா அவன் கண்டிப்பா அமிர்தாவை கல்யாணம் பண்ணிப்பான் என சொல்கிறார். அதே நேரத்தில் ராமமூர்த்தி ஒருவரை சந்தித்து வீடு 40 லட்சம், நிலம் ஏக்கருக்கு 10 லட்சம் என சொல்லி பிறகு 9 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கிறார்கள். இந்த பக்கம் செழியனும் ஈஸ்வரியும் வர்ஷினியின் அப்பாவை சந்தித்து பேசுகின்றனர். ஈஸ்வரி எழில் கண்டிப்பா வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான் என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+