தேர்தலுக்கு தயாரான பாக்கியா.. வில்லியாக மாறிய ராதிகா பக்கத்தில் ராமமூர்த்தி.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தேர்தலில் போட்டியிடும் போது அவரை எதிர்த்து ராதிகா போட்டியிடுகிறார்.
பாக்கியாவை எதிர்த்து ராதிகா பேசும் வார்த்தைகளை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

ராதிகாவை சமாதானப்படுத்திய கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவை தேர்தலில் நிற்க சொல்ல, ராதிகா என்னால் முடியாது நீங்க நினைக்கிறதற்க்கெல்லாம் நான் ஆள் கிடையாது என கூறுகிறார். அடுத்து கோபி நீதானே என்னுடைய மனைவி என்கிற அங்கீகாரம் வேண்டும் என்று சொன்னாய், எப்படியும் நீ இந்த எலக்ஷனில் நின்றால் நீ தான் ஜெயிப்பாய். உனக்கு கோபியின் மனைவி என்கிற பெயர் இங்கே அனைவருக்கும் தெரிந்து விடும். அதுமட்டுமல்லாமல் நீ ஜெயித்துவிட்டால் செக்ரட்டரியின் கணவர் என்று என்னையும் அழைப்பார்கள் என பல வார்த்தைகளை பேசி ஒரு வழியாக ராதிகாவை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க சம்மதிக்க வைக்கிறார்.

ராதிகாவின் திமிர் செயல்
அடுத்து கூட்டம் கூடி இருக்கும் இடத்தில் ஏரியா செக்ரட்டரி என் மனைவி தேர்தலில் நிற்கல என சொல்கிறார். அதற்கு செல்வி அப்போ எங்க அக்கா போட்டியில்லாமல் ஜெயிச்சுட்டாங்களா? என கேட்க இல்லை வேற ஒருத்தங்க நிற்கிறாங்க என கூறுகிறார். யார் என்று அனைவரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கொஞ்சம் பொறுங்கள் இப்போது தெரியும் என்று செக்ரட்டரி கூறுகிறார். அப்போது கோபி, ராதிகாவுடன் அங்கே வருகிறார். ராதிகா பாக்யாவை நேருக்கு நேர் பார்த்து முறைத்தபடி பாக்யாவின் முன்பு வந்து அவருடைய கூந்தலை தூக்கி விரைப்பாக பின்னாடி போட்டு கொண்டு வில்லி நட போடுகிறார். அடுத்து கோபி வந்ததும் செக்ரெட்டரி ராதிகாவையும் கோபியையும் மேடைக்கு அழைக்கிறார்.

பாக்கியா கொடுத்த சிறப்பான பதில்
அடுத்ததாக பாக்யாவை மேடையில் வந்து கையெழுத்து போடும்படி செக்கரட்டரி சொல்ல, பாக்கியாவும் மேலே செல்கிறார். அப்போது பார்ம் பீல் பண்ணும் போது கணவரின் பெயரை ஃபில் பண்ணாமல் பாக்யா அடுத்த காலத்தை ஃபில் பண்ண, செகரட்டரி கணவரின் பெயரை ஃபில் பண்ண வேண்டும் என்று பாக்யாவை சீண்டி பார்க்கிறார். அதற்கு என்னை விட்டுட்டு போன கணவருடைய பெயரை நான் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என அந்த இடத்தில் தந்தை பெயர் என ராமமூர்த்தியின் பெயரை பதிவிடுகிறார் .பாக்கியாவின் செயலைப் பார்த்து ராமமூர்த்தி அதிர்ச்சியாகி இனி ராதிகா என்னுடைய மருமகள் இல்லை, என்னுடைய மகள் என்று கூறுகிறார். கடைசியில் பாக்கியா ஃபாம் பில் பண்ணி முடித்ததும் பாக்யாவை எதிர்த்து யார் நிற்க போகிறார் என்று கேட்டபோது கோபி எழுந்து நிற்கிறார். அப்போது அனைவரும் இங்கே ஆண்கள் போட்டியிட முடியாது என்று சொன்னதும் நான் போட்டி விடவில்லை என்னுடைய மனைவி ராதிகா நிற்கப் போகிறார் என்று ராதிகாவை அறிமுகப்படுத்துகிறார்.

ஓட்டு கேட்பு
ராதிகாவும் பாக்யாவும் மேடையில் நேருக்கு நேராக நின்று கொண்டு முறைத்துக் கொள்கின்றனர். பின்பு ராதிகா கையெழுத்துப் போட்ட பின்பு இருவரையும் யாராவது வழிமொழிய வேண்டும் என்று சொல்ல, பாக்கியவை வழிமொழிய ராமமூர்த்தி வருகிறார். அவர் என்னுடைய மகளான மருமகளை உங்கள் அனைவருக்குமே தெரியும் அதனால் பாக்யாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார். அவரைத் தொடர்ந்து ராதிகாவுக்கு ஓட்டு போட சொல்லி கோபி தற்பெருமையாக பேசுகிறார். தான் அதிகமாக படித்ததாகவும் பொறுப்புள்ள வேலையில் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பேசிக் கொண்டிருக்கும்போது கீழே இருக்கும் பெண்கள் இவர் யார் என்றே தெரியாது. காரில் அப்பப்போ போவதை பார்த்து இருக்கிறோம் அவ்வளவுதான் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து ராதிகா வந்து சமையல் செஞ்சு வீட்ல துணி துவைச்சி போட்டுட்டா ஒரு ஏரியாவை கவனிக்க முடியாது. அதுக்காக படிப்பறிவு அனுபவம் தேவை என ஓட்டு கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications