ராதிகாவின் வீட்டிலிருந்தே அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்த ராமமூர்த்தி... கண்டுபிடித்த கோபியின் முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு எதிராக ராதிகாவும் எலக்ஷனின் நிற்க, ராதிகா பேசிய வார்த்தையை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
பாக்கியா ஜெயித்து விட்டு தான் இதற்கு பதில் பேச வேண்டும் என முடிவெடுக்க பாக்யாவுக்கு ஆதரவாக ராமமூர்த்தி ராதிகாவில் வீட்டில் இருந்தே செயல்பட்டுக் கொண்டிருப்பது கோபிக்கு தெரிந்து விட்டது.

ராதிகாவின் சவாலான பேச்சு
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாக்கியலட்சுமிக்கு எதிராக தேர்தலில் நிற்கும் ராதிகா மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் வீட்டு வேலைகளை சிறப்பாக செய்பவர்களால் இவ்வளவு பெரிய செகரட்டரி வேலையை செய்ய முடியாது. படித்தவர்களால் தான் இந்த வேலையை சிறப்பாக செய்ய முடியும் அதனால் எனக்கு வாய்ப்பு அளிக்க உங்களிடம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி முடிக்க மக்கள் அனைவரும் கைதட்டுகின்றனர். இதை பார்த்த பாக்கியா முறைத்துக் கொண்டிருக்கிறார். மேடையை விட்டு கீழே இறங்கும் போது ராதிகாவும் பாக்கியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க கோபி நமட்டு சிரிப்போடு கடந்து செல்கிறார்.

செழியனின் திடீர் மனமாற்றம்
அனைவரும் வீட்டிற்கு வந்ததும் செல்வி பாக்யாவுக்கு எதிராக ராதிகா தேர்தலில் நிற்பதை பற்றி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி இதனால்தான் நான் உன்னை தேர்தலில் நிற்க வேண்டாம் என்று சொன்னேன். நீ ஒரு பக்கம் தேர்தலில் நிற்க, அவன் ஒரு பக்கம் அவளை தேர்தலில் நிற்பது கேவலம் நமக்குத் தான். எல்லோரும் நம்ம குடும்பத்தை பற்றி தான் அங்கே பேசுவார்கள். அவன் தப்பு செய்தாலும் உன்னையும் பற்றி தானே அங்கே பேசுவார்கள். இதனால் தான் அங்கே நிற்க வேண்டாம் என்று சொன்னேன் என சொல்ல எழில் தப்பு செய்தவரை விட்டு விட்டு எதற்காக அம்மாவை தேர்தலில் நிற்க வேண்டாம் என்று சொல்றீங்க என கேட்க, செழியன் இதற்கு முன்பு கூட தேர்தலில் நீங்கள் நிற்பதை பற்றி எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இப்போ சொல்றேன் என்னுடைய முழு சப்போர்ட்டும் அம்மாவுக்கு தான். அம்மாவுக்காக தான் நான் வேலை செய்வேன் என்று சொல்ல அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர்.

பாக்கியாவுக்கு கிடைக்கும் ஏமாற்றங்கள்
அடுத்ததாக பாக்கியா, எழில், செல்வி மூவரும் வேறு ஒரு பேங்குக்கு லோன் கேட்டு செல்கின்றனர். அங்கே தன்னுடைய நண்பனின் அப்பா சொன்னதாக எழில் மேனேஜரிடம் பேச அவர்கள் தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்பு லோனுக்காக டாக்குமெண்ட், கேட்க எல்லா டாக்குமென்ட்டும் பார்த்த பின்பு நீங்கள் பிசினஸ் தொடங்கி இரண்டு வருடம் தான் ஆகிறது அதனால் உங்களுடைய அப்பாவின் டாக்குமெண்ட் வேண்டும் என்று கேட்டதும் அது முடியாது என சொன்னதால் லோன் கிடைக்க வாய்ப்பில்லை என்று மேனேஜர் கூறி அனுப்பி விட்டார்
பின்பு பாக்கியா தன்னுடைய சமையல் வேலையில் பார்ட்னராக இருக்கும் பெண்களிடம் பணம் தேவைப்படுவதை பற்றி கூற மகளிர் குழுவில் லோன் எடுக்கலாமா? என கேட்க அங்கே இவ்வளவு பெரிய அமௌன்ட் கிடைக்காது என அனைவரும் சொன்னதால் இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பாக்கியா கூறுகிறார்.

அப்பாவை கண்டிக்கும் கோபி
அடுத்ததாக எலக்ஷனில் நோட்டீஸ் ஒட்டுவதற்காக பாக்கியாவுக்கு ஆதரவாக ராமமூர்த்தி வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த இனியா என்ன இது என வார்த்தை கூட்டி படித்து வருகிறார். தமிழில் கூட உனக்கு சரியாக படிக்க தெரியாதா? என்று ராமமூர்த்தி கண்டித்துக் கொண்டிருக்க, அப்போது கோபி அங்கே வருகிறார். என்னுடைய மருமகளை எப்படியும் நான் ஜெயிக்க வைத்து விடுவேன். அவள்தான் தேர்தலில் ஜெயிப்பாள் அவளுக்காக நான் ஒவ்வொரு வீடாக சென்று நோட்டீசை கொடுக்கப் போகிறேன் கட் அவுட் வைக்க போகிறேன் என்று பாக்யாவுக்கு ஆதரவாக ராமமூர்த்தி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியான கோபி, அவர் எழுதி வைத்திருந்த வசனங்களை தூக்கி எரிகிறார். யார் வீட்டில் இருந்து கொண்டு யாருக்கு எதிராக வேலை செய்கிறீர்கள். இது ராதிகா வீடு, என்னுடைய வீடு இங்கு இருந்து கொண்டு அந்த இடியட் பாக்யாவுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எங்கிருந்து சென்று எங்கேயும் போய் இந்த வேலையை பாருங்க என கத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications