நினைத்தது நடக்காத ஏமாற்றத்தில் ராதிகா.. அதிர்ச்சி கொடுக்கும் கோபி.. எழில் பாட்டியால் அடுத்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாராட்டுக்காக ஏங்கி ராதிகா இருக்க கோபியின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அதிர்ச்சியில் இருக்கும் ராதிகாவிடம் கோபியின் அப்பா அடுத்தடுத்ததாக ஏத்தி விடுகிறார்.

ஈஸ்வரி எழிலை கூப்பிட்டு அமிர்தாவை பற்றி கேட்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை என எழில் சொன்னாலும் கேட்காமல் உனக்கும் அமிர்தாவுக்கும் நட்பை தாண்டி எதுவும் இல்லை. இனியும் அப்படி எதுவும் இருக்கக் கூடாது என தனது தலையில் எழில் கையை தூக்கி வைத்து சத்தியம் கேட்கிறார்.

எழிலிடம் போட்டுக் கொடுத்த ஜெனி

எழிலிடம் போட்டுக் கொடுத்த ஜெனி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் எழில் மற்றும் பாக்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனி வந்து எழிலிடம் உனக்கும் அமிர்தாவுக்கும் எதுவும் பிரச்சனையா? என்று கேட்க உனக்கு தெரியுமா என பாக்கியா கேட்க, அவர்கள் இருவருக்கும் இருப்பது எனக்கும் தெரியும் என்று ஜெனி சொல்லிக்கொண்டு பாட்டிக்கு எழில் மீது சந்தேகம் வந்திருக்கிறது என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதுமட்டுமல்லாமல் செழியன், ஈஸ்வரி பாட்டியிடம் அமிர்தா பற்றி கூறியதை சொல்லி கொடுக்கிறார். பாட்டிக்கு தெரிந்து விட்டது என்று அதிர்ச்சியில் பாக்கியாவும் எழிலும் இருக்கின்றனர். பாக்யா எழிலுக்கு ஆதரவு கூறுகிறார். எப்படியும் ஒரு நாள் தெரிய வேண்டியது தானே என்று எழில் கேட்க அது இப்போது தெரிய வேண்டாம் என்று பாக்கியா கூறுகிறார்.

ஏத்தி விடும் தாத்தா

ஏத்தி விடும் தாத்தா

அடுத்த பக்கத்தில் ராதிகா ஆசை ஆசையாக பிரியாணி சமைத்து கொண்டு இருக்கிறார். அதை எல்லோரும் சாப்பிட்டு சூப்பர் என பாராட்டுவது போல கனவு காண்கிறார். பிறகு எல்லோரையும் பிரியாணி சாப்பிட அழைத்து பரிமாற யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க கோபி சூப்பரா இருக்கு பெண்டாஸ்டிக் எந்த ஹோட்டலில் வாங்குன, இதை ஹோட்டலில் இதற்கு முன்பு நாம் வாங்கினதே இல்லை என்று சொல்ல, ராதிகா கடுப்பாகிறார். அடுத்ததாக கோபியின் அப்பா 15 வருஷமா பாக்கியா விதவிதமாக சமைத்து கொடுத்தாலும் ஒரு நாள் கூட நல்லா இருக்குன்னு வாயை திறந்து சொன்னது இல்லை உனக்கு மட்டும் சொல்லுவான் என்று எதிர்பார்க்கிறியா? நீ தெரியாம மாட்டிக்கிட்டா என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

மாட்டிக்கொண்ட கோபி

மாட்டிக்கொண்ட கோபி

அடுத்து ராதிகா கோபி சொன்னதையே நினைத்துக் கொண்டு தனியாக அமர்ந்திருக்க கோபி வந்து என்ன ஆச்சி யார் மீது கோபம் என்று ஒவ்வொருவராக கேட்க, யார் மீதும் இல்லை என்று பாக்கியா சொல்ல நான் இன்று ஆபீசிலிருந்து சீக்கிரமாக வந்து ஆசை ஆசையாக சமைச்சேன் ஆனால் நீங்க இப்படி சொல்லிட்டீங்க என்ன சொல்ல, கோபி திணறியப்படியே உனக்கு எப்படி ஒரு திறமை இருக்குன்னு எனக்கு தெரியாமலே போய்விட்டது. மன்னித்துக் கொள் என்று கெஞ்சி கையில் முத்தமிட அப்போது இனியா வந்து விடுகிறார்.

பாட்டியிடம் சத்தியம்

பாட்டியிடம் சத்தியம்

பிறகு எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி எழிலை கூப்பிட்டு அமிர்தாவை பற்றி கேட்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை என எழில் சொன்னாலும் கேட்காமல் உனக்கும் அமிர்தாவுக்கும் நட்பை தாண்டி எதுவும் இல்லை. இனியும் அப்படி எதுவும் இருக்கக் கூடாது என தனது தலையில் எழில் கையை தூக்கி வைத்து சத்தியம் கேட்கிறார். எழில் என்ன செய்வது என திணறிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்குள் வேற ஏதாவது இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று ஆக்ரோஷமாக பேசுகிறார். பாக்யா சமாதானம் செய்தாலும் எடுபடாமல் இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+