மார்டனாக மாறிய பாக்கியா..கட்சி மாறி கட்டி பிடித்த கோபி.. இனி ராதிகா முடிவு என்ன?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் மாடர்னாக இருக்கும் பாக்கியாவை கட்டிப்பிடித்தபடி சிரித்த முகமாக கோபி இருக்கிறார்.
அதோடு பாக்யாவை புகழ்ந்தபடி கோபி கேப்ஷன் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அப்போ இனி ராதிகா நிலைமை என்ன? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அதனாலயே விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தை இந்த சீரியல் பிடித்துக் கொண்டிருக்கிறது. கணவன் தன்னை வேண்டாம் என்று பிரிந்து சென்ற போதிலும் பாக்கியா தைரியமாக குடும்பத்தை பார்த்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையிலும் முன்னேறி வருவதை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாக்கியா வீட்டிற்கு கோபி மீண்டும் வந்திருக்கும் நிலையில் கோபியை தொடர்ந்து ராதிகாவும் வீட்டிற்க்கே வந்து விட, ராதிகாவிற்கு ஈஸ்வரிக்கும் தினமும் சண்டை நடந்து கொண்டே . மாமியார் தன்னை திட்டி கொண்டு இருப்பதால் அந்த கோபத்தை எல்லாம் பாக்யா மீது ராதிகா காட்டிக்கொண்டு இருக்கிறார்.
ராதிகா கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பாக்கியா பதிலடி கொடுத்து ஒவ்வொரு முறையும் அவமானப் படுத்திக் கொண்டிருந்தாலும், இப்போது உச்சகட்ட சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ராதிகாவை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு மாமியார் துரத்த ராதிகாவின் அம்மா போலீஸோடு வந்து ஈஸ்வரியை லெப்ட் ரைட் வாங்குகிறார்.
விவாகரத்து முடிந்த உங்கள் பையன் ராதிகாவை முறைப்படி தான் திருமணம் செய்திருக்காரு. அதனால ராதிகா இந்த வீட்டிலதான் இருப்பாங்க என்று மீண்டும் போலீஸ்காரர்கள் சப்போர்ட்டோடு ராதிகா வீட்டிற்குள் வந்திருக்கும் நிலையில் இனி என்னவெல்லாம் பிரச்சனை செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது கோபி வெளியிட்ட புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

பாக்கியா அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறிக் கொண்ட இருப்பதை பார்த்து கோபி வியந்து போய் இருக்கும் நிலையில் இப்போ மாடர்ன் உடையில் இருக்கும் பாக்யாவை கட்டிப்பிடித்தபடி கோபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இது சீரியலில் எப்போது வரும் என்று ஆர்வத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ராதிகா பார்த்தா உங்க நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா கோபி? என்று பயம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதோடு இது இந்த சீரியலுக்கான புகைப்படமா? அல்லது ஏதேனும் விளம்பர சூட்டிங் புகைப்படமா? என்றும் ரசிகர்கள் குழப்பத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கோபி இந்த புகைப்படத்திற்கு," அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்.. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்.. மலரே மலரே ஆராதனை செய்கிறேன்.. அழகே மலரே, அழகே மலரே என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு ரசிகர் அப்போ ஏன் ராதிகாவை தேடி போனீங்க சார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications