அமிர்தாவை மருமகள் ஆக்கியது இதற்காக தானா? பாக்கியா கூறிய உண்மை.. சவாலில் ஜெயிச்சிருவாங்க போல

ஈஸ்வரி கேட்டரிங் பாக்யா கூட சமைக்க புதிய வேலையாளாக சேர்ந்திருக்கேன் என்று அமிர்தா கூறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா பாக்கியா உடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் என்னை பையனுக்கு புடிச்சிருக்குன்னு சொல்லி கல்யாணம் பண்ணி கூட்டி வந்தது கேட்டரிங்கில் வேலை பார்ப்பதற்காக தான் என்று ரித்திகா கூறி இருக்கிறார்.

பாக்கியாவோடு அமிர்தா வேலை செய்வதை பார்த்த ரசிகர்கள் அப்போ பாக்யா கோபியோடு போட்டிருக்கும் சவாலில் ஜெயித்து விடுவார் போல என்று பாராட்டி வருகிறார்கள்.

சவால் விட்ட எழில்

சவால் விட்ட எழில்

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு போய் விட்டதால் எழில், வீட்டிற்கு பாக்யாவின் பெயரை மாற்றிவிட்டார். இதனால் கோபி கோபத்தில் என்னுடைய வீட்டில் என் பெயர்தான் இருக்கிறது அதில் எப்படி பாக்யாவின் பெயரை சுவற்றில் மாட்ட முடியும். நான் இனி இந்த வீட்டை விற்கப் போகிறேன் என்று பிரச்சனை செய்ய, நான் இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று எழில் சவால் விட்டிருந்தார். அதுவும் ஒரு மாதத்திற்குள் இந்த வீட்டிற்கான மொத்த தொகையையும் தான் தந்து விடுவேன் என்று எழில் கூறி இருந்தார்.

கல்யாணம் ஏற்பாடு

கல்யாணம் ஏற்பாடு

எழில் கோபியிடம் கூறியபடி அவரால் பணம் கொடுக்க முடியாமல் ஆனது. எழிலை ஒருதலையாக காதலித்து வந்த வர்ஷினியின் அப்பாவின் சூழ்ச்சியால் எழில் தன்னுடைய கதையை விற்க முடியாமல் ஆன நிலையில், வேறு வழியில்லாமல் எழில் அமிர்தாவை காதலித்து வந்தாலும் அதை விட்டுவிட்டு வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வீட்டில் சம்மதித்து விட்டார். வீட்டில் ஈஸ்வரி தொடர்ந்து எழிலிடம் வர்ஷினியை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இருந்த நிலையில் வேறு வழி இல்லாமல் பாக்கியாவிடமும் எழில் வர்ஷினியை திருமணம் செய்வதற்கு சம்மதம் என்று கூறியிருந்தார்.

திருமணத்தை நடத்திய பாக்யா

திருமணத்தை நடத்திய பாக்யா

ஆரம்பத்தில் இருந்தே எழில் அமிர்தாவை காதலித்து வரும் செய்தி பாக்யாவுக்கு தெரிந்தாலும் கடைசி நேரத்தில் பாக்யா எழில் உண்மையில் மனசாரத்தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறாரா? என்று குழப்பத்தோடு இருந்த நிலையில் எழில் இப்போதும் அமிர்தாவை காதலித்து வரும் செய்தி தெரிந்ததும் உடனே அமிர்தாவை கூட்டிக்கொண்டு வந்து திருமணத்தை நிறுத்தி, அனைவருடைய எதிர்பார்ப்பையும் மீறி அமிர்தா மற்றும் எழில் திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார்.

பாக்கியாவின் சவால்

பாக்கியாவின் சவால்

இந்த நிலையில் மீண்டும் கோபி வந்து நான் கொடுத்திருந்த கெடு இன்றோடு முடிவடைந்து விட்டது இனி பணத்தை தர என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்க, அதற்கு ஏற்கனவே ராமமூர்த்தி தன்னுடைய சொத்து முழுவதையும் உன் பேருக்கு எழுதி தரேன் என்று சொன்னதால் கிராமத்தில் இருக்கும் சொத்து என்னுடைய இடத்திற்கு ஈடாகாது அதனால் இன்னும் 20 லட்சம் எனக்கு வேண்டும் என்று சொல்ல, அதை ஆறு மதத்திற்குள் தான் தந்து விடுகிறேன் என்று பாக்யாவும் கூறி இருக்கிறார்.

சவாலில் ஜெயிச்சு விடுவாங்க போல

சவாலில் ஜெயிச்சு விடுவாங்க போல

இந்த நிலையில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரேன்னு சொல்லி புதுசா ஈஸ்வரி கேட்டரிங்கிற்க்கு என்னை வேலைக்கு ஆள் எடுத்து இருக்காங்க என்று அமிர்தா குற்றம் சாட்ட, அதற்கு பாக்கியா ஆமா எனக்கு ஆள் வேணும்ல அதனால்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல, பாத்தீங்களா பையனுக்கு பிடிச்சிருக்கு பையனுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லி உங்களுக்கு சமைக்க ஆள் வேணும்னு தானே நீங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று சொல்ல, அதற்கு பாக்யா நீ ஏன் அப்பா அழுத என்று கேட்க? நான் போறேன்னு தான போனேன் என்று சொல்ல, உனக்கு வாழ்க்கையும் கொடுத்து வேலையும் கொடுத்திருக்கேன் என்று பாக்கியா கிண்டல் செய்கிறார். இந்த வீடியோ சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஜாலியான வீடியோவாக இருந்தாலும், இதை பார்த்த ரசிகர்கள் அப்போ கோபி இடம் போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக பாக்யா தீயாக வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார். அதனால் எப்படியும் சவாலில் ஜெயித்து விடுவார் என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+