குழந்தையோடு அழகான போட்டோ சூட் எடுத்த ரித்திகா.. வியக்க வைக்கும் அழகு.. குவியுது வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமடைந்த ரித்திகா தன்னுடைய குழந்தை மற்றும் கணவரோடு அழகான போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். இவர்களுடைய குடும்ப புகைப்படமும் தற்போது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
போட்டோ சூட் மோகம் தற்போது சினிமா நடிகைகளை மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் ஆக்கிரமித்து இருக்கிறது. சின்ன சின்ன நினைவுகளையும் மலரும் நினைவுகளாக்க பலர் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிலர் தங்களை பிரபலமாகி கொள்வதற்காகவும் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் எடுக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது தான் நம்மையும் மீறி ஒரு வியப்பு மற்றும் வாவ் சூப்பர் என்று சொல்ல வைக்கும். அது மாதிரி ஒரு சில புகைப்படங்களை தான் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் அமிர்தாவாக பிரபலமடைந்த நடிகை ரித்திகா வெளியிட்டு இருக்கிறார்.
ரித்திகா விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளில் ஹெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டார். பிறகு ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு தங்கச்சி கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் அறிமுகமானார்.

பார்த்ததும் ஐயோ பாவம் என்று சொல்வது போல இவருடைய முகம் எப்போதுமே சாந்தமாக இருக்கும். அதற்கு மேலும் வலு கொடுக்கும் விதமாக பாக்கியலட்சுமி சீரியலிலும் இவருக்கு அமைதியான ஒரு கேரக்டர் கிடைத்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த சீரியலில் இவருடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது.
அந்த நேரத்தில்தான் ரித்திகாவிற்கு விஜய் டிவியில் பணியாற்றும் வினு என்பவரோடு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஆனால் திடீர் என்று அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அதற்குப் பிறகு அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் அன்ஷிதா நடித்து வருகிறார். இந்த நிலையில் சீரியலிருந்து விலகிய ரித்திகா சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவரை வைத்து தான் அந்த திரைப்படத்தில் கதை நகர்ந்து கொண்டிருக்கும்.
இந்த நிலையில் கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய கணவரோடு க்யூட்டான போட்டோ சூட் எடுத்து இருந்தார். அப்போது கூட இவருடைய புகைப்படங்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வந்தது. சமீபத்தில் ஃபோட்டோ சூட் புகைப்படங்கள் எடுக்கும் பலர் வயிறு தெரிகிற மாதிரியும், அரைகுறை ஆடையோடும் புகைப்படங்கள் எடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் புடவையில் இவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதற்கு பிறகு தற்போது குழந்தை பிறந்ததும் தன்னுடைய குழந்தை மற்றும் கணவரோடு ரித்திகா போட்டோ சூட் எடுத்து இருக்கிறார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் அதிகமான பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் ரித்திகா அந்த புகைப்பட போட்டோ சூட்டில் தன்னுடைய குழந்தையின் முகத்தை மட்டும் காட்டவில்லை. இந்த அழகான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications