'பாட்ஷா'வில் ரஜினி தம்பியாக நடித்த நடிகர் சசிகுமார்! முகம் சிதைந்து! வாழ்வில் இத்தனை சோகங்களா?
சென்னை: "பாட்ஷா" படத்தில் ரஜினிகாந்தின் போலீஸ்கார தம்பியாக சிவா என்ற ரோலில் நடித்த கன்னட நடிகர் சசிகுமாரின் வாழ்வில் இத்தனை சோகங்களா என கவலைக் கொள்ளும் அளவுக்கு அவரது முகமே, ஒரு விபத்தில் சிதைந்து போனதாம்! எத்தனையோ படங்களில் நடித்தாலும் "பாட்ஷா" மூலம் மிகவும் பிரபலமானவர் சசிகுமார். அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு தனது பதிவில் கூறியிருப்பதாவது: "பாட்சா" படத்தில் ரஜினி தான் ஹீரோ. அது நமக்கு தெரியும். ஆனா அதுல நடிச்ச எல்லோருமே ஹீரோ தான்னு தெரியுமா? விஜயகுமார், ரகுவரன், ஆனந்தராஜ், தேவன், சரண்ராஜ் எல்லோருமே ஹீரோக்கள்.

இவ்வளவு ஏன் இந்த ஜனகராஜ் கூட 'கல்யாண காலம்' படத்தில் ஹீரோ தான். இவங்க கூட வேற ஹீரோவும் இருந்தாரு. "சொல்லுங்க... சொல்லுங்க...பாம்பேல என்ன பண்ணிட்டிருந்தீங்க?..." பாட்சா மூலமா தென்னிந்தியா முழுக்க அறியப்பட்ட ரஜினி தம்பியா நடிச்ச கன்னட ஹீரோ சசிகுமார்.
அவர் கதை நம்மை கலங்க வைக்கும்... சசிகுமார், கன்னட நடிகர் ராஜ்குமார் மகனோடு 89ல் அறிமுகமானாலும் கன்னட பருவராகம் ரவிச்சந்திரனோட 'யுத்தகாண்டா' படத்தால் அறியப்பட்டார். யுத்தகாண்டா நம்ம டி.ஆரோட 'ஒரு தாயின் சபதம்' படத்தோட கன்னட ரீமேக். அதில் பப்லு நடிச்ச வில்லன் ரோலில் சசிகுமார் நடித்தார்.
தொடர்ந்து ஹிந்தி Chaalbaaz கன்னட ரீமேக்கில் அம்பரீஷோடு நடிக்க, பாப்புலரானார் சசி. தொடர்ந்து மாலாஸ்ரீயோடு நாயகனாக நடிக்க, கதாநாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து தாரா, சுதாராணி, சௌந்தர்யாவோடு நடித்து பல ஹிட்கள் கொடுத்தார். 1991ல் தமிழில் எஸ்.வி.சேகர் நடித்த 'வீட்ல எலி வெளியில புலி' படத்தில் ஒரு பாடலுக்கு ப்ரேக் டான்ஸ் ஆடிவிட்டு செல்வார்.
1995ல் பாட்சா என்கிற மெகா ஹிட். அதில் ரஜினியின் தம்பியாக நடித்து தென்னிந்தியா முழுக்க பிரபலமானார். 90களின் மத்தியில் சிவானந்தா சர்க்கிள் பகுதியில் நடந்த கார் விபத்தில் அவர் முகத்தில் பலமாக அடிபட்டது. அதோடு அவர் முகம் பாழாகி போனது. பலகட்ட சர்ஜரிகளுக்கு பிறகு அவர் புதிய முகத்தை அவரே காண பயப்பட்டார்.
வெளியே வரவே பயந்து வீட்டினுள்ளேயே முடங்கினார். நண்பர்கள் யாருமே அவரை பார்க்க வரவில்லை. கடைசியாக ஒரு தயாரிப்பாளர் அவரை நடிக்க வைத்தார். ஆனால் பூஜை அன்று ஷூட்டிங்கிலேயே அவரது புதிய முகத்தில் எக்ஸ்பிரஷன்கள் வரவில்லை.
பலரும் இயக்குனரை சமாதானப்படுத்த அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படங்களில் சிறிய வாய்ப்புகளே வந்தன. உடனே திரையுலகில் சரிவராது என அரசியலுக்கு பார்வையை திருப்பினார் சசி. 2004-ல் ஜனதா தள கட்சியில் சேர்ந்தார்.
2006-ல் காங்கிரசில் சேர்ந்து சித்ரதுர்கா தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். இப்போதும் அரசியலில் முழுநேரமும் நின்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மனைவி சரஸ்வதி. இரண்டு குழந்தைகள். மகன் அக்ஷித் ஹீரோவாக திரையுலகில் நுழைந்திருக்கிறார்.
இவரது முதல் படம் 'சீதாயணா' ஆகஸ்ட் 26ல் ரிலீசானது.
பாட்சா படத்தில் ரஜினியை 'பாம்பேல என்ன பண்ணிட்டிருந்தீங்க?' என கேட்டது போல இவர் வாழ்வும் பாட்சா படம் மாதிரியே விபத்துக்கு முன்பு பாட்சாவாகவும், விபத்துக்குப்பின் மாணிக்கமாகவும் இரண்டாக மாறியது துரதிர்ஷ்டம். தெய்வத்தின் விளையாட்டுக்கள்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications