பாட்ஷா படத்தில் ரகுவரன் ஆட்களை ரஜினி துரத்தும் காட்சிகள் யார் வீட்டு வாசலில் எடுக்கப்பட்டது தெரியுமா
சென்னை: பாட்ஷா படத்தில் மும்பையில் அன்வர் பாட்ஷாவை (சரண்ராஜ்), மார்க் ஆண்டனி (ரகுவரன்) ஆட்கள் துரத்திக் கொண்டு வருவார்கள், அந்த சீன் யார் வீட்டில் எடுக்கப்பட்டது என்பது தெரியுமா? இதுகுறித்து பல்வேறு தகவல்களை அதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு வெளியான படம்தான் பாட்ஷா. இந்த படத்தை அப்போதைய அதிமுக அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன்தான் தயாரித்திருந்தார். இதில் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா, ஜனகரராஜ், தேவன், சசிகுமார், விஜயகுமார், ஆனந்தராஜ், கிட்டி, சத்தியபிரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதை ஆட்டோ ஓட்டுநரை சுற்றி எடுக்கப்பட்டது.

மும்பையில் தாதாவாக அதிலும் ஏழைகளை வதைக்கும் ஒரு தாதாவிடம் இருந்து மக்களை காக்கும் தாதாவாக மாறிய ஒருவர், தனது குடும்பத்தினருடன் அந்த இருண்ட வாழ்க்கையை மறைத்துவிட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து ஆட்டோ டிரைவராக வாழ்வது, அங்கு அவர் சந்திக்கும் மற்ற பிரச்சினைகள் குறித்தும் இந்த படம் பேசுகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த், சரண்ராஜ், ரகுவரன், விஜயகுமார் என யாருக்கு என்னென்ன கேரக்டர் கொடுக்கப்பட்டதோ அதை கனகச்சிதமாக செய்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, டூரிங் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலுக்கு சாய் வித் சித்ராவில் சித்ரா லட்சுமணனிடம் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அதில் மும்பையில் ரகுவரன் தனது அடியாட்களை வைத்துக் கொண்டு ஒரு சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். இவரை சரண்ராஜ் எதிர்க்கிறார். மக்களை காக்க முயற்சிக்கிறார். அவருக்கு துணையாக ரஜினிகாந்தும் வருகிறார். இருவரும் சேர்ந்து ரகுவரனின் பல்வேறு முயற்சிகளை முறியடிக்கிறார்கள். இதனால் சரண்ராஜை கொல்ல நினைக்கிறார் ரகுவரன்.
இதற்காக ரஜினி இல்லாத நேரத்தில் சரண்ராஜை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். அந்த ஆட்கள், சரண்ராஜை துரத்துவார்கள். இந்த விஷயத்தை தனது நண்பன் ரஜினியிடம் சரண்ராஜ் தெரிவித்துவிட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடுவார். அப்போது ரஜினிகாந்த் வந்ததும், சரண்ராஜை ரகுவரன் ஆட்கள் கொன்றுவிடுவார்கள்.
இதனால் ஆத்திரத்தில் அவர்களை ரஜினிகாந்த் துரத்துவார். அந்த காட்சிகள் எல்லாம் மும்பை பாந்த்ராவில் எடுக்கப்பட்டன. அதாவது ஷாரூக் கான் வீட்டு வாசலில் எடுக்கப்பட்டது. அந்த வீட்டில்தான் ராஜேஷ் கண்ணாவும் இருந்தனர். மும்பையில் இவர்கள் இருக்கும் பகுதிகள் எத்தனை முக்கியத்துவமானது என்பது மும்பையில் வசிக்கும் மக்களுக்கு நன்றாக தெரியும்.
அப்படிப்பட்ட இடத்தில் இப்போது ஷூட்டிங் எடுக்க நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்படி அந்த காட்சிகள் பிரமாதமாக அமைந்திருந்தது என பல்வேறு விஷயங்களையும் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்திருந்தார்.












Click it and Unblock the Notifications