அக்கா பொண்ணு மனசுல கண்ணன் மாமா... அப்ப மாமா மனசுல யாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்மணி தொடர் படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது, திரைப்படங்களுக்கு நிகரான பரபரப்புகளுடன்.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவான திருமதி செல்வம்தான் நடிகர் சஞ்ஜீவ்க்கு சின்னத்திரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கொடுத்த சீரியல். சும்மா 5 வருஷம் தன்னோட திறமையை காட்டு காட்டுன்னு காட்டிட்டார்.

அதுக்குப் பிறகு கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி அதிலும் வெற்றி... அதுக்குப் பிறகுதான் ஆளையே காணோம். இப்போ மறுபடியும் சன் டிவியின் கண்மணி சீரியல் மூலம் சின்னத் திரையில் ரீ என்ட்ரி

பாடாத குறைதான்

பாடாத குறைதான்

சீரியலில் இவர் கண்ணனா நடிக்கிறார். அக்கா பெண்ணுக்காக எதையும் செய்யக்கூடிய மாமா. தான் ஆசை வச்சு இருக்கும் சவுந்தர்யாவை சவுண்டு சவுன்டுன்னு சுத்தி வந்த இவர் நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு கார்த்திக் போல பாட்டு பாடாத குறைதான். கார்த்திக் நினைவுக்கு வரார்.

சுளுக்கு சுந்தரி

சுளுக்கு சுந்தரி

கதையில எதுக்கு வந்தாங்கன்னு ஓரளவு புரிஞ்சாலும், சின்னவரே சின்னவரேன்னு மரியாதையா கூப்பிடற இவருக்கு சின்னவர் மேல காதல் இருக்குமான்னு நினைக்கற அளவுக்கு காட்சிகள். கண்ணனும் கொஞ்சம் நெருக்கமாத்தான் பழகறார்.

சுளுக்கு சுந்தரி

சுளுக்கு சுந்தரி

கதையில எதுக்கு வந்தாங்கன்னு ஓரளவு புரிஞ்சாலும், சின்னவரே சின்னவரேன்னு மரியாதையா கூப்பிடற இவருக்கு சின்னவர் மேல காதல் இருக்குமான்னு நினைக்கற அளவுக்கு காட்சிகள். கண்ணனும் கொஞ்சம் நெருக்கமாத்தான் பழகறார்.

முத்து செல்வி

முத்து செல்வி

சவுந்தர்யா, முத்து செல்வி இருவரும் இரண்டு துருவங்களா இருந்தாலும். சவுந்தர்யா தனி அழகு, நகைகள் அணியாத வெறும் கழுத்து, பிளெயின் புடவை, பூக்கள் போட்ட ரவிக்கை என்று அசத்தல் அழகு. நடிப்பில் அள்ளுகிறார். முத்து செல்வி வழக்கமான கிராமத்து பொண்ணு... அதற்கேற்ப நடிப்பு என்று மனதில் இடம் பிடிக்கிறார்.

பூர்ணிமா பாக்யராஜ்

பூர்ணிமா பாக்யராஜ்

சஞ்சீவ் இருக்க ஸ்டார் வேல்யூ எதுக்குன்னு நினைச்சாலும், சின்னத்திரையில் பூர்ணிமாவைப் பார்க்க இதமாதான இருக்கு.
சின்னவர் மனசுல சுளுக்கு சுந்தரியா, சவுண்டா? சீரியல் முடிஞ்சவுடனே ஒவ்வொரு சீனையும் சுட்டிக் காட்டி, இப்படிப் பார்த்தா சுளுக்கு சுந்தரிதானே சின்னவருக்கு சரின்னும், பாருங்க ஆகாஷ் வேணாம்னு சொல்லுது சவுந்தர்யா, அப்போ அக்கா பொண்ணை கண்ணன் அம்போன்னு விட்டுடுவாரான்னும் கூட்டுக குடும்பத்துல பேசிக்கறாங்களாம்.

அதை விட்டீங்களா?

அதை விட்டீங்களா?

திருமதி செல்வம் மாதிரி ஒரு வாய்ப்புக்கு சஞ்சீவ் காத்திருக்க, காத்திருந்த கொக்குக்கு விலாங்கு மீனாய் மாட்டியது கண்மணி சீரியல். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்த சீரியலை சட்டென்று கை கழுவி விட்டாராம் சஞ்சீவ். அது சரி சுளுக்கு சுந்தரி, சவுண்டு என சரி ஜோடிகள் அமையும்போது அதைத்தானே மனம் நாடும்.. என்ன சின்னவரே சரிதானே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+