அபத்தத்தின் உச்சம்.. பாக்கியலட்சுமி சீரியலில் மோசமான முன் உதாரணம்.. இதை தவிர்த்து இருக்கலாமே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டு பொண்டாட்டி, இரண்டு கணவர் என்கிற கான்செப்ட் படியே கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது மோசமான முன் உதாரணமாக இருக்கிறது என்று பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இறந்து போனதாக சீரியலில் காட்டப்பட்டவர் மீண்டும் உயிரோடு வருவது போன்றும் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கின்றனர். இது குறித்து அதிகமானோர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த சீரியலில் சில மாற்றங்கள் செய்திருந்தால் இன்னும் இந்த சீரியல் சிறப்பாக ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும். அதே நேரத்தில் தற்போது இந்த சீரியலில் நடக்கும் சொதப்பல்கள் குறித்து பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பி யில் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் முதல் இடத்தை பிடித்து வந்தது. சமீப காலமாக இந்த சீரியலில் கதையின் போக்கு ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் டி ஆர் பியில் இப்போது இரண்டாவது இடத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் இந்த சீரியலில் டுவிஸ்ட் என்கிற பெயரில் அடுத்தடுத்து மோசமான முன் உதாரணங்களை காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப தலைவியாக இருக்கும் பாக்யாவை அவருடைய கணவரும் பிள்ளைகளும் மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். அவருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் எல்லோரும் இருப்பார்கள். அதைத் தொடர்ந்து தன்னுடைய திறமையால் அடுத்தடுத்து பாக்கியா வெற்றி அடைய தொடங்கியதும் வீட்டில் இருப்பவர்கள் அவரை புரிந்து கொள்ள தொடங்கினர்.
அந்த நேரத்தில் தான் பாக்கியா புதியதாக கேட்டரிங் பிசினஸ் தொடங்கினார். அதுபோல வீட்டிலேயே மசாலா பொருட்கள் அரைத்து விற்று கொண்டிருந்தார். இப்படி அடுத்தடுத்து வெற்றி பெற்றிருக்கும் போது சீரியல் ரசிகர்களுக்கும் இந்த சீரியல் உத்வேகத்தை கொடுத்து வந்தது. அந்த நேரத்தில் பாக்கியா அதை விட்டுவிட்டு கோபி தன் கல்லூரி பருவத்தில் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தொடங்கிய இரண்டு பொண்டாட்டி கதை இப்போது வேகமாக வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் வந்து கொண்டிருக்கிறது. அதாவது கோபியை தொடர்ந்து இப்போது செழியனும் ஸ்கூல் படிக்கும்போது இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெனி இருக்கும்போதே மாலினியோடு நெருங்கி பழகி வருகிறார். இப்போது மாலினி என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஒரு பெண் எழிலை காதலித்து இருப்பார். அதற்கு பிறகு மணமேடை வரைக்கும் வந்து அமிர்தாவை எழில் திருமணம் செய்திருப்பார். அமிர்தாவுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் முடிந்து அவருடைய கணவர் இறந்து விட்டதாக முதலில் கதையை கொண்டு போய்க் கொண்டிருந்தனர். அந்த நிலையில் தான் ஒரு குழந்தையோடு அமிர்தா எழிலை திருமணம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இப்போது இறந்து போன கணேசன், அதாவது அமிர்தாவின் முதல் கணவர் மீண்டும் உயிரோடு வந்து அமிர்தாவிற்கு கல்யாணம் முடிந்தது தெரிந்தும் நான் அவரோடு தான் வாழ்வேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.அதே நேரத்தில் பாக்யாவும், பழனிச்சாமியும் நெருங்கி பழகி வரும் நிலையில் பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பழனிச்சாமியின் அம்மா ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக இந்த சீரியலில் அடுத்தடுத்து இரண்டு பொண்டாட்டி இரண்டு கணவர் கதை தான் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இறந்து போன கணேசன் மீண்டும் வந்ததை தான் யாராலும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.
காரணம் மருத்துவமனையில் கணேசன் தன்னுடைய அம்மா, அப்பா, அமிர்தா முன்புதான் மரணம் அடைந்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு போஸ்ட்மார்ட்டமும் நடந்தது. அவருக்கு இறுதி சடங்குகளும் செய்து இருந்தனர். ஆனால் இப்போது பல மாதங்கள் கழித்து அவர் உயிரோடு வருகிறார் என்று சொல்கிறார்களே இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
இந்த மாதிரி கதையை கொண்டு போய்க் கொண்டிருந்தால் ஒருவேளை நிஜத்திலும் கணவரை இழந்த பெண்களை இந்த மாதிரி கதை எவ்வளவு கஷ்டப்படுத்தும் என்பது சீரியல் தரப்பினருக்கு புரியவில்லையா? என்பதுதான் பலருடைய கேள்வி. ஆரம்பத்தில் இருந்தே கணேசன் கேரக்டர் மீண்டும் வந்ததிலிருந்து ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் இப்போது வெளியான ப்ரோமோவில் அமிர்தாவிற்கு எழிலோடு திருமணம் முடிந்தது தெரிந்தும் அமிர்தா என்னுடைய மனைவி நிலா என்னுடைய குழந்தை என்று கணேசன் கூறிக் கொண்டிருப்பது தான் அபத்தமாக இருக்கிறது. இரண்டு வருடமாக கணேசன் எங்கே போனார் என்ன ஆனார் என்பது பற்றி இன்னமும் சீரியலில் சொல்லப்படவே இல்லை. ஆனால் அவர் உயிரோடு வந்துவிட்டார் என்பதை மட்டும் கதையில் நகர்த்திக் கொண்டு வருவதை பார்க்கும் போது அவர் ஆவி போல தான் எல்லோருக்கும் தெரிகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications