கேவலங்கள், சமூக அவலங்கள்.. ப்ளூ பிலிம், சரக்கு, கெட்ட வார்த்தை.. பேட் கேர்ள் படத்தை தாக்கிய பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல தரமான படம் வேண்டுமானால், நல்ல சிந்தனை வேணும்.. அப்படி சிந்திப்பவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது குறைவாக உள்ளனர்.. நல்ல படம் எடுக்கக்கூடியவர்களாலும், மேலே வர முடிவதில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா வேதனையுடன் கூறியிருக்கிறார்.

TN Media Digital யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தந்துள்ள பேட்டியில், "எங்கே போய் இதெல்லாம் முடியும் என்று தெரியவில்லை.. பெண்ணுக்கு ஆடை, கற்பு என்பதெல்லாம் "சிறை" என்று நினைத்து கொள்கிறார்கள். அது உண்மையிலேயே பாதுகாப்பு.. தலைமுடியும் இயற்கையிலேயே பெண்ணுக்கு தரப்பட்ட பாதுகாப்புதான்..

bad girl brahmin sanga

தாய்மை: தாய்மை, கற்பு என்பது பாதுகாப்பு.. பெண் புனிதமானது என்று சொல்லிவிட்டு, அவர்களை தூர ஒதுக்கி வைப்பதாக நினைக்கிறார்கள்.. அப்படி கிடையாது, பெண்கள் உயர்வானவர்கள் என்பதே அதன் அர்த்தம். சிவன் கோயிலுக்கு வரும் கூட்டத்தையும், அம்மன் கோயிலுக்கு வரும் கூட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும். இதில் பக்தர்கள் அதிகமாக செல்வது அம்மன் கோயிலுக்குதான்.

கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு, அவனுக்கும் ஒழுக்கம் உள்ளது என்பதை சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு கற்பு தேவையில்லை என்று சொல்ல வேண்டாம்.. பேட் கேர்ள் பட டிரைலரிலேயே, ப்ளூ பிலிம் பார்ப்பியா? என்று கேட்பது, மது குடிப்பது போல் காட்டுவது, தன் அம்மாவிடம் பேசக்கூடிய வசனங்கள் இவைகளை ஜீரணிக்க முடியவில்லை. முற்போக்கு என்பதே புறம்போக்குத்தனமாகிவிட்டது..

கேவலங்கள்: பெண்களின் எத்தனையோ வகையான முன்னேற்றத்தை காட்டலாமே? சமூக அவலங்களை காட்டுவதற்கு பதிலாக, சமூக கேவலங்களை காட்டறாங்க.. தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர்கள் இருந்தும், இதுபோன்றவர்களால் அவர்களால் மேலே வர முடியவில்லை.. தமிழ் சினிமாவில் மணிரத்னம் வருகைக்கு முன், மணிரத்னம் வருகைக்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். அந்தவகையில், மணிரத்னம் வருகைக்கு முன்பிருந்த படங்கள் எல்லாமே அருமையாக இருந்தன.

போதைக்கு எதிரான படத்தை, தற்போதுள்ளவர்கள் எடுத்தாலும், அது எடுக்கும் விதம் உள்ளது.. ஆனால், இவர்கள் வேறு மாதிரியாக எடுக்கிறார்கள்.. "அறம்" என்ற படத்தை எடுத்தவிதம் இவர்களுக்கு தெரியவில்லையா? சாதி வைத்தே ஏன் எடுக்கறீங்க? வேற வேற புதுசாக சிந்திக்க வேண்டும்..

கெட்ட வார்த்தைகள்: மிஷ்கின் சமீபத்தில் மேடையில் பேசிய அதே கெட்ட வார்த்தையைதான், விடுதலை 2 படத்திலும், சேத்தன் போலீஸ்காரரரை திட்டுவது போல வைத்திருக்கிறார்கள். எனவே, மேடையில் பேசினாலும் சரி, சினிமாவில் பேசினாலும் சரி, இதுபோன்ற கெட்ட வார்த்தைகள் தவறுதான்., இதை அனுமதிக்கும் சென்சார் போர்டுதான் குற்றவாளி. நல்ல தரமான படம் வேண்டுமானால், நல்ல சிந்தனை வேணும்.. அப்படி சிந்திப்பவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது குறைவு' என்றெல்லாம் காட்டமாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+