வெற்றிமாறனின் கழுத்தை நெறித்த கடன்! மோசமான படம் பேட் கேர்ள்? சரியான நேரத்தில் சரியான முடிவு: பிரபலம்
சென்னை: ஒரு படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை முடிவு செய்யும் அமைப்பு தணிக்கை குழு. அந்தக் குழு 'பேட் கேர்ள்' பார்த்துவிட்டு U/A 16+ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். மனுஷி படம் பல்வேறு தணிக்கைக்கு சென்று நீதிமன்றம் வரை சென்று வந்திருக்கிறது. என்னை மாதிரி ஆட்களுக்கு தயாரிப்பாளராக இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஆகையால் என்ன முடிவு செய்திருக்கிறேன் என்றால் 'பேட் கேர்ள்' படம் தான் எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் கடைசிப் படமாக இருக்கும். அதற்குப் பிறகு அந்த கடையை சாத்துகிறோம்" என்று அறிவித்துள்ளார் வெற்றிமாறன். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "இனி படங்களை தயாரிக்க போவதில்லை என்று வெற்றிமாறன் சொல்லி உள்ளார்.. இயக்குநராக செயல்பட்டால் ஜாலியாக படம் எடுக்கலாம், ஆனால், தயாரிப்பாளராகி விட்டால் நெருக்கடிகள் அதிகம் என்பதைத்தான், தன்னுடைய 12 வருட தயாரிப்பாளரான வலியை பதிவு செய்துள்ளார்.

வெற்றிமாறனை பொறுத்தவரை சிறந்த இயக்குநர்.. சிறந்த படைப்பாளி.. சமூக பொறுப்புடன் படங்களை தரக்கூடியவர்.. அவரது படைப்புகள் அனைத்துமே வெற்றிப்படங்கள்தான்.. அதேசமயம், அவர் தயாரிப்பாளராகவும் மாறினார்.. உதயம் NH4, பொறியாளன், சார், அண்ணனுக்கு ஜே, காக்கா முட்டை, போன்ற படங்களை செய்தார்..
Bad Girl தந்த சிக்கல்
இவை அனைத்துமே லோ பட்ஜெட் படங்களாக இருந்தாலும், இதனால் வெற்றிமாறனுக்கு லாபம் பெரிதாக கிடைக்கவில்லை.. அவர் தயாரித்த படங்களிலேயே காக்கா முட்டை படம் மட்டும்தான், அனைவரும் ரசித்து நன்றாக ஓடிய படம்.. அதற்கு பிறகு அவர் தயாரித்த படங்கள் அனைத்துமே பெயர் தெரியாத படங்களாகவே அமைந்தன.
குறைந்த அளவு முதலீடு செய்தாலும், தொடர்ந்து நஷ்டம் வரும்போது, பெரிய சிக்கலுக்கு ஆளாகிவிடுவார்கள்.. அப்படித்தான் வெற்றிமாறன் கடன் சுமைக்குள் உள்ளாகியிருக்கணும்.. இதற்கு பிறகு bad girl படத்தை தயாரிக்கிறார் வெற்றி மாறன்.. அதுவும் சர்ச்சையான படமாக உள்ளது..
UA16+ சான்றிதழ்
டிரைலர் வெளியானபோதே, சமுதாய சீர்கேடுகள் நிறைந்துள்ளதாக விமர்சனங்களை தந்திருந்தது.. இந்த படத்தை தடை செய்யணும் என்றும் சிலர் சொன்னார்கள்,.. ஆனால், அபபோதே வெற்றிமாறன் ஒரு விளக்கத்தை தந்திருந்தார்.. இது முற்போக்கான படமே தவிர, தவறான கருத்தை பதிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்படத்துக்கு சென்சார் தர மறுக்கப்பட்டது.. உடனே ரிவைசிங் கமிட்டிக்கு போனார் வெற்றிமாறன்.. பிறகு நீதிமன்றம் சென்றார்.. இறுதியில் நிறைய "கட்"களுடன், UA16+ என்ற சான்றிதழ் தரப்பட்டுள்ளது..
இந்த படம் வெளியானால் சமுதாய சீர்கேடுகளுக்கு வித்திடலாம் என்று நினைத்துதான், சென்சாரில் பல இடங்களில் கத்தரி போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைசியில் எதிர்பார்த்ததுபோல அந்த படம் அமையாது. இப்படிப்பட்ட படத்தை வியாபாரம் செய்வது கடினமான ஒன்று.
மனுஷி படம் தந்த சோதனை
மற்றொருபக்கம் ஆண்டிரியாவை வைத்து, மனுஷி என்ற படத்தை தயாரிக்கிறார்.. அந்த படமும் சர்ச்சைக்குரியதாக மாறியது.. அந்த படத்துக்கும் சென்சார் தர மறுக்கப்படுகிறது.. உடனே ரிவைசிங் கமிட்டி சென்றார்.. ரிவைசிங் கமிட்டி என்றால் சென்சாரில் மேல்முறையீடு செய்வது..
இறுதியில் இந்த படத்துக்கு சென்சார் தரவேண்டும் என்று கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் செற்றிதமாறன்.. நீதிமன்றம்தான் கடைசி ஆயுதம்.. நீதிமன்றமும் அந்த படத்தை பார்த்துவிட்டு, 20 காட்சிகளில் கட் செய்துவிட்டு, அதற்கு பிறகு சென்சார் சர்ட்டிபிகேட் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டது.
அழுத்தத்தை தாங்க முடியல
மொத்தம் 20 இடங்களில் கட் செய்தால், அந்த படம் முழுமையான படமாக இருக்காது.. இப்படியான பல சிக்கல்களுக்கு ஆளாகிவிட்டார் வெற்றிமாறன். தயாரிப்பாளராக இவ்வளவு அழுத்தத்தையும் வெற்றி மாறனால் தாங்க முடியவில்லை என்பதே உண்மை.
ஒரு படைப்பாளனுக்கு எந்தவிதமான எல்லைக்கோடும், எந்தவிதமான இடர்பாடும் இல்லாமல் இருந்தால் மட்டுமே தன்னுடைய படைப்புத்திறனை வெளிப்படுத்த முடியும்.. அப்போதுதான் அந்த படைப்புக்கும் உயிர் தர முடியும். ஆனால், படைப்பாளி, ஒரு தயாரிப்பாளராக மாறும்போது, ஆயிரம் சிக்கல்கள் வந்துவிடும்.. இதனால் படைப்பாளி தன்னுடைய உண்மை முகத்தை இழக்க வேண்டியிருக்கும்.
எஸ்கேப் ஆன ஷங்கர்
யாராக இருந்தாலும் படம் தயாரிப்பதே இன்று பாய்சன் சாப்பிடுவதுபோலத்தான்.. இன்று திரைப்பட துறையின் நிலைமை அப்படி ஆகிவிட்டது.. லாபம் சம்பாதிப்பதைவிட, உயிருடன் வெளியே வருவதே பெரிய விஷயமாகிவிட்டது.
அந்தவகையில், இனிமேல் படம் தயாரிக்கக்கூடாது என்று சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து ஷங்கர் தப்பிவிட்டார்.. அதுபோல வெற்றிமாறனும் சரியான நேரத்தில், சரியான முடிவையே எடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications