இயற்கைக்கு மாறானது.. இதுல நடிகருக்கு என்ன பெருமை? சினிமாவில் கவனம் பெற இப்படியா செய்வது: பிரபலம்
சென்னை: பல டைரக்டர்கள், வெறுமனே கவனத்தை ஈர்க்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, இவங்களுக்கு நல்ல படம் எடுக்கணும்னு எண்ணம் இல்லை.. சரியான இயக்குனர் என்றால், தவறான விஷயத்தைதான் ஈர்க்கணும்னு என்று அவசியமில்லை" என மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா சொல்லி உள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு, பிரபல நடிகர் ராணா தந்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலானது.. அதில், "10 ஆண்டுகளுக்கும் மேலாக த்ரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், BBT சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, கடந்த 10 வருடங்களாகவே லிவிங் டூ கெதர், லிவிங் ரிலேஷன்ஷிப், பப், டேட்டிங் போன்ற வார்த்தைகளை கேள்விப்பட்டு வருகிறோம்.. இப்போது இந்த வார்த்தைகள் சகஜமாகிவிட்டது.
நடிகர் ராணா: இயற்கைக்கு மாறான விஷயத்தை, சமூகத்துக்கு ஒவ்வாத விஷயத்தை பொதுநியாயப்படுத்துறாங்க.. இப்போ ராணாவை யார் இமைத பற்றி கேட்டாங்க? திரிஷாவுடன் டேட்டிங் என்றுசொன்னதில் அவருக்கென்ன பெருமை? அசிங்கமான விஷயத்தை வெளியே சொல்லிட்டு, அதுல என்ன அசிங்கம் இருக்கு? என்றும் சிலர் கேட்கிறார்கள், பேட் கேர்ள் என்ற படத்தில், எந்தவொரு பெண்ணாலுமே அதிலுள்ள வசனங்களை பேச முடியாது. ஆனால், பேசும் மொழியின் மூலமாக ஒரு அடையாளத்தை, அதாவது பிராமணர் என்ற அடையாளத்தை அந்த பெண்ணுக்கு தருகிறீர்கள்.. இது எதுக்கு? இதுக்கு பேர்தான் புல்லுருவிகள் வேலைகள் என்பார்கள்.. முதல்ல பெண் சுதந்திரம் என்று, அப்பெண் பேசுவதெல்லாம் சுதந்திரமே கிடையாது. கட்டுப்பாடற்ற சுதந்திரம் காட்டுமிராண்டித்தனம்.
சமூக முன்னேற்றம்: ஆனால், பெண் சுதந்திரம் என்ற பெயரில், பெண் சமூகத்துக்கு ஒவ்வாத பல விஷயங்களை அதில் சொல்றாங்க. சமத்துவம் என்று பலரும் பேசும்போது, பெண்ணுக்கு கற்புள்ளதுபோல, ஆணுக்கும் ஒழுக்கம், கற்பு என்று பேசுங்களேன்.. குடிச்சிட்டு வந்து அடித்தால், பதிலுக்கு அடிக்கணும்னு சொல்லுங்களேன்.. அதைவிட்டுவிட்டு, அவன் குடித்தால், நானும் குடிப்பேன் என்பதன் பெயரா பெண் சுதந்திரம்? இது எப்படி சமூகத்தை முன்னேற்றும்?
பெண் சமூகத்துக்கே எதிரான கருத்துக்கள்தான், பேட் கேர்ள் டிரெயிலரில் பார்க்க முடிந்தது.. உங்க வீட்டு பெண்ணை இப்படி, கடைப்பிடிக்க அனுமதிப்பீங்களா? டைரக்டர் மோகன்ஜி இதை கரெக்டடா கேட்கிறார்..
மிஷ்கின்: கவனத்தை ஈர்க்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, இவங்களுக்கு நல்ல படம் எடுக்கணும்னு எண்ணம் இல்லை.. "நான் நிர்வாணமாக நிற்கவும் தயார்" என்று கொட்டுக்காளி படத்துக்காக மிஷ்கின் சொன்னாரே, அதுபோலத்தான் , வெறும் கவனத்தை ஈர்க்க பார்க்கிறார்கள்.. சரியான இயக்குனர் என்றால், தவறான விஷயத்தைதான் ஈர்க்கணும்னு என்று அவசியமில்லை" என்றெல்லாம் சேகுவேரா சொல்லி உள்ளார்.












Click it and Unblock the Notifications