யூடியூபில் எனக்கு இவ்வளவு வருமானம் வருது! நான் ஆதாரம் இல்லாமல் பேசல! பயில்வான் ரங்கநாதன் ஓப்பன்
சென்னை: நடிகராகவும், பத்திரிகை விமர்சகராகவும் இருக்கும் பயில்வான் ரங்கநாதன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தனக்கு சினிமாவை விட யூடியூப்பில் தான் அதிக வருமானம் வருகிறது என்று ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்றும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதோடு தான் நடிகராக இருந்த போதிலும் சினிமா துறையில் இருக்கும் பலர் அந்தரங்கங்கள் பற்றி யூடியூபில் பேசி வருவது எதற்காக என்பது பற்றியும் அந்த நிகழ்ச்சியில் பயில்வான் பேசி இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பயில்வான் ரங்கநாதனை தெரிந்திருக்கும். சினிமா துறையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றி அவர்களின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் சர்ச்சையான விஷயங்களை பேசி அதிகமான வியூஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் இவரை பலர் திட்டிக் கொண்டிருந்தாலும், இவர் பேசுவதை அதிகமானோர் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலும், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் டிஆர்பியை உயர்த்துவதற்காக பயில்வான் ரங்கநாதனை கலைஞர் டிவியில் இறக்கி இருக்கின்றனர்.
இவர் பேசிய ப்ரோமோ இணையத்தில் வெளியானதுமே இந்த எபிசோடு காண எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் தற்போது இவர் பேசிய எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் பயில்வான் ரங்கநாதன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குயிலியிடம் தான் எப்படி சினிமா நடிகைகள் பற்றி பேச தொடங்கினேன் என்பது பற்றி பேசி இருக்கிறார்.
அந்த வகையில் நான் சினிமாவில் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய போது எனக்கு பிரபலம் கிடைத்து விட்டது. மலையாளத்தில் கூட நீங்கள் நடிகர் மம்மட்டியுடன் நடித்திருக்கீங்களே என்று என்னை அடையாளப்படுத்தி சிலர் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் நடிகர் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகர் ஆனாலும் சிவாஜியோடு நடித்திருக்கிறேன். ரஜினி, கமல் போன்ற நடிகர்களோடு நான் நடித்துக் கொண்டிருந்தாலும் நான் பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பி கொண்டு தான் இருந்தேன்.
இந்த நிலையில் இப்போது சிலர் என்னை யூடியூபில் பேசுவதற்காக கூப்பிடுகிறார்கள். நானும் மறுக்க முடியவில்லை. பத்திரிக்கையில் எழுதிய செய்தியை தான் இப்போது யூடியூபில் பேசிக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சில செய்திகள் புதியதாகவும் பேசுகிறேன். ஆனால் நான் பேசும் செய்திகள் பொய்யானது அல்ல. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேச மாட்டேன்.
நான் பேசும் செய்திகளை சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளே பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். அதை தான் நான் என்னுடைய வீடியோவில் பேசுகிறேன். அதுபோல எனக்குன்னு யூடியூப் சேனல் எதுவும் கிடையாது. என்னை சில youtube காரங்க அவங்க சேனலில் பேசுவதற்காக கேக்குறாங்க. அது போல நானும் செய்கிறேன்.
அதுபோல ஒரு சில செய்தி ட்ரெண்ட் ஆனதும் ஒரே நேரத்தில் இரண்டு, மூணு youtube இல் இருந்து என்னிடம் பேச சொல்லுறாங்க. அதில் ஒரு சேனலில் பேசியதை இன்னொரு சேனலில் நான் பேசமாட்டேன். ஒரு சேனலில் பாசிட்டிவாக பேசினால் இன்னொரு சேனலில் நெகடிவாகவும் பேசுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்த பயில்வானிடம் குயிலி நீங்க சினிமாவில் நடித்து அதிக சம்பளம் வாங்குறீங்களா? இல்ல உங்களுக்கு youtube மூலமா சம்பளம் வருதா? என்று கேட்க, அதற்கு பயில்வான் எனக்கு youtube இல் தான் அதிக சம்பளம் வருது. ஒரு வீடியோ பேசினால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் முதல் சம்பளம் கிடைக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications