Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் பேசியதை எடிட் பண்ணிட்டாங்க.. ஷகிலா என் பொண்ணை பற்றி பேச காரணம் இதுதான்! பயில்வான் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் இருக்கும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும் ஷகிலாவிற்கும் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. அது குறித்து பயில்வான் ரங்கநாதன் இப்போது விளக்கம் அளித்திருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் பல நடிகை நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் அவரை திட்டிக் கொண்டிருந்தாலும் அவர் பல நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தான் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டிருக்கிறார்.

Bailwan Ranganathan and Actress Shakeela argument explained about it

இந்த நிகழ்ச்சியில் நடிகை குயிலி நடுவராக இருக்கிறார். அவர் பயில்வானிடம் ஆரம்பத்தில் அவர் எப்படி சினிமா துறைக்கு வந்தார்? எதனால் நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுகிறார்? என்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது நடிகை ஷகிலாவும் அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயில்வானிடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரித்தது . அப்போது பயில்வான் ஷகிலாவிடம் நீங்க ஆபாச படத்தில் நடித்தீர்களே அப்போ எதற்காக அந்த மாதிரி படத்தில் நடிச்சுட்டு இப்போ youtube இல் பலரை பேட்டி எடுக்குறீங்க? என்று கேட்க அதற்கு ஷகிலா நான் படத்தில் நடிச்சது வயிற்று பிழைப்புக்காக என்று சொன்னதும் பயில்வான் நானும் அப்படித்தான் எல்லாரையும் பற்றி பேசுவதும் வயிற்று பிழப்புக்காக என்று சொல்ல அதற்கு ஷகிலா கோபமாகி வயிற்றுப்புிழைப்புக்காக என்ன வேணாலும் பேசுவீங்களா? என்று கேட்கிறார்.

அதற்கு பயில்வான் நான் என்ன வேணும்னாலும் பேசல. நடிகர் நடிகைகள் பேட்டிகளில் சொன்னதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேசவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு ஷகிலா அப்போ உங்க வீட்டில் என்ன நடக்குதுன்னு தெரியுமா? உங்க பொண்ணு இன்னொரு பொண்ணை காதலிக்கிறாங்க அது தெரியுமா என்று சொன்னதும் பயில்வான் அதற்கு உங்க நாக்கு அழுகிடும் என்று சொல்லி இருந்தார்.

இப்படியாக காட்சிகள் இருந்த நிலையில் இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் என்னிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களா? என்று கேட்டபோது நான் எதாவது கான்ரவன்சியா பேசினா நானும் அதே போல பேசுவேன் என்று சொல்லித்தான் போனேன்.

ஆரம்பத்தில் குயிலி என்னிடம் சரியாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ஷகிலா தான் என்னிடம் தேவையில்லாத வார்த்தைகளை விட்டார். ஆனால் நான் பேசிய பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் எடிட் பண்ணிட்டாங்க. நான் ஷகிலாவின் பொண்ணுக்கும் அவருக்கும் நடந்த சண்டை பற்றி கேட்டதும் தான் ஷகீலா என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேசினாக.

நான் இப்போதும் என்னுடைய குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்கிறேன் எனக்கு என்னுடைய மனைவி குழந்தைகள் இருக்காங்க. ஆனால் ஷகீலா அப்படி வாழ்கிறாரா? அவங்க சரியா இருந்தா ஏன் அவங்களால அப்படி வாழ முடியல? நான் அந்த நிகழ்ச்சியில் என்னிடம் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டபோது கூட அமைதியாக தான் இருந்தேன். நான் அந்த இடத்தில் மட்டுமல்ல எப்போதுமே என்னை யாரு கோபப்படுத்தினாலும் என்னை தப்பா பேசினாலும் நான் கோபப்பட மாட்டேன்.

நான் அமைதியாகத்தான் பேசுவேன் ஆனால் அந்த நிகழ்ச்சியில் என்னிடம் சொன்னபடி அவர்கள் நடக்கவில்லை. ஆனால் நான் பேசிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் எதுவும் பேசவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். அதோடு என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்களை பேச வைத்திருந்தார்கள்.

அந்த பெண்கள் பேசுவதையும் பேசிவிட்டு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு என்னோடு போட்டோ எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். நான் தப்பானவன் தப்பான விஷயங்களை மட்டுமே பேசுகிறேன் என்றால் அவர்கள் எதற்காக என்னோடு போட்டோ எடுக்க வேண்டும்? எனக்கு பெண் ரசிகைகள் தான் அதிகமானோர் இருக்கிறார்கள். நான் சினிமாவில் இருக்கும் சாக்கடைகளை களைய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+