மிரட்டிய ராதிகாவால் கோபி செய்த செயல்... அடுத்த பிரச்சனைக்கு ரெடியான பாக்யாவின் குடும்பம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கிய லட்சுமி சீரியலில் ராதிகாவின் கோபத்தை சமாளிப்பதற்காக கோபி செய்த செயல் மீண்டும் அவர் மீது வெறுப்பை குடும்பத்திற்கு கொடுத்திருக்கிறது.

எழில் திருமணத்தை பற்றி குடும்பத்தினர் எடுத்திருக்கும் புது முடிவால் இனி பாக்யாவின் குடும்பத்திற்குள் அடுத்த புது பிரச்சனை வர காத்திருக்கிறது.

பாக்யாவுக்கு கிடைத்த பாராட்டு

பாக்யாவுக்கு கிடைத்த பாராட்டு

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஏ பாக்யா ரேஷன் கார்டு எடுத்துட்டு வா என அதிகாரமாக கோபி சொல்கிறார். ஏ..வா...போ என்று பேச நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது மரியாதை முக்கியம் என பாக்கியா பதிலடி கொடுக்க எல்லோரும் சூப்பர்மா என பாக்கியாவை பாராட்டுகிறார். ஆனாலும் கண்டுகொள்ளாத கோபி ரேஷன் கார்ட் எனக்கு வேணும் என்று விடாப்பிடியாக கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபியின் அப்பா தர முடியாது முடிந்ததை செய் என்று பேசி அனுப்பி விடுகிறார்.

ராதிகாவால் நடுங்கிப்போன கோபி

ராதிகாவால் நடுங்கிப்போன கோபி

ராதிகாவிடம் இனி போனால் என்ன ஆகும் என்று தெரியலையே என புலம்பிக்கொண்டே வீட்டிற்கு வந்த கோபியிடம் உங்களால் எதுவுமே பண்ண முடியாதா கோபி, என்கிட்ட மட்டும் தான் நீங்க கோபத்தை காட்டுறீங்க? அந்த வீட்ல இருந்து தானே வெளியே வந்தீங்க? எல்லோரும் சேர்ந்து தானே உங்களை வெளியே அனுப்புனாங்க? அப்படி இருக்கும்போது ரேஷன் கார்டு கூட உங்களால் வாங்க முடியாதா? என சத்தம் போடுகிறார். ராதிகாவின் கோபத்தை பார்த்த கோபி என்ன நீ கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட என கேட்க, நீங்களும் தான் கல்யாணத்துக்கு பிறகு மாறிட்டீங்க என ராதிகா கூறுகிறார். கல்யாணத்துக்கு முன்பு உனக்காக எதுவும் செய்வேன் என்று சொன்னீங்க, இப்போ ஒரு ரேஷன் கார்ட் கூட வாங்கி தர மாட்டீங்க என்று சொல்கிறார். உனக்கு என்ன ரேஷன் கார்ட் தானே வேணும் நான் வாரேன் என்று மீண்டும் அங்கிருந்து கிளம்பி பாக்கியாவின் வீட்டுக்கு வருகிறார்.

கையில் கிடைத்தது ரேஷன் கார்ட்

கையில் கிடைத்தது ரேஷன் கார்ட்

நேராக வீட்டுக்கு வந்த கோபி கிச்சனில் சென்று ரேஷன் கார்ட் தேடுகிறார். அப்போது கோபியின் அப்பா உட்பட எல்லோரும் வெளியே போ என்று கோபியை திட்டுகின்றனர். ரேஷன் கார்ட் இல்லாமல் நான் போக மாட்டேன் என தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது செழியன் ஜெனி அந்த ரேஷன் கார்ட் எங்க இருக்கு என கேட்க கபோர்டு பர்ஸில் இருக்கு என சொல்லுகிறார். அதை பாக்கியா தடுத்து நிறுத்தியும் சொல்லிவிட்டார். கோபி அந்த ரேஷன் கார்டை தேடி எடுத்து ரேஷன் கார்டில் என்னுடைய போட்டோ தான் இருக்கிறது. என்னுடைய ஃபோட்டோ பெயர் வேண்டும் ஆனால் நான் வேண்டாம் என கோபமாக பேசிவிட்டு ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது இதை ஒரு நகல் எடுத்துட்டு என்னுடைய பெயரை மாற்றி விட்டு உங்களுக்கு தந்து விடுகிறேன் என கூறிக் கொண்டே கிளம்புகிறார்.

என்ன நடிப்புடா சாமி

என்ன நடிப்புடா சாமி

ரேஷன் கார்ட் எடுத்துட்டு போய் ராதிகா விடம் நீட்டி இந்தா இப்போ உனக்கு சந்தோஷமா? என கேட்க, உடனே கூலாக மாறிய ராதிகா எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க, என்ன நடந்துச்சி இப்போ? என அப்படியே டோட்டலாக மாறி பேசுகிறார். நீ கோபப்படுத்தாத, கோபப்பட்டால் எனக்கு பயமா இருக்கு என்று கோபி பரிதாபமாக பேசுகிறார். நான் போய் பிளாக் ஆகி எடுத்துட்டு வரேன் என ராதிகா கிளம்புகிறார். அடுத்ததாக எழில் பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார் அப்போது ஈஸ்வரி எழிலுடைய ப்ரொடியூசர் மகளான வர்ஷினி வந்துட்டு போன விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு தெரியாது, எனக்கு சொல்லாமல் அவர் வந்து விட்டார் என்று எழில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பிரச்சனைக்கு தொடக்கம்

அடுத்த பிரச்சனைக்கு தொடக்கம்

அதற்கு ஈஸ்வரி அந்த பொண்ணு பார்க்க ரொம்ப அழகா, பண்ண திமிரு இல்லாம இருக்கா? நம்ம எழிலுக்கு கல்யாணம் பண்ணி வச்சா எப்படி இருக்கும்னு தோணுச்சு என ட சொல்ல எழில் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ராமமூர்த்தி எழிலுக்கு பொண்ணு பாக்க போறியா? ஒரு பொண்ணு வந்தா உடனே கல்யாண கதையை எடுத்துரணுமா என திட்டுகிறார். ஆமாம் எழிலுக்கு வயசு ஆகியாச்சு இனி கல்யாணம் பண்ண வேண்டும் என சொல்வதும் எழில் பாக்யாவை பார்க்கிறார் . பாக்கியா இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் போகட்டும் என சொல்ல ,ஈஸ்வரி எழிலுக்கு நல்ல பெருசா கல்யாணம் பண்ணனும். லவ் பண்ணி ஏதாவது வந்தா, அவ்வளவுதான் என மிரட்டி கொண்டிருக்கிறார். இந்தனால் பயந்து போன எழில் பாக்யாவிடம் அம்மா என்ன பண்ண இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க என கேட்க பாட்டி இப்படி பேசுவாங்க ஆனா ஒன்னும் செய்யப்பட மாட்டாங்க நீ பயப்படாதே என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+