திருமணத்திற்கு பிறகு வில்லியாக மாறிய ராதிகா.. பாக்யாவின் மீது மொத்த பழியும்.. இனி இப்படியா..!?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிரடியான பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
கோபி ராதிகா திருமணம் முடிவடைந்து விட்டது.
திருமணத்திற்கு பிறகு ராதிகா வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார். இனி பாக்கியாவின் நிலைமைதான் பரிதாபம் போல.

பழி ஒரு பக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரைக்கும் அமைதியாக இருந்து வந்த ராதிகா தற்போது நெகட்டிவ் கேரக்டராக மாறி இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத இந்த மாற்றம் இனி வரும் நாட்களில் எப்படி இருக்க போகிறதோ என்று பலரும் புலம்பி வருகிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் முடிந்திருக்கிறது. திருமணத்தை நிருத்துவதற்காக மண்டபத்திற்கு வந்த கோபியின் அம்மா ராதிகா மற்றும் ராதிகாவின் குடும்பத்தை திட்டி இருக்கிறார். இதனால் கோபத்தை ராதிகா பாக்கியாவிடம் காட்டியிருக்கிறார்.

கடுங்கோபத்தில் ஈஸ்வரி அம்மா
கோபிக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற கோபத்திலிருந்து ஈஸ்வரி அம்மா கோபியை கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அப்போது அருகில் இருக்கும் ராதிகாவின் அண்ணன் எங்கள் குடும்பத்தை உறவினர்கள் முன்பு கேவலப்படுத்த வேண்டும் என்று இப்படி வந்து பேசுகிறீர்களா? உங்கள் மகன் விவாகரத்து செய்துவிட்டு வந்ததால் தானே நாங்கள் திருமணம் செய்து வைத்தோம் என்று பேசி இருக்கிறார். அதற்கு கோபியின் அம்மா உங்கள் குடும்பம் ஒரு கேவலமானது என்று பேசி இருக்கிறார். அதோடு இல்லாமல் ராதிகாவை குறித்தும் பேசி இருக்கிறார். அப்போது கோபி அம்மாவை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

உளறிய கோபி
தன்னை அடுத்தவர்கள் திட்டும்போது கோபி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்று கோபத்தில் இருந்த ராதிகா, பாக்யாவிடம் இப்போது உங்களுக்கு சந்தோஷமா? கோபி டைவர்ஸ் வாங்கிட்டு வந்ததால் தானே நான் கல்யாணத்துக்கு சரி என்று சொன்னேன். ஆனாலும் உங்களை வேண்டாம் என்று கோபி சொன்ன பிறகும் நீங்கள் தான் கோபியின் அப்பா அம்மாவிற்கு பெரியதாக தெரிகிறீர்கள். ஆனால் நான் எல்லோருக்கும் கேவலமாக இருக்கிறேனா? என்று பாக்யாவின் மீது கோபத்தை திருப்பி இருக்கிறார். அப்போது கோபியும் இது எல்லாமே பாக்யாவின் சூழ்ச்சி தான். பாக்கியா தான் எல்லாரையும் போன் பண்ணி வரச் சொல்லி கல்யாணத்தை நிறுத்த பார்த்திருக்கிறார். நல்ல வேலை கல்யாணம் முடிந்துடுச்சி இல்லன்னா வந்து நிறுத்தி இருப்பாங்க என்று கூறியிருக்கிறார்.

ஆட்டத்தை தொடங்கிய ராதிகா
உடனே ராதிகா அப்போ கொஞ்சம் முன்னாடி அவங்க வந்து திருமணத்தை நிறுத்த சொல்லி இருந்தா நீங்க கல்யாணத்தை நிறுத்தி இருப்பிங்களா? என்று கோபியிடம் கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல தெரியாமல் கோபி முழித்துக் கொண்டிருக்கிறார். உடனே கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வீசிவிட்டு மணமேடையை விட்டு ராதிகா இறங்கி சென்று விட்டார். பின்பு கோபியும் அவருடைய ராதிகாவின் அம்மா, அண்ணனும் சமாதானம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ராதிகா இனி இந்த மண்டபத்தில் இருக்க வேண்டாம். வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ராதிகாவின் அண்ணன் வந்தவர்கள் எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாமும் இன்னும் சாப்பிடக்கூட செய்யவில்லை அதற்குள் போகணுமா? என்று கேட்கவும், நான் வீட்டுக்கு போகணும் என்று மீண்டும் கறாராக கூறுகிறார். அதனால் எல்லோரும் வீட்டுக்கு செல்வதற்கு கிளம்புகிறார்கள். அப்போது மாடியில் பாக்கியா நின்று கொண்டிருக்கிறார். பாக்யாவை பார்த்ததும் கடும் கோபத்தில் இருக்கும் ராதிகா அவர் முன்பு கோபியின் கைகளை பிடித்தபடி பாக்யாவை பார்த்து முறைக்கிறார். பாக்யாவும் ராதிகாவின் கையை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. இதுவரைக்கும் அமைதியாக இருந்த ராதிகா இனி ஆடப்போகும் ஆட்டத்தால் பாக்கியாவின் நிலைமை என்ன ஆகுமோ என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications