நீண்ட நாள் ஆசை நிறைவேறுது.. நடிகர் பாலாவின் நாலாவது கல்யாணமும், கோகிலாவின் காதலும்! ஹேப்பி குடும்பம்
சென்னை: 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபரான நடிகர் பாலாவின் 4வது திருமணம்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பாலா திருமணம் செய்துள்ள மணமகள் பற்றின தகவல் தற்போது வெளியாகி அதற்கு மேல் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர் பாலா, தமிழில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், மலையாள படத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். 41 வயதாகும் பாலா, ஏற்கனவே திருமணமானவர்.. 2010 முதல் 2019 வரை முதல் மனைவி பாடகி அம்ருதா சுரேஷுடன் மணவாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

2வதாக டாக்டர் எலிசபெத் என்பவருடன் லிவ்விங் இன் உறவு என்றார்கள், திருமணமே செய்துவிட்டார்கள் என்றார்கள்.. ஆனால், அது உறுதியாவதற்கு முன்பேயே எலிசபெத்தை பிரிந்தார் பாலா...
நடிகையுடன் கல்யாணம்: இதற்கு பிறகு பாலா ஒரு நடிகையை கல்யாணம் செய்யப்போகிறார் என்றார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், தன்னுடைய திருமணத்தை அறிவித்துள்ளார் பாலா.. தான் திருமணம் செய்யப்போகும் பெண் பெயர் கோகிலா என்று கூறிய பாலா, திருமணத்தை முடித்துக் கொண்டு ஒரு பேட்டியும் தந்துள்ளார்.
அதில், "ஆபரேஷனுக்கு பிறகு எனக்கு ஒரு துணை தேவை என்ற உணர்வு தோன்றியது. அதனால்தான் திருமணம் செய்துகொண்டேன்.. கோகிலா என்னுடைய உறவுக்கார பெண். நாங்கள் இருவருமே மனதளவில் ஒத்துப்போய்விட்டோம்.. இது எங்களுடைய ஆரம்பம்தான்.. எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.. " என்று மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
உறவுக்கார பெண்: இந்நிலையில், உறவுப்பெண்ணான கோகிலா, பாலா மீது வைத்திருந்த காதல் பற்றின தகவல்கள் வெளியாகி வியப்பை கூட்டி வருகிறது.. தன்னுடைய சிறுவயதிலிருந்தே பாலாவை நேசித்து வந்துள்ளாராம் கோகிலா.. ஒரு கட்டத்தில் பாலாவின் மீதான தனது அன்பை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய டைரியிலேயே எழுதி பாதுகாத்து வந்தாராம்..

3வது மனைவி எலிசபெத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மன அமைதிக்காக பாலா சென்னையில் தங்கியிருந்தபோதுதான், கோகிலாவை பற்றியும், தன்மீது சிறுவயதில் இருந்தே அவர் கொண்டிருந்த காதல் பற்றியும் பாலாவுக்கு தெரியவந்ததாம்..
பூரித்த கோகிலா: அதுமட்டுமல்ல, கோகிலாவின் சிறுவயது காதல் அன்பு மட்டுமல்லாமல், வயதான தனது தாயின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாகவே, கோகிலாவை உடனடியாக திருமணம் செய்து கொள்ள நேரிட்டதாகவும் பாலா கூறுகிறார்.. அந்தவகையில், சிறு வயது காதல் பாலாவுடன் முதல் திருமணத்தில் கைகூடாவிட்டாலும் அவரது நான்காவது திருமணத்திலாவது ஒன்று சேர முடிந்ததே என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் புது மனைவி கோகிலா. தம்பதியின் திருமண போட்டோக்கள்தான் இணையத்தில் கலக்கி கொண்டிருக்கின்றன.
முன்னதாக நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா மற்றும் தனது மகளை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறை அவரை கைது செய்திருந்தது.. பிறகு ஜாமீனில் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தனது ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது முறைப்பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் பாலா
இந்த திருமணம் குறித்து பாலா சொல்லும்போது,"கோகிலாவின் கனவை இந்த திருமணம் நிறைவேற்றும். கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது. இருந்தாலும், கடந்த ஒரு வருடமாக என்னுடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதில் அவர் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்தார். இந்த திருமண வாழ்க்கை நன்றாகச் செல்லும் என்று நம்புகிறேன். கோகிலா எனது உறவினர் என்பதால் எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications