ஷிவானியின் அம்மாவை தோளில் சாய்த்தபடி.. முரட்டு போஸ் கொடுத்த பாலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷிவானியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக அவருடைய வீட்டிற்கு சென்று அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்த பாலாஜி அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் .

Recommended Video

    Shivani-க்கு Cake ஊட்டிய Bala |Shivani Birthday Celebration With Bala | Bigg Boss | Filmibeat Tamil

    பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவரை கண்டுகொள்ளாமல் விட்டு சென்ற ஷிவானியின் அம்மாவை தற்போது தோளில் அணைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

    வாயை கோணலாக வைத்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடவும் அந்த போட்டோஸ்கள் பெரும் வைரலாக பரவி வருகிறது.

    கலாய்க்கப்பட்ட பாலா

    கலாய்க்கப்பட்ட பாலா

    என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்த பாலாஜியை தற்போது இந்த மாதிரி பார்த்ததும் அதிர்ச்சியான ரசிகர்கள் எப்படி இது சாத்தியமாயிற்று என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது என கடுப்பில் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பாலாஜியை அதுவரைக்கும் தெரியாமல் இருந்த ரசிகர்கள் கூட யார் இவர் என கேட்க ஆரம்பித்து விட்டார் .

    பலருக்கும் பிடிச்சிருக்கு

    பலருக்கும் பிடிச்சிருக்கு

    தன்னுடைய எதற்கும் துணிந்த குணத்தையும் யாருக்கும் பயப்படாத திமிர் பேச்சையும் பலருக்கும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது .அதுவுமில்லாமல் தான் தவறு செய்து இருந்தால் அடுத்த நிமிடமே அதற்கு இறங்கிப் போய் மன்னிப்பு கேட்கும் இவருடைய குணத்தையும் ரசித்த ரசிகர்கள் இவரை நன்றாக ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முன்பு இவர் ஆணழகன் பட்டத்தை பெற்று துணிக்கடை முதல் பல விளம்பரங்களுக்கும் மாடலாக நடித்து இருக்கிறார்.

    செம போட்டோஸ்

    செம போட்டோஸ்

    இருந்தாலும் அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருந்த இவரை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ்க்கு பிறகு இவர் கடைதிறப்பு பங்க்ஷன் முதல் தன்னுடைய பிரெண்ட்ஸ்களுடன் அடிக்கடி எடுக்கும் போட்டோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார் .இதுவரை இல்லாத வகையில் தற்போது இவர் போட்டோக்களை பார்த்து இவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் .

    கலக்கல்

    கலக்கல்

    ஏனென்றால் இவர் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது இவருக்கும் ஷிவானிக்கும் காதல் என கிசுகிசு எழுந்ததை தொடர்ந்து ஷிவானியின் அம்மா இந்த வீட்டிற்குள் சென்று ஷிவானியை வார்த்தைகளாலேயே வறுத்தெடுத்து விட்டு பாலாஜியை தன்னுடைய பார்வையாலே எரித்து விட்டு வந்தார். இந்த எபிசோடு இதுவரைக்கும் இல்லாத வகையில் வேற லெவல் ரீச் ஆகி வந்தது. ஆனால் தற்போது வெளியே வந்த பிறகும் இவர்கள் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    செம ஆட்டம்

    செம ஆட்டம்

    அடிக்கடி இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடி அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவர் .அந்த மாதிரி தற்போது ஷிவானியின் பிறந்தநாளை நேற்று ரொம்பவும் கிராண்டாக கொண்டிருக்கிறார்கள் .அதுவும் அதில் ஸ்பெஷல் என்னவென்றால் பிறந்தநாளுக்கு பாலாஜி ஷிவானியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் .அங்கு சென்று ஷிவானிக்கு மட்டும் கேட் ஊட்டாமல் ஷிவானியின் அம்மாவுடனும் செல்பிக்களை எடுத்து குவித்திருக்கிறார் .

    பெரிய ஆள்தான்

    பெரிய ஆள்தான்

    இவர்கள் எடுத்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ அப்ப மட்டும் அப்படி எல்லாம் இந்த அம்மா பேசினாங்க இப்ப மனசு மாறி விட்டார்களா என கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதிலும் சில குறும்புக்கார ரசிகர்கள் நம்ம தலைக்கு தில்ல பார்த்தியா பொண்ணு மட்டும் இல்ல அம்மாவையும் கரெக்ட் பண்ணியாச்சு என கலாய்ச்சு வருகின்றனர். அப்படில்லாம் சொல்லாதீங்கப்பா.. இப்பவாச்சும் பாலா மனசை புரிஞ்சுக்கிட்டாரே ஷிவானி அம்மா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+