இப்படியே விட்டா.. சூப்பர் ஹீரோவாக கலக்குவார்.. செம்ம ஆட்டிடியூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த பிக்பாஸ் 4 தொடங்குகின நாளிலிருந்து தினமும் சண்டைக் காட்சிகள்தான் அதிகமாக இருந்து கொண்டு இருக்கிறது.

அதிலும் அழுகாச்சி சீன்களுக்கும் பஞ்சமில்லாமல் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் அழுது கொண்டு இருக்கின்றனர். இதுவரைக்கும் சண்டக்கோழியாக சிலிர்த்துக் கொண்டு அலைந்த பாலாஜி தற்போது தேம்பித் தேம்பி அழுவது வைரலாக பரவி வருகிறது.

பாலாஜி இந்த வீட்டிற்குள் அறிமுகமானதிலிருந்து போல்டாக எதையும் திமிராகவே பேசிக் கொண்டிருக்கிறார். தப்பு என்று தெரிந்தால் உடனே அதில் தைரியமாக பேசிவிடுகிறார்.

 ஜாலி ஜாலி

ஜாலி ஜாலி

யார் என்ன நினைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை என்று ஜாலியாக இருந்தார் .நேற்று நடந்த முடிந்த எபிசோடில் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி வீடு பெருக்குவதற்கு வைத்துவிட்டனர். இந்த வீட்டில் இவருக்கும் அர்ச்சனாவுக்கும் அடிக்கடி சண்டை வந்து முட்டிக் கொண்டு இருக்கிறது. இதிலும் இந்த வாரம் தலைவர் பதவியில் அர்ச்சனா வந்து அமர்ந்ததும் தன்னுடைய கெத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவர் அடிக்கடி சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்.

 சண்டை தீரலை

சண்டை தீரலை

அதை பிடிக்காத பாலா அவரை அடிக்கடி நோஸ் கட் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் சண்டையும் கமல் தலையிடும் தீர்ந்தபாடில்லை. அதிலும் நேற்று இவர் தூங்கிக் கொண்டிருப்பதை பொறுக்காத அர்ச்சனா வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி வேல்முருகனை விட்டு அவரை எழுப்பி வரும்படி கூறியிருக்கிறார். வேல்முருகன் எழுப்பும் போது அவர் முதலில் எழுந்திருக்காமல் படுத்திருக்கிறார்.

 உடம்புக்கு டயர்டா இருக்கு

உடம்புக்கு டயர்டா இருக்கு

பின்பு அஜித் சென்று எழுப்பியிருக்கிறார். அவரிடம் எனக்கு இன்று உடம்பு ரொம்ப டயர்டாக இருக்கிறது. அதனால் நாளை காலை நான் பெருக்குகிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கூட்டத்திடம் கூறியதும் அது எப்படி அவர் மட்டும் தூங்கலாம் என்று மீண்டும் வேல்முருகன் எழுப்புகிறார். அதற்கு அவரிடமும் ஆஜித்திடம் கூறியதையே கூறியிருக்கிறார் .அதனால் திரும்பி வந்து வேல்முருகன் அர்ச்சனாவிடம் அவர் வர மாட்டாராம்.

 கோபத்தில் குதித்த அர்ச்சனா

கோபத்தில் குதித்த அர்ச்சனா

அவருக்கு உடம்பு முடியவில்லை என்று கூறியதும். அர்ச்சனா உடம்பு முடியலன்னா எட்டி மட்டும் பார்க்க முடியுமா என்று கூறினார் . இதைக் கேட்டதும் பொங்கி எழுந்து மைக் மாட்டிகிட்டு பாலாஜி வந்து எப்படி இப்படி எல்லாம் சொல்லலாம் என்று ஒருவர் படுத்தால் இப்படித்தான் அதுவும் தூங்கின பிறகு ஒருத்தரை இப்படித்தான் டார்ச்சர் பண்ணுவீங்களா என்று தனது கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

 அரைக்க வைக்கப் போறேன்

அரைக்க வைக்கப் போறேன்

அதுவும் தன்னுடைய கோபத்தில் அடுத்தது நான் கேப்டன் ஆகி இந்த வீட்டில் எல்லாரையும் அம்மியில் அரைக்க வைக்க போகிறேன் என்று சபதம் போட்டு அதை வெளிப்படையாகவும் கூறி விட்டார். அதை கேட்ட ரசிகர்கள் கூட மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து பாலா சத்தமா பேசிட்டார் என்று கலாய்ச்சு கமெண்டுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 ரியோவுக்கு வந்த கோபம்

ரியோவுக்கு வந்த கோபம்

இருந்தாலும் இதைக் கேட்டதும் அங்கு எப்பவுமே ஒன்றாக சுற்றி கொண்டிருக்கும் அர்ச்சனா ரியோ ஒன்றாக பொங்கி எழுந்து விட்டார்கள். ஆனாலும் அசால்டாக பாலாவும் அவர்களுக்கு பதில் கூறிக் கொண்டிருக்கிறார். அவர்கள் 5 பேர் சேர்ந்து இவர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர் .அதில் ரியோ நீங்க செஞ்சது தப்பு என்று சொல்லும்போது அப்படியா வச்சுக்கோங்க இருக்கட்டும் என்று இவர் பேசியிருப்பது ரசிகர்களிடம் இவர் பழைய மீராவாக மாறிவிட்டார் என்று இவரைப் பற்றி பல மீம்ஸ்களும் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 ரியோவுக்கு பல்பு

ரியோவுக்கு பல்பு

எப்பவுமே திமிராக பேசிக் கொண்டிருக்கும் இவர் ஐந்து பேரிடமும் போராடிக் கொண்டு இருந்தாலும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து இவரை டார்கெட் செய்யும் போது அதுவும் அர்ச்சனா இடுப்பில் கையை வைத்து ஆடி கிண்டல் பண்ணும் போது இவர் கோபத்தின் உச்சிக்கே சென்று வெளியே வந்து தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

 சண்டை இல்லாட்டி அழுகாச்சி

சண்டை இல்லாட்டி அழுகாச்சி

நேற்று அனிதா அதுக்கு முன்னாடி சுரேஷ் அதுக்கு முன்னாடி நிஷா இப்படி வரிசையாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் அழுது ரசிகர்களை அழவைத்து கொண்டிருக்கிறார்கள். தினமும் அழுகாச்சி சீன்களையை ஒளிபரப்பி இந்த பிக் பாஸ் ரசிகர்களை பாடாய்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்னு மட்டும் தெரியுது.. பாலாஜி சூப்பர் ஹீராவாக தமிழ் சினிமாவில் கலக்குவார் என்பது மட்டும் நிச்சயம்.. அந்த அளவுக்கு அவரிடம் செம்மையான ஆட்டிடியூட் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+