Barathi Kannamma Serial: ஒத்தையில நின்னதென்ன என் மகளே கருப்பு கண்ணம்மா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் விழிப்புணர்வு சீரியல் என்று சொல்லலாம். இந்த காலத்துக்கு இது கொஞ்சம் பொருத்தம் இல்லாத சீரியல் என்றும் சொல்லலாம்.

பெண்கள் கருப்பு நிறம் என்றால் ஏளனம் செய்த காலம் இப்போது இல்லை என்றாலும், அங்கங்கு இப்படி பிடுங்கப்படாத களைகள் இருக்கும் என்பதால், களை எடுக்க ஏற்ற சீரியலாகவும் இருக்கிறது..

கருப்பே பிடிக்காத தொழிலதிபர் சவுந்தர்யா அம்மாவுக்கு கருப்பு மருமகளாக கண்ணம்மா வருவதுதான் கதை. இவங்க முதல் பையன் பாரதிதான் கருப்பு கண்ணம்மாவை காதலிச்சு திருமணம் செய்துகொண்டது.

அகிலன் அஞ்சலி

அகிலன் அஞ்சலி

கருப்பு கண்ணம்மாவின் அம்மா இறந்துவிட, அப்பாவின் இரண்டாம் தாரத்துக்கு பிறந்த அஞ்சலி ரொம்ப அழகு. மிஸ் சென்னை வேற... இதனால், டாக்டர் பாரதியின் தம்பி அகிலன் அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கிறான். தம்பிக்கு பெண் பார்க்க வந்த இடத்தில் கருப்பு கண்ணம்மாவை பார்த்த அண்ணன் பாரதிக்கு அவளை ரொம்ப பிடிச்சு போகுது. அகிலன் அஞ்சலி கல்யாணம் நடக்கும் முன்பே, அம்மா வெறுக்கும் கருப்பு கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கறான் பாரதி.

சவுந்தர்யா அம்மா

சவுந்தர்யா அம்மா

வீட்டுக்கு கண்ணம்மா மருமகளா வந்தும், அவளை ஒரு வேலைக்காரி மாதிரியே நடத்தறாங்க. வீடே இருள் சூழ்ந்து இருக்குதுன்னு அடிக்கடி புலம்பறாங்க. பாரதி உன் வாழ்க்கை இருட்டுக்குள் மூழ்கிருச்சுன்னு சொல்றாங்க. மகள் வயிற்று பேத்தி கருப்பு என்று அவளை இன்னும் தொட்டது கூட இல்லை. இந்த நேரத்தில்தான் அகிலன் அஞ்சலி கல்யாணத்துக்கு கண்ணம்மா வர கூடாதுன்னு நினைக்கிறாங்க.

ஆள் இருக்கணும்

ஆள் இருக்கணும்

கல்யாண மண்டபத்துக்கு எல்லாரும் கிளம்பிக் கொண்டு இருக்கையில், சவுந்தர்யா அம்மா கண்ணம்மாவை இதில் ஏறாதே, அதில் ஏறாதே என்று தடுத்துகிட்டே இருக்காங்க.கடைசியில் வீட்டை பார்த்துக்க ஆள் வேணும்.அதனால், அவ வீட்டைப் பார்த்துக்கிட்டு இங்கேயே இருக்கட்டும்னு கண்ணம்மாவை விட்டுட்டு கிளம்பிடறாங்க.

கை விட்டுட்டீங்களே

கை விட்டுட்டீங்களே

பாரதி தனது மகள் கருப்பு கண்ணம்மாவை காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர் கண்ணம்மாவின் அப்பா. தனது மகளும் இளைய மகள் கல்யாணத்தில் மாப்பிள்ளையுடன் கலந்துக்குவா ,கண் குளிர பார்க்கலாம் என்று ஆசையுடன் காத்திருந்த கண்ணம்மாவின் அப்பா கண்ணம்மா வராத ஏமாற்றத்தில், மாப்பிள்ளை கண்ணம்மாவை கைவிட மாட்டீங்கன்னு நினைச்சு இருந்தேன். இவ்ளோ சீக்கிரம் கை விட்டுட்டீங்களேன்னு கலங்கும்போது நமக்கே கண்ணீர் வருது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+