Barathi Kannamma Serial: பாரதி கண்ணம்மா... சிறு பிள்ளைத் தனமான கதை!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கதை ரொம்ப சிறு பிள்ளைத் தனமான கதையா இருக்கு. உண்மையான டாக்டர் மாதிரி இல்லை டாக்டர் விளையாட்டு விளையாடறவங்க கதை மாதிரி இருக்கு.
பாரதி, வெண்பா டாக்டருக்கு படிக்கும்போது பழக்கமாம். வெண்பா பாரதியை லவ் பண்றாளாம். ஆனா, பாரதி வெண்பாவை லவ் பண்ணலை. பாரதி வேற ஒரு பொண்ணை லவ் பண்ண எப்படிடா கரெக்ட் பண்றதுன்னு காத்திருந்த வெண்பா பாரதி லவ் பண்ற பெண்ணுக்கு ஒரு விபத்தை ரெடி பண்றா.
அந்த விபத்தில் பாரதியும் எதிர்பாராம மாட்டிக்க, இதை வெண்பா தனக்கு சாதகமா மாத்திக்கிட்டு, பாரதிக்கு இனி குழந்தை பிறக்காதுன்னு மெடிக்கல் சான்றிதழ் பொய்யா தயாரித்து கொடுத்துடறா.

நம்பும் பாரதி
வெண்பாவின் இந்த ரிப்போர்ட்டை நம்பிடறான் பாரதி. சாதாரண குடிமகன்களே ஒரு டாக்டர் ரிப்போர்ட்டை விடுத்து இன்னொரு டாகடர் ஒப்பீனியன் கேட்க வேண்டும் என்று ஆலோசனை நிலவுகிறது. ஒரு கத்துக்குட்டி டாக்டரின் ரிப்போர்ட்டை நம்பி அத்துடன் விட்டு விடுவது வேடிக்கை. இத்தனைக்கும் இவனும் ஒரு டாக்டர்.

தப்புக் கணக்கு வெண்பா
பாரதியுடன் நிற்காமல் கண்ணம்மாவிடம் தனது ஆட்டத்தை ஆரம்பிக்க, அவளிடம் முதலில் கர்ப்பத்தைத் தடுக்க மாத்திரை சாப்பிட சொல்வது... அடுத்து உனக்கு குழந்தை பிறக்குமா என்று உனக்கு டெஸ்ட் செய்கிறேன் கண்ணம்மா என்று மருத்துவமனைக்கு கூப்பிடுவது. அவளும் புருஷன் பாரதிக்கு தெரியாமல் வருவது... நினைத்தபடி கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மி என்று பொய்யான ரிப்போர்ட் தருவது... என்று வெண்பா, கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்தால் பாரதி தன்னை கல்யாணம் செய்துக்குவான் என்று தப்புக் கணக்கு போட்டு சரியாக வேலை செய்கிறாள் வெண்பா.

இப்படியா நிஜத்தில்
காதலித்தவன் வேறு கல்யாணம் செய்து கொண்டால் அவனை மறந்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவதுதான் வாழ்க்கை. இதை விடுத்து அவனே வேண்டும் என்று சதி செய்து அவன் மனைவியை அவனை விட்டு பிரித்து, அந்த இடத்தில் தான் வாழ வேண்டும் என்று நினைப்பது டிவி சீரியல்களில் மட்டுமே சாத்தியம்.

உண்மை தெரிந்த அப்பா
கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு கம்மி என்கிற மருத்துவ ரிப்போர்ட்டை தெரிந்துகொண்ட மாமியார் சவுந்தர்யா அம்மா, இதுதான் சாக்கு என்று கண்ணம்மாவை மகனை விட்டு பிரிக்க நினைக்கறாங்க. ஆனால், தனக்கு குழந்தை பிறக்காது என்று முதலில் பொய்யாக ரிப்போர் கூறியதை உண்மை என்று நம்பி இருந்த பாரதி அந்த உண்மையை மாமனாரிடம் கல்யாணத்துக்கு முன்பே சொல்லி இருக்க அதை வச்சு இப்போது விளையாட்டு காண்பிக்கறார் கண்ணம்மாவின் அப்பா.
நிஜமா சிறு பிள்ளைத்தனமா இருக்குதுங்க பாரதி கண்ணம்மா சீரியல் கதை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications