பயில்வான் ரங்கநாதன் பங்கேற்கிறாரா? அலப்பறையாகும் பிக்பாஸ் வீடு! அய்யோ ரேகா நாயரும் இருக்காரே!
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் டிவி தரப்பு பயில்வான் ரங்கநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட நபர்களை ஒரே வீட்டில் தங்க வைத்து 106 நாட்கள் கழித்து அந்த வீட்டில் யார் கடைசி வரை தங்குகிறார்களோ அவர்கள்தான் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்துள்ளது. இந்த 6ஆவது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் விக்ரமன், அசீம் ஆகியோரிடையே டைட்டில் வின்னருக்கான போட்டியில் அசீம் வென்றார்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார், இதற்காக அவருக்கு ரூ.100 கோடி ஊதியமாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சீசனுக்கான புரமோஷன் ஷூட் ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில் இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று யூகங்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோவை பெண் டிரைவர் ஷர்மிளா கலந்து கொள்கிறார் என்கிறார்கள். அது போல் ரேகா நாயர், பாவனா, மாகாபா ஆனந்த், குக் வித் கோமாளி சரண் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது. அது போல் தொகுப்பாளர் ஜாக்குலின் உள்ளிட்ட சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
அது போல் சீரியல் நடிகை ரித்திகாவும் கலந்து கொள்கிறார்கள். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் பிக்பாஸ் செட்டப் போல் இருக்கிறதாம். இதற்காக மண்டை மேல இருக்கிற கொண்டையை மறைக்கலையே என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். அவர் பிக்பாஸுக்கு போவதால்தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறினார் என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் யூடியூபரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பொருத்தமட்டில் பரபரப்பை கிளப்பினால்தான் டிஆர்பி ரேட் கூடும். அப்படியிருக்கும் போது ரேகா நாயர் கலந்து கொள்கிறார் என கூறும் போது பயில்வானிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிச்சயம் இந்த நிகழ்ச்சியில் பெரிய அலப்பறை இருக்கும் என்கிறார்கள்.
இரவின் நிழல் பட பிரச்சினையின் போது ஒரு சீனில் நடித்த ரேகா நாயரை பயில்வான் கண்டபடி விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் ஒரு முறை பெசன்ட் நகர் பீச்சில் வாக்கிங் சென்ற பயில்வானை ரேகா நாயர் நேருக்கு நேர் சந்தித்ததும் அவருடன் வாக்குவாதம் செய்து அடிக்க பாய்ந்தார். ஆனால் அவரை பொது மக்கள் தடுத்தனர். எனவே பிக்பாஸ் வீட்டிற்குள் ரேகா நாயரும் பயில்வானும் கலந்து கொண்டால் டிஆர்பி நிச்சயம் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications
