பெட்ரோல் பங்க்கில் அப்பாஸ்.. ஒரே இரவில் மார்க்கெட் காலி.. அப்பாஸை விரட்டியடித்தது "புரட்சி" நடிகரா?
சென்னை: பிரபல நடிகர் அப்பாஸ், குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவும், பெட்ரோல் பேங்கிலும், மெக்கானிக் ஷெட்டிலும், கன்ஸ்ட்ரக்ஷன் வேலையும் பார்த்துக் கொண்டிருப்பாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அப்பாஸுக்கு பட வாய்ப்பு குறைய என்ன காரணம், அப்பாஸை காலி செய்த நடிகர் யார்? என்பது குறித்த தகவல்கள் சில வெளியாகியிருக்கின்றன.
Realone சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், "காதல் தேசம் படத்தில் அறிமுகமானார் அப்பாஸ்.. அப்போது எல்லாருமே அந்த படத்தில் அப்பாஸை திரும்பி பார்த்தார்கள்.. தமிழ் திரையுலகில் இவ்வளவு அழகான ஹீரோவா என்று பெண்கள் உட்பட எல்லாருமே கொண்டாட துவங்கினார்கள்.

ஆனந்த விகடன், குமுதம் பத்திரிகைகளில் அப்பாஸின் அட்டைப்படத்தை வெளியிட்டு, கட்டுரையும் எழுதியிருந்தார்கள். பொதுவாக, குமுதம் பத்திரிகையில், புதிய நடிகர்கள் வந்தால், அவர்களது போட்டாவை வெளியிட்டு, கட்டுரை எழுதுவார்கள்.. ஆனால், ஆனந்த விகடனில் அவ்வளவு சீக்கிரம் புதுமுகங்களை, அட்டை படங்களில் போட மாட்டார்கள். அப்பாஸுக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருந்தது.
ஒரே வாரத்தில் டிரெண்ட்
உடனே அப்பாஸை சுற்றி பல தயாரிப்பாளர்களும் சுற்றி வளைத்து கொண்டார்கள்.. அவர்களிடம் அட்வான்ஸை வாங்கி போட்டுக் கொண்டேயிருந்தார் அப்பாஸ்.. இப்படி 23 படங்களில் ஒட்டுமொத்தமாக கமிட் ஆகிவிட்டார்.. அதில் 2 படங்கள் வெளியானதுமே, அந்த 2 படமும் பிளாப் ஆகிவிட்டது. ஆரம்பத்தில், ஒரே வாரத்தில் டிரெண்டானவர், இதற்கு பிறகு திடீரென காணாமல் போய்விட்டார்.
இதற்கு 2 காரணங்களை சொல்லலாம். பால் பவுடர் போல, நிறைய பவுடர் பூசியதுபோல, அப்பாஸின் முகம் உள்ளது.. ஆனால், மொழுமொழு முகம் மட்டுமே இங்குதேவைப்படுவதில்லை.. ரியாக்ஷன் காட்டப்பட வேண்டும்.. அழகாக இருப்பது ஹீரோயின்களுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் மார்க்கெட் இல்லாவிட்டால், அதுவும் கிடையாது.. இப்போ கீர்த்தி சுரேஷூக்கு படங்களே இல்லையாம்.
சில பயிர்கள் தானாக வளரும்
வெறும் அழகை மட்டுமே வைத்து, அப்பாஸால் சினிமாவில் நீடிக்க முடியாது.. இதுபோன்றவர்கள் கமல், ரஜினி போல 50, 60 வருடங்கள் நீடிக்க மாட்டார்கள்.. மழை பெய்தால் சில பயிர்கள் தானாகவே வளரும். அதுபோலதான் அப்பாஸும் சீசன் ஆர்டிஸ்ட்.
இதற்கு பிறகு டிவி விளம்பரங்களில் நடித்தார்.. அப்பாஸ் ஏன் பாத்ரூம் விளம்பரத்தில் நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள்.. காலம் வர வர எல்லாமே மாறும்.. இப்போது அப்பாஸ் வெளிநாட்டில், பெட்ரோல் பங்க், பைக் மெக்கானிக்காக பணிபுரிவதாக தெரிகிறது. சினிமாவையே நம்பி ஏமாந்து மனம் சோர்ந்து போகாமல், தன் குடும்பத்தை காப்பாற்ற இதுபோன்ற வேலைகளில் இறங்கியிருப்பது நல்ல விஷயம்.. அப்பாஸ் தன்னுடைய குடும்பத்துடன் நல்ல இருப்பதற்கு வாழ்த்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஓவர்நைட்டில் காலி
சமீபத்தில், NewsGlitz Tamil சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, அப்பாஸ் பற்றி பேசும்போது, "நல்ல நபர்களை, மேனேஜர்களை, உடன் வைத்து கொள்ள வேண்டும். இப்படித்தான் அப்பாஷூக்கு ஜீன்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது..
ஆனால், அவரது மேனேஜர், "20க்கும் மேற்பட்ட படங்களில் அப்பாஸ் நடித்து வருகிறார்.. 3 வருஷத்துக்கு அவர் பிஸி.. கால்ஷீட் கிடைக்காது" என்று, சொல்லிவிட்டார்கள். காதலுக்கு மரியாதை படத்தை அப்பாஸ் வைத்துதான் எடுக்க நினைத்தார் பாசில்.. ஆனால் அதற்கும் கால்ஷீட் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள.
"என் வீழ்ச்சிக்கு என்னுடைய மேனேஜரும் ஒரு காரணம்" என்று அப்பாஸே ஒருமுறை சொல்லியிருந்தார். 2 படங்கள் தோல்வி அடைந்ததும், மற்ற தயாரிப்பாளர்கள் தாங்கள் தந்த அட்வான்ஸை திருப்பி வாங்கி கொண்டனர். இதனால் ஓவர்நைட்டில் ஜீரோவாகிவிட்டார்..
அத்துடன் மக்களிடம் அப்பாஸால் கனெக்ட் ஆக முடியாததற்கு காரணம், வடமாநில முகம் போல, சேட்டு பையன்போல அவரது முகம் அன்னியப்பட்டு இருந்தது.. விஜயகாந்த், ரஜினியை இங்கு கொண்டாட காரணமே அவர்களது கருப்புதான்.
அப்பாஸை காலி செய்த நடிகர்
செலிபிரிட்டி கிரிக்கெட்டில் அப்பாஸுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 2 முறை சிசிஎல் போட்டியில் பங்கேற்றார்.. அதற்கு பிறகு, ஒரு நடிகருக்கு அப்பாஸ் மீது பொறாமை வந்தது..
மறைமுகமாகவும், நேரடியாகவும் அப்பாஸை காயப்படுத்தினார்.. "வெளியே போ" என்று வெறுப்பேற்றினார்.. அந்த நடிகர் உயரமானவர்.. இப்பவும் தமிழில் நடிச்சிட்டு இருக்கிறார்.. புரட்சி என்று டைட்டிலில் சேர்த்து கொள்பவர். அதற்கு பிறகு நொந்து நூலாகிதான் சினிமாவை விட்டு வெளியேறினார் அப்பாஸ்" என்று கூறியிருந்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications